Urban · completed claimed
Urban solid waste management projects
First announced in 2012-13 and named again in 6 later budgets, most recently 2025-26. Places named: Madurai, Coimbatore, Salem, Nāmakkal.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2012-13
“Solid waste management projects for scientific disposal of waste have been taken up in Madurai, Coimbatore, Salem Corporations and Namakkal Municipality in the Public Private Partnership (PPP) mode.”
“நகர்ப்புர திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும். மாநிலத்தின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் நாள்தோறும் 13,533 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அரசு-தனியார் ஒத்துழைப்பு (PPP) அடிப்படையில் மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளும், நாமக்கல் நகராட்சியும் விஞ்ஞான ரீதியிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதே அரசு-தனியார் ஒத்துழைப்பு அடிப்படையில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை திருநெல்வேலியில் செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. மக்கக்கூடிய மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே பிரித்து செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் படிப்படியாக செயல்முறைக்கு கொண்டுவரப்படும். ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை செயல் திட்டம் குறித்த கொள்கை ஒன்றினை அரசு விரைவில் அறிவிக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.65 · ¶101 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.100 crores
“As directed by our Hon’ble Chief Minister, a special Solid Waste Management Fund will be constituted with a sum of Rs.100 crores for financing projects in weak urban local bodies during 2013-2014.”
“நகர்ப்புரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை முக்கியச் சவாலாக உள்ளது. குப்பைக் கிடங்குகளில் போடப்படும் குப்பை அளவை குறைத்திடும் வகையில், கழிவினை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் இந்த அரசு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். சாத்தியக்கூறு உள்ள அனைத்து இடங்களிலும், கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் அமைக்கப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் 55 கோடி ரூபாய் செலவில், கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்திசெய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளவாறு, நிதித்திறன் வலுவாக இல்லாத நகராட்சிகளில் திடக்கழிவுத் திட்டப்பணிகளை செயல்படுத்த 2013-2014 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதி, 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.49 · ¶120 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.133 crore
“During 2014-2015 also, a sum of Rs.133 crore has been allocated for this Fund.”
“நிதித் திறன் வலுவாக இல்லாத நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள 2013-2014 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் அளவிலான சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியத்தின் மூலமாக, பேரூராட்சிகளில் 48.58 கோடி ரூபாய் செலவில் 77 பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும், இந்த நிதியத்திலிருந்து அளிக்கப்பட்ட 11 கோடி ரூபாய் மானியத்தோடு, திருநெல்வேலி மாநகராட்சியில் 54.49 கோடி ரூபாய் செலவில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்பின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் இந்த நிதியத்துக்காக 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.42 · ¶85 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.133.33 crores
“An amount of Rs.133.33 crores has been allocated in the Budget Estimates 2015-2016 for such works.”
“நிதிநிலை பலவீனமாக உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் சிறப்பு நிதியம் ஒன்று 2012-2013 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை 143.46 கோடி ரூபாய் செலவில் 93 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்தகைய மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்துவதற்காக 133.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.47 · ¶78 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.319.24 crores
“Under the specially constituted Solid Waste Management Fund, various projects have been taken up in 5 Municipal Corporations, 67 Municipalities and 291 Town Panchayats for a total amount of Rs.319.24 crores.”
“அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிக் காப்பதற்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை நிதியத்திலிருந்து, ஐந்து மாநகராட்சிகள், 67 நகராட்சிகள் மற்றும் 291 பேரூராட்சிகளில் 319.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தமிழ்நாட்டில் அறவே அகற்றும் நோக்குடன், பொதுக் கழிப்பறைகளை அமைப்பதற்கும், அவற்றை சிரமைப்பதற்கும் 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, இந்த அரசு 346.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற 185.74 கோடி ரூபாய் நிதியும், மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைக்கப்பட்டு நகர்ப்புரப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 12,194.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶64) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.42 · ¶64 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.833.22 crores
“At present, integrated Solid Waste Management projects are under implementation in 402 Urban Local Bodies at a cost of Rs.833.22 crores.”
“தற்போது, 402 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 833.22 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புரங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் ௫கர்ப்புரம்)” கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரங்களின் தூய்மையைப் பராமரிப்பதற்காக, 2016-2017 ஆம் ஆண்டுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதிக்கு, மாநில நிதிப் பகிர்வு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.51 · ¶103 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.100 crores
“Further, to improve the general cleanliness of cities, a sum of Rs.100 crores has been provided for the Solid Waste Management Fund under the State devolution grants for the year 2016-2017.”
“தற்போது, 402 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 833.22 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புரங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் ௫கர்ப்புரம்)” கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரங்களின் தூய்மையைப் பராமரிப்பதற்காக, 2016-2017 ஆம் ஆண்டுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதிக்கு, மாநில நிதிப் பகிர்வு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.51 · ¶103 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.969 crore
“Integrated solid waste management projects have been sanctioned for nine corporations, 107 municipalities and 400 town panchayats at a cost of Rs.969 crore.”
“நகர்ப்புரங்களிலும் கழிவறைகள் கட்டுவதற்கு இந்த அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 176 இலட்சம் தனிநபர் வீட்டுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 89,866 கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை தவிர, 1,540 பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 3,678 பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒன்பது மாநகராட்சிகள், 107 நகராட்சிகள் மற்றும் 400 பேரூராட்சிகளில் 969 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் திடக்கழிவுக் குப்பைகளைப் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. நகர்ப்புர தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான வீட்டுவசதி இயக்கம் 95 தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியை இணைத்து இந்த இலக்கை அடைய 2016-2017 ஆம் ஆண்டில் ஏழைகளுக்கான வீட்டுவசதி இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.53 · ¶94 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.3,450 crore
“Under the Integrated Solid Waste Management Project of the Greater Chennai Corporation, a Bio CNG plant, a composting plant, an Automatic Material Recovery Facility, a plant for generation of 21 MW of electricity from solid waste will be commenced in Kodungaiyur dump yard at an estimated life-cycle cost of Rs.3,450 crore.” financedept_2025-26_speech_en · p.17 · ¶34 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Clean Village Campaign (solid waste management) · 2013-14 –2016-17
- runs alongside Waste to Energy Plant, Tambaram · 2025-26
- part of Chennai solid waste management project · 2011-12
- runs alongside Nirmal Bharat Abhiyan (solid/waste water management) · 2013-14 –2014-15
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT) · 6 years