Environment · completed claimed
Tree sapling planting programme
First announced in 2012-13 and named again in 5 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Environment projects →
What each budget said, year by year
2012-13 Rs.29.44 crores
“this Government has launched a massive programme for planting 64 lakh tree saplings at a cost of Rs.29.44 crores coinciding with the birthday of the Hon'ble Chief Minister.”
“நமது மாநிலத்தில், அருகிவரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும், வனப் பரப்பும் அதிகரித்து வருகின்றன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியோடு தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தை 686 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த இந்த அரசால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், வனங்களை பாதுகாத்தல், பழங்குடியினர் மற்றும் காடுகளையொட்டி இருக்கும் பகுதிகளில் வசிப்போரின் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் வாயிலாக பல்லுயிரினங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். வரும் நிதியாண்டில், இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, 29.44 கோடி ரூபாய் செலவில் 64 லட்சம் மரக் கன்றுகளை நடும் பெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 32.9 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இது தவிர, வரும் நிதியாண்டில், 10,000 ஏக்கர் பரப்பிலான ஏரிப் பகுதிகளில் 9.80 கோடி ரூபாய் செலவில் வனத்துறை மரங்களை நட்டு பராமரிக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.32 · ¶49 · source PDF ↗ · on the map →
2013-14
“During 2012-2013, this noble initiative has been implemented at a cost of Rs.43.55 crores. We will continue this scheme in 2013-2014 also, by planting 65 lakh tree saplings.” financedept_2013-14_speech_en · p.26 · ¶63 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.53.72 crores
“This year, the Government has accorded sanction to take up planting of another 67 lakh saplings with an outlay of Rs.53.72 crores.”
“மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், காடு வளர்ப்புப் பணிகளில் சமுதாயத்தின் பங்களிப்பை உறுதி செய்யவும், ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் 'தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்”, நபார்டு கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுத் திட்டம்”, மரம் நடும் மாபெரும் திட்டம், தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம் 115.91 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது. 2015-2016 ஆம் ஆண்டில் 122.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நீர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 96.50 கோடி ரூபாய் நபார்டு வங்கி நிதியுதவி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மரம் நடும் மாபெரும் திட்டத்தின் கீழ் 122.17 கோடி ரூபாய் செலவில் 195 இலட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டும், 53.72 கோடி ரூபாய் செலவில் 67 இலட்சம் மரக் கன்றுகள் நடுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வனப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக பதின்மூன்றாவது நிதி ஆணையம் வழங்கிய 142.48 கோடி ரூபாய் மானியத்தையும் இந்த அரசு முறையாகப் பயன்படுத்தியுள்ளது. விலங்குகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 51.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.50 கிலோ மீட்டர் நீளமுள்ள சூரிய ஒளி மின் வேலிகளும், 168.19 கிலோ மீட்டர் நீளமுள்ள யானை புகா அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.27 · ¶42 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.175.89 crores
“Reflecting this theme in action, 2.62 crore trees at a cost of Rs.175.89 crores have been planted in the last four years on the occasions of the birthday of the Hon’ble Chief Minister and planting of another 68 lakh saplings at a cost of Rs.61.68 crores is being taken up.”
“சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென ஒரு முக்கிய இடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எப்பொழுதும் வழங்கி வருகிறார்கள். இதனை நடைமுறையில் செயல்படுத்த, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளன்று ஒரு சிறப்புத் திட்டமாக, கடந்த நான்கு ஆண்டுகளில், 175.89 கோடி ரூபாய் செலவில் 2.62 கோடி மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், 61.68 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 68 இலட்சம் மரக் கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இத்துடன், சதுப்புநிலப் பகுதிகளின் சுற்றுச் சூழல் தன்மையை மீட்டெடுக்கும் பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. நகர்ப்புரங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைக்கும் முயற்சியில், சேத்துப்பட்டில் உள்ள ஏரியைப் புனரமைத்தது இந்த அரசு கண்ட மாபெரும் வெற்றியாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் மாதவரம், அம்பத்தூர், கொரட்டூர் ஏரிகளைச் சீரமைத்து, சதுப்புநில சுற்றுச் சூழல் மீட்டெடுப்புப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.23 · ¶32 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.21.43 crore
“Under this scheme, the Government will take up tree plantation in 7,000 acres in degraded forest areas to rejuvenate tree cover and convert them into dense forests as part of the Massive Tree Plantation Programme. This project will be taken up at a cost of Rs.21.43 crore in 2018-2019.”
“பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் வனங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக, 686 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நடவடிக்கைகளை, தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தின்” கீழ் அரசு எடுத்து வருகிறது. இத்திட்டத்திற்காக இதுவரை 469.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 86.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாள் நினைவாக, பாரதப் பிரதமர் அவர்களால் 24.02.2018 அன்று மரம் நடும் மாபெரும் விழா தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மர அடர்த்தி குறைவாக உள்ள காப்புக் காடுகளின் பகுதிகளைப் புதுப்பித்து, அப்பகுதிகளை அடர்ந்த காடுகளாக மாற்ற, 7,000 ஏக்கர் பரப்பளவில் மரம் நடும் பணிகள் 21.43 கோடி ரூபாய் செலவில் வரும் நிதியாண்டில் இந்த அரசால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGS), அரசு பொது நிலங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் மரம் நடும் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.29 · ¶43 · source PDF ↗ · on the map →
2021-22
“The Forest Department has implemented the Massive Tree Planting Programme since 2011-12 with the aim of increasing green cover and to mitigate the adverse effects of environmental pollution. Under this scheme, including the 72 lakh seedlings being planted in the current year, 6.12 crore seedlings would have been planted on public and private lands and in degraded forest areas.” tnbudget_2021-22_speech_en_interim · p.39 · ¶59 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Biodiversity Conservation and Greening Project · 8 years
- Pallikaranai marsh land restoration · 6 years
- Adyar estuary ecological restoration · 5 years
- Environment Protection Fund · 4 years
- Human–animal conflict mitigation programme · 3 years
- Blue Flag beaches upgrade · 3 years