Energy · dormant

TANGEDCO/TANTRANSCO restructuring study

1 budget named it 1 year span ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2021-22 policy DMK · revised

“Under the ADB assisted Chennai Kanyakumari Industrial Corridor (CKIC) Power Sector Investment Project, a strategic study of TANGEDCO and TANTRANSCO‟s governance and financial restructuring will be undertaken.”
“தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ சிக்கலான நிதி நிலையினை வெள்ளை அறிக்கை மூலமாக மாண்புமிகு உறுப்பினர்கள்‌ அறிவார்கள்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி கழகம்‌ சந்திக்கும்‌ பெரும்‌ நிதி இழப்புகள்‌ முற்றிலும்‌ நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ உதவியுடன்‌ செயல்படுத்தப்படவுள்ள சென்னை-கன்னியாகுமரி தொழில்‌ பெருவழித்தடம்‌ மின்துறை முதலீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ மின்‌ பகிர்மானக்‌ கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகம்‌ ஆகிய நிறுவனங்களின்‌ நிதி மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும்‌. அந்த அறிக்கையின்‌ மீது அரசு விரைந்து செயல்பட்டு மின்‌ வாரியத்தின்‌ கழக நிறுவனங்கள்‌ நொடிந்து போவதிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்‌, செலவினங்களைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்‌ உருவாக்கப்பட்டு விநியோக மட்டத்தில்‌ ஒருங்கிணைக்கப்படும்‌. மேலும்‌, ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும்‌ வணிக இழப்புகளைக்‌ குறைக்கும்‌ வகையில்‌ விநியோக அமைப்பு பலப்படுத்தப்படும்‌. விலைப்பட்டியல்‌ இடுதல்‌ மேம்படுத்தப்பட்டு, மின்‌ சேமிப்பு ஊக்குவிக்கப்படும்‌, பல்வேறு இத்தகைய கூட்டு நடவடிக்கைகளின்‌ வாயிலாக, இந்த அரசு, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மின்‌ தொடரமைப்புக்‌ கழகத்தின்‌ நிதிநிலையை மீட்டெடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶96) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.43 · ¶96 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector