Agriculture · completed claimed
Animal Husbandry extension infrastructure
First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2011-12 ` 122.24 crores
“` 122.24 crores will be spent during 2011-2012, to strengthen the extension infrastructure under NABARD – RIDF funds.”
“கால்நடைப் பராமரிப்புத் துறையில் விரிவாக்க வசதிகளை வலுப்படுத்த தற்போதுள்ள உதவி இயக்குநர்களின் எண்ணிக்கை 65 லிருந்து 76 ஆக உயர்த்தப்படும் இதன் மூலம் ஒரு வருவாய் கோட்டத்திற்கு ஒரு உதவி இயக்குநர் என்ற நிலை உருவாக்கப்படும். கால்நடை மருத்துவச் சேவையை மேம்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் 385 கால்நடை துணை மையங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். விரிவாக்க வசதிகளை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 122.24 கோடி ரூபாய் செலவிடப்படும். இதனால் செயற்கை முறை கருவூட்டல், நோய் தடுப்பு, கால்நடை, தீவன மேலாண்மை போன்ற சேவைகள் பரவலாக கிடைக்கவும் அதன்மூலம் கால்நடைகளின் கன்று ஈனும் விகிதம் அதிகரிப்பதுடன், மலட்டுத்தன்மை குறையவும் வாய்ப்பு ஏற்படும். தற்போது சென்னையிலும், நாமக்கல்லிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. திருநெல்வேலியில் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி விரைவில் செயல்படத் தொடங்கும். இது தென் மாவட்டங்களில் வாழும் வேளாண் பெருமக்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன். இதுபோலவே, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி நடப்பாண்டில் தொடங்கப்படும். மேலும், உலகத் தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை மையம் ஒன்று ஓசூரில் ஏற்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.21 · ¶32 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.122 crores
“funds to the extent of Rs.122 crores have been sanctioned through NABARD-RIDF for strengthening the extension infrastructure across the State.”
“மாநிலத்தில் உள்ள கால்நடைத் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்பொருட்டு, பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில், 585 கால்நடை துணை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, நபார்டு கடன் உதவியின் மூலமாக மாநிலமெங்கும் உள்ள கால்நடை விரிவாக்கக் கட்டமைப்பை வலுப்படுத்த 122 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. 2011-2012 ஆம் ஆண்டில், தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகளிலும், சிகிச்சை மையக் கட்டடங்களிலும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்பு ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. 2012-2013 ஆம் ஆண்டில் தேவைப்படும் இடங்களில் மேலும் 20 புதிய கால்நடை மருந்தகங்கள் மற்றும் 50 கால்நடை துணை மையங்கள் தொடங்கப்படும். கால்நடைப் பாராமரிப்புத் துறைக்கு 2010-2011 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் காட்டிலும் இருமடங்காக உயர்த்தி 2012-2013 ஆம் ஆண்டில் 814.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மீன் வளம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.26 · ¶40 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.235 crores
“With a view to ushering in a second white revolution, this Government has sanctioned Rs.235 crores for strengthening veterinary infrastructure.” financedept_2013-14_speech_en · p.20 · ¶45 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.80.05 crore
“In the coming financial year, 100 veterinary sub-centres will be upgraded to Veterinary Dispensaries particularly in backward districts and 227 new buildings will be constructed at a cost of Rs.80.05 crore with NABARD assistance.”
“கால்நடைப் பராமரிப்புத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. வரும் நிதியாண்டில் 100 கால்நடை துணை மையங்கள், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படும். நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 80.05 கோடி ரூபாய் செலவில் 227 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.18 · ¶32 · source PDF ↗ · on the map →
2015-16
“In the coming financial year, 25 sub-centres will be upgraded as veterinary dispensaries in needy places.”
“இந்த அரசால் கால்நடைத்துறை கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நபார்டு வங்கி உதவியுடன் 282.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, 785 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 100 கால்நடை கிளை நிலையங்களும், 20 கால்நடை மருந்தகங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 25 கால்நடை கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.21 · ¶32 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.422.37 crores
“In order to strengthen and upgrade veterinary infrastructure, this Government has established 200 new Sub-Centres, 20 new Veterinary Dispensaries, besides upgrading 810 Sub-Centres into Veterinary Dispensaries since 2011-2012 at a cost of Rs.422.37 crores.”
“கால்நடை மருத்துவத் துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 422.37 கோடி ரூபாய் செலவில் 200 புதிய துணை மையங்களையும், 20 புதிய கால்நடை மருந்தகங்களையும் அமைத்ததோடு, 810 துணை மையங்களை கால்நடை மருத்துவமனைகளாக இந்த அரசு தரம் உயர்த்தியுள்ளது. ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும், ஒசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியையும் இந்த அரசு தொடங்கியுள்ளது. கால்நடைத் துறைக்கு, 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், 1437.25 கோடி ரூபாயாக இருந்த வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டினை, முன்பு எப்போதும் இல்லாத அளவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், மூன்று மடங்கிற்கு மேல் உயர்த்தி, 4,826.67 கோடி ரூபாயாக இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோன்று, கடந்த ஐந்து ஆண்டுகளில், பால்வளத் துறைக்கு 643.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறைக்காக 1188.88 கோடி ரூபாயும், பால்வளத் துறைக்காக 119.62 கோடி ரூபாயும் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனளம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.21 · ¶28 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.90.27 crores
“During 2016-2017, this Government will upgrade 100 sub-centres into veterinary dispensaries with necessary building infrastructure. In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.90.27 crores has been provided to strengthen the veterinary infrastructure with NABARD assistance.” tnbudget_2016-17_speech_en_revised · p.24 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years
- Poultry promotion in non-traditional areas · 6 years
- Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) · 6 years