Agriculture · dormant

TANFED fertilizer support

1 budget named it 1 year span 150 ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and not named in any budget since.

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2015-16 Rs.150 crores continuation AIADMK

“A sum of Rs.150 crores is being provided to TANFED in this Budget to ensure the timely availability of fertilizers to the farmers.”
“வேளாண்‌ உற்பத்தியை உயர்த்துவதற்குத்‌ தரமுள்ள விதைகள்‌, உரங்கள்‌ போன்ற வேளாண்‌ இடுபொருட்கள்‌ சரியான நேரத்தில்‌, நியாயமான விலையில்‌ கிடைப்பது இன்றியமையாததாகும்‌. விவசாயிகளுக்குத்‌ தரமான விதைகள்‌ தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, தொடக்க நிதியுதவியாக 25 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டுடன்‌ தமிழ்நாடு விதைகள்‌ மேம்பாட்டு முகமை (Tamil Nadu Seed Development Agency) என்ற புதிய அமைப்பை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோட்டப்பயிர்களுக்கான தரமுள்ள விதைகள்‌ மற்றும்‌ இடுபொருட்களை தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை (Tamil Nadu Horticulture Development Agency) தொடர்ந்து வழங்கும்‌. உரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (TANFED) இந்த அரசு வட்டியில்லாக்‌ கடன்‌ வழங்கி வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 576.60 கோடி ரூபாய்‌ மதிப்பிலான 4.69 இலட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ உரங்களை கூட்டுறவு அமைப்புகள்‌ விநியோகம்‌ செய்துள்ளன. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில்‌ உரங்கள்‌ கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.18 · ¶26 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector