IT & governance · announced once

Anywhere Registration and paperless, presence-less document registration

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“Necessary amendments to Act and Rules, aligned with Supreme Court rulings and best practices across leading States, will be enacted to this end. 'Anywhere Registration' will be a cornerstone of this reform, allowing citizens to register documents from the convenience of their homes. In a phased manner, the Registration Department will transition to a completely paperless and presence-less registration mode, using advanced digital authentication without compromising the legal security or authenticity of any transaction.”
“பொது ஆவணக்‌ காப்பகமாகப்‌ பதிவுத்துறை ஆற்றும்‌ முக்கியப்‌ பணியினை கருத்திற்கொண்டு ஆவணங்களைத்‌ தடையின்றியும்‌, எளிமையாகவும்‌ பதிவு மேற்கொள்வதை உறுதி செய்யும்‌ வகையில்‌ அரசு சிறப்பான சீர்திருத்தங்களை முன்னெடுப்பு செய்துள்ளது. பொதுமக்களின்‌ வசதிக்காக மின்‌-புத்தாக்கத்தை (digital innovation) முன்னிறுத்தி சொத்துப்‌ பதிவை எளிதாகவும்‌, ஊழலற்றதாகவும்‌ மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. நிலம்‌ வாங்கும்‌ பொதுமக்களை மோசடிப்‌ பதிவுகளிலிருந்து பாதுகாப்பது அரசின்‌ தலையாய கடமையாகும்‌. இதற்கென உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்புகள்‌ மற்றும்‌ முன்னணி மாநிலங்களில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தேவையான சட்டத்‌ திருத்தங்கள்‌ மற்றும்‌ விதிகள்‌ இயற்றப்படும்‌. மேலும்‌, எங்கிருந்தும்‌ பதிவு: இந்த அரசின்‌ முக்கிய இலக்காக அமையும்‌. இதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ இருப்பிடங்களில்‌ இருந்தபடியே ஆவணங்களை பதிவு செய்ய இயலும்‌. அசையா டசாத்து பரிவர்த்தனைகளுக்கான சட்டப்பூர்வப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நம்பகத்தன்மையில்‌ எந்தவித பாதிப்பும்‌ இன்றி, மேம்பட்ட மின்‌ ஆளுகை டுதாழில்நுட்ப முறையைப்‌ பயன்படுத்தி. முற்றிலும்‌ காகிதமில்லா மற்றும்‌ நேரடி வருகையற்ற பதிவு முறை படிப்படியாக நடைமுறைப்‌ படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶157) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.75 · ¶157 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector