Urban · dormant

Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)

6 budgets named it 6 year span 10,766 ₹ crore allocated 11,441 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 5 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2016-17 Rs.3,316.22 crores continuation AIADMK · interim

“In addition, works worth Rs.3,316.22 crores have also been approved under the ‘Atal Mission for Rejuvenation and Urban Transformation’ (AMRUT) in Urban Local Bodies.”
“திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்தின்‌ கீழ்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை இம்மாமன்றத்திற்குத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்துடன்‌, “QI Lov நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றங்களுக்கான திட்டத்தின்‌” (AMRUT) கீழ்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.41 · ¶62 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.500 crores continuation AIADMK · revised

“In this Revised Budget 2016-2017, a sum of Rs.400 crores has been provided for Smart Cities Programme and Rs.500 crores for AMRUT scheme.”
“திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌” (Smart Cities) &p, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகரங்கள்‌ ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்‌ மூலம்‌ ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த மாநகராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும்‌ மத்திய அரசிடமிருந்து தலா 100 கோடி ரூபாய்‌ நிதியுதவி கிடைக்கப்‌ பெறும்‌. இதற்குச்‌ சமமான நிதியை மாநில அரசு தன்‌ பங்காக வழங்கும்‌. *அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்‌” (Atal Mission for Rejuvenation and Urban Transformation) &1p, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 32 நகரங்களில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 3,834.49 கோடி ரூபாய்‌ மதிப்பிலான திட்டங்களைச்‌ செயல்படுத்த நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும்‌, அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.47 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,400 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.1,200 crore and Rs.1,400 crore have been allocated for the Smart Cities Mission and AMRUT scheme respectively.”
“மாநிலத்தின்‌ மொத்த மக்கள்‌ தொகையில்‌ 48.40 சதவீதம்‌ நகர்ப்புரங்களில்‌ வசித்து வருகின்றனர்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ “திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌” (Smart Cities Mission) கீழ்‌ மதுரை, சேலம்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாநகராட்சிகள்‌ சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிகள்‌ ஏற்கெனவே சேர்க்கப்பட்டு, அவற்றிற்கான சிறப்பு நோக்கு நிறுவனங்கள்‌ உருவாக்கப்பட்டு, திட்டப்‌ பணிகள்‌ தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌” கீழ்‌ 772 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்‌ (AMRUT) கீழ்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 3,834.49 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌ 27 நகரங்களில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கம்‌ மற்றும்‌ அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டங்களுக்காக முறையே, 1200 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 1400 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம்‌” (Integrated Urban Development Mission) மற்றும்‌ “சென்னைப்‌ பெருநகர மேம்பாட்டு இயக்கம்‌” (Chennai Mega City Development Mission) ஆகிய திட்டங்களின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளை நிறைவு செய்ய, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ முறையே 386 கோடி ரூபாயும்‌, 400 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.49 · ¶87 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,200 crore continuation AIADMK

“An amount of Rs.1,200 crore has been allocated for the AMRUT scheme in this Budget.”
“அம்ருத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 28 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 28 நகரங்களில்‌ 428 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப்‌ பணிகள்‌ 11,498.41 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ள ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின்‌ பங்கு உட்பட மொத்தம்‌ 1,468.28 கோடி ரூபாய்‌ உள்ளாட்சி அமைப்புகளுக்கு இத்திட்டத்தில்‌ விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1200 கோடி ரூபாய்‌ அம்ருத்‌ திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.49 · ¶80 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,450 crore continuation AIADMK

“In the Budget Estimates 2019-2020, Rs.1,450 crore has been allocated for AMRUT scheme and Rs.302 crore is provided for TNUFIP.”
“திறன்மிகு நகரங்கள்‌ மற்றும்‌ அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றங்களுக்கான (அம்ருத்‌) திட்டங்களை தமிழ்நாடு செம்மையாகச்‌ செயல்படுத்தி வருகிறது. திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்தின்‌ கீழ்‌, 11776 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 326 திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌, இத்திட்டத்திற்காக 1650 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ருத்‌ திட்டத்தில்‌ 445 பணிகள்‌ 11,441.32 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்‌ 8,155.81 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத்‌ திட்ட நிதியிலிருந்து அம்ருத்‌ திட்டத்திற்குத்‌ தேவைப்படும்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்குத்‌ தொகை வழங்கப்படுகிறது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும்‌, “தமிழ்நாடு நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத்‌ திட்டத்திற்காக” 302 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 750 கோடி ரூபாயும்‌, சென்னைப்‌ பெருநகர வளர்ச்சி இயக்கத்திற்காக 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.34 · ¶57 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.1,450 crore continuation AIADMK

“A sum of Rs.1,650 crore has been provided in the Budget Estimates for the Smart Cities Mission and Rs.1,450 crore for AMRUT.”
“திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 11,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 413 திட்டங்கள்‌ 11 மாநகராட்சிகளில்‌ செயல்படுத்துவதற்கான பணிகள்‌ இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அம்ருத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 445 திட்டங்கள்‌ 28 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ 11441.32 கோடி ரூபாய்‌ செலவில்‌ எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, 'திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்திற்காக 1,650 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.46 · ¶81 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.1,450 crore continuation AIADMK · interim

“Under the Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT), a total of 445 projects at a cost of Rs.11,441.32 crore have been taken up and 420 projects have been completed. In the Revised Estimates 2020-21, the provision for Smart Cities Mission has been stepped up to Rs.1,850 crore and for AMRUT Rs.1,450 crore. In the Interim Budget Estimates 2021-22, Rs.2,350 crore has been provided for Smart Cities Mission and Rs.1,450 crore for AMRUT.”
“தமிழ்நாடு வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில்‌, நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும்‌ அடிப்படை சேவைகளை வலுப்படுத்துவதற்கான முதலீடுகள்‌ அதிக முக்கியத்துவம்‌ வாய்ந்தது. சீர்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரையில்‌, 11,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 507 திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. அட்டல்‌ நகர்ப்புற புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டத்தின்‌ கீழ்‌ (அம்ருத்‌), 11441.32 கோடி ரூபாய்‌ செலவில்‌ 445 திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, அதில்‌ 420 திட்டங்கள்‌ நிறைவடைந்துள்ளன. 2020-21ஆம்‌ ஆண்டின்‌ திருத்த மதிப்பீடுகளில்‌, சீர்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்கான ஒதுக்கீடு 1,850 கோடி ரூபாயாகவும்‌, அம்ருத்‌ திட்டத்திற்கு 1450 கோடி ரூபாயாகவும்‌ அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சீர்மிகு நகரங்கள்‌ திட்ட இயக்கத்திற்கு 2,350 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.47 · ¶74 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector