Culture & tourism · completed claimed

World Tamil Sangam master complex

3 budgets named it 6 year span 37 ₹ crore allocated 37 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2021-22. Places named: Madurai.

Allocated by budget year

Located at Madurai · Madurai district

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2016-17 Rs.37.25 crores completion claim project cost AIADMK · interim

“A master complex for World Tamil Sangam, Madurai, has been constructed at an estimated cost of Rs.37.25 crores reflecting the ancient architecture of the Tamils.”
“தமிழ்மொழி வளர்ச்சிக்கென்‌ ஒரு தனிப்‌ பெரும்‌ முக்கியத்துவத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எப்பொழுதும்‌ அளித்துள்ளார்கள்‌. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, இத்துறைக்காக 175 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல்‌ அளித்ததன்‌ மூலம்‌ இது தெளிவாகிறது. தஞ்சாவூர்‌ தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தில்‌ புதிய கட்டடங்கள்‌ மற்றும்‌ கல்விசார்‌ திட்டங்கள்‌, சென்னையிலுள்ள உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ புதிய நிர்வாகக்‌ கட்டடம்‌ மற்றும்‌ பழந்தமிழர்‌ வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும்‌ கலைக்கூடம்‌, மதுரையில்‌ சங்ககாலக்‌ கலைகளுக்கான அருங்காட்சியகம்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தொல்காப்பியர்‌ அமர்வு ஆகிய முயற்சிகளுக்கு, மொத்தம்‌ 90.04 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. பழந்தமிழரின்‌ கட்டடக்‌ கலையை பிரதிபலிக்கும்‌ வகையில்‌, 37.25 கோடி ரூபாய்‌ செலவில்‌ மதுரையிலுள்ள உலகத்‌ தமிழ்ச்‌ சங்கத்திற்கு ஒரு மாபெரும்‌ வளாகம்‌ அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில்‌ இணையதளம்‌ மூலமாக தகவல்களை தமிழ்‌ இணையக்‌ கல்விக்‌ கழகம்‌ அளித்து வருகிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 32.74 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாமகம்‌ திருவிழா” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.9 · ¶12 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.37 crore new project AIADMK

“It has also sanctioned Rs.37 crore to construct a Master Plan Complex building for the World Tamil Sangam, Madurai.”
“பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ தொடங்கப்பட்ட உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி நிறுவனத்தில்‌ தமிழ்‌ ஆராய்ச்சிப்‌ பணிகளுக்கு உள்ள வசதிகளை 4.36 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ இந்த அரசு மேம்படுத்தி உள்ளது. மேலும்‌, மதுரையிலுள்ள, உலகத்‌ தமிழ்ச்‌ சங்கத்தில்‌ பெருந்திட்ட வளாகம்‌ கட்டுவதற்காக 37 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின்‌ உயரிய கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாற்றும்‌ விதமாக, இத்தமிழ்ச்‌ சங்கத்தில்‌ 'தமிழர்‌ கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகத்தை' இந்த அரசு நிறுவும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்திற்காக 6 கோடி ரூபாய்‌ உட்பட, தமிழ்‌ வளர்ச்சித்‌ துறைக்காக 48 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டம்‌ ஒழுங்கு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶15) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.11 · ¶15 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.37.25 crore completion claim project cost AIADMK · interim

“A Master Plan Complex of 87,300 sq. ft. at a cost of Rs.37.25 crore has been constructed for the World Tamil Sangam, Madurai.”
“தமிழ்நாடு பாரம்பரியம்மிக்க பண்பாட்டைக்‌ கொண்டிருப்பதுடன்‌, தமிழ்‌ மொழியானது உலகில்‌ மிகத்‌ தொன்மை வாய்ந்த மொழியாகவும்‌ திகழ்கிறது. தமிழ்‌ மொழி மற்றும்‌ பண்பாட்டின்‌ பெருமையைப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌ இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்‌ பண்பாட்டைப்‌ போற்றும்‌ விதமாக, இந்த ஆண்டு முதல்‌, தைப்பூசம்‌ திருநாள்‌ பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்‌ அறிஞர்கள்‌ மற்றும்‌ தமிழ்‌ மொழியின்‌ மாண்பிற்காகப்‌ போராடியவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு செய்யப்படுவதுடன்‌, அவர்களுக்கு மாதாந்திர உதவித்‌ தொகையும்‌ உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்‌ அறிஞர்களுக்கான உதவித்தொகையை 497 நபர்கள்‌ பெற்று வருவதுடன்‌, தமிழ்மொழி பேசும்‌ பகுதிகளை தமிழ்நாட்டுடன்‌ இணைக்கப்‌ போராடிய 137 எல்லை வீரர்களும்‌ உதவித்‌ தொகையைப்‌ பெற்று வருகின்றனர்‌. தமிழ்‌ அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்‌ மொத்தமாக 78 விருதுகள்‌ வழங்கப்படுவதுடன்‌, தற்போது, அருட்பெருஞ்சோதி வள்ளலார்‌ விருது மற்றும்‌ காரைக்கால்‌ அம்மையார்‌ விருது ஆகிய இரண்டு புதிய விருதுகள்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மதுரையிலுள்ள உலகத்‌ தமிழ்ச்‌ சங்கத்திற்காக, 87,300 சதுர அடி பரப்பளவில்‌ 37.25 கோடி ரூபாய்‌ செலவில்‌ பெருந்திட்ட வளாகம்‌ கட்டப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுத்‌ தொகுப்பு மானியமானது 5.98 கோடி ரூபாயிலிருந்து 24.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஹூஸ்டன்‌ பல்கலைக்கழகத்தைப்‌ போன்றே, கனடாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்‌ கழகத்திலும்‌ தமிழ்‌ இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வருவாய்‌ நிர்வாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.18 · ¶25 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector