Urban · dormant

Smart Cities Scheme

8 budgets named it 8 year span 13,675 ₹ crore allocated 11,776 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2015-16 and named again in 7 later budgets, most recently 2022-23. Places named: Chennai, Coimbatore, Madurai, Salem, Thanjavur, Vellore, Erode, Tiruppur.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2015-16 Rs.400 crores new project AIADMK

“This Government, in anticipation of the Government of India's approval for inclusion of 12 Municipal Corporations of Tamil Nadu under the Smart Cities Scheme, has provided Rs.400 crores in the Budget Estimates 2015-2016.”
“தமிழ்நாட்டில்‌ உள்ள 12 மாநகராட்சிகளையும்‌ திறன்மிகு நகரங்கள்‌ (Smart 065) திட்டத்தில்‌ சேர்ப்பதற்கான மத்திய அரசின்‌ ஒப்புதலை எதிர்நோக்கி, இந்த அரசு 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, 400 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்‌, ஒரு இலட்சம்‌ மக்கள்தொகைக்கு மேல்‌ உள்ள அனைத்து நகரங்களிலும்‌ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள தேசிய நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நகரங்களின்‌ மேம்பாடு மற்றும்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, காஞ்சிபுரத்தையும்‌, வேளாங்கண்ணியையும்‌ சேர்த்துள்ளமைக்கு எங்களது நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. பாரம்பரிய நகர மேலாண்மைத்‌ திட்டங்களை வெற்றிகரமாகச்‌ செயல்படுத்துவதற்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 46 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.46 · ¶76 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.400 crores continuation AIADMK · interim

“A sum of Rs.400 crores for Smart Cities Programme and Rs.500 crores for AMRUT have been provided in the Interim Budget.”
“திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்தின்‌ கீழ்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை இம்மாமன்றத்திற்குத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இத்துடன்‌, “QI Lov நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றங்களுக்கான திட்டத்தின்‌” (AMRUT) கீழ்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.41 · ¶62 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.400 crores continuation AIADMK · revised

“In this Revised Budget 2016-2017, a sum of Rs.400 crores has been provided for Smart Cities Programme and Rs.500 crores for AMRUT scheme.”
“திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌” (Smart Cities) &p, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகரங்கள்‌ ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்‌ மூலம்‌ ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த மாநகராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும்‌ மத்திய அரசிடமிருந்து தலா 100 கோடி ரூபாய்‌ நிதியுதவி கிடைக்கப்‌ பெறும்‌. இதற்குச்‌ சமமான நிதியை மாநில அரசு தன்‌ பங்காக வழங்கும்‌. *அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்‌” (Atal Mission for Rejuvenation and Urban Transformation) &1p, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 32 நகரங்களில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 3,834.49 கோடி ரூபாய்‌ மதிப்பிலான திட்டங்களைச்‌ செயல்படுத்த நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும்‌, அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.47 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,200 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.1,200 crore and Rs.1,400 crore have been allocated for the Smart Cities Mission and AMRUT scheme respectively.”
“மாநிலத்தின்‌ மொத்த மக்கள்‌ தொகையில்‌ 48.40 சதவீதம்‌ நகர்ப்புரங்களில்‌ வசித்து வருகின்றனர்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ “திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌” (Smart Cities Mission) கீழ்‌ மதுரை, சேலம்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாநகராட்சிகள்‌ சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிகள்‌ ஏற்கெனவே சேர்க்கப்பட்டு, அவற்றிற்கான சிறப்பு நோக்கு நிறுவனங்கள்‌ உருவாக்கப்பட்டு, திட்டப்‌ பணிகள்‌ தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌” கீழ்‌ 772 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்‌ (AMRUT) கீழ்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 3,316.22 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 3,834.49 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான பணிகளும்‌ 27 நகரங்களில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கம்‌ மற்றும்‌ அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டங்களுக்காக முறையே, 1200 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 1400 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம்‌” (Integrated Urban Development Mission) மற்றும்‌ “சென்னைப்‌ பெருநகர மேம்பாட்டு இயக்கம்‌” (Chennai Mega City Development Mission) ஆகிய திட்டங்களின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளை நிறைவு செய்ய, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ முறையே 386 கோடி ரூபாயும்‌, 400 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.49 · ¶87 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,400 crore continuation AIADMK

“In the Budget Estimates, Rs.1,400 crore has been provided for the Smart Cities scheme.”
“மத்திய அரசின்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌” கீழ்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, ஈரோடு, திருப்பூர்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்கள்‌ சேர்க்கப்பட்டுள்ளன. இந்நகரங்களையும்‌ சேர்த்து, தற்போது தமிழ்நாட்டிலுள்ள 11 நகரங்கள்‌ இந்த திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்தின்‌ கீழ்‌ நிதியுதவி பெறுகின்றன. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 198 திட்டங்களுக்கு 15,213 கோடி ரூபாய்‌ ஒப்புதலளிக்கப்பட்டு 33 திட்டங்களுக்கான பணிகள்‌ செயல்பாட்டில்‌ உள்ளன. இத்திட்டத்திற்கு தனது பங்காக 828 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவித்துள்ளது. மாநில அரசும்‌ தனது பங்காக 840 கோடி ரூபாய்‌ நிதியினை இதுவரை விடுவித்துள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ திறன்மிகு நகரங்கள்‌ இயக்கத்திற்கு 1400 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.48 · ¶79 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,650 crore continuation AIADMK

“Under the Smart Cities Programme, 326 projects at a cost of Rs.11,776 crore have been sanctioned so far. A sum of Rs.1,650 crore has been provided for Smart Cities programme for the year 2019-2020.”
“திறன்மிகு நகரங்கள்‌ மற்றும்‌ அட்டல்‌ நகர்ப்புர புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புர மாற்றங்களுக்கான (அம்ருத்‌) திட்டங்களை தமிழ்நாடு செம்மையாகச்‌ செயல்படுத்தி வருகிறது. திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்தின்‌ கீழ்‌, 11776 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 326 திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌, இத்திட்டத்திற்காக 1650 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ருத்‌ திட்டத்தில்‌ 445 பணிகள்‌ 11,441.32 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன்‌ 8,155.81 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌ நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத்‌ திட்ட நிதியிலிருந்து அம்ருத்‌ திட்டத்திற்குத்‌ தேவைப்படும்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்குத்‌ தொகை வழங்கப்படுகிறது. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும்‌, “தமிழ்நாடு நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத்‌ திட்டத்திற்காக” 302 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 750 கோடி ரூபாயும்‌, சென்னைப்‌ பெருநகர வளர்ச்சி இயக்கத்திற்காக 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.34 · ¶57 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.1,650 crore continuation AIADMK

“A sum of Rs.1,650 crore has been provided in the Budget Estimates for the Smart Cities Mission and Rs.1,450 crore for AMRUT.”
“திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 11,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 413 திட்டங்கள்‌ 11 மாநகராட்சிகளில்‌ செயல்படுத்துவதற்கான பணிகள்‌ இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அம்ருத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 445 திட்டங்கள்‌ 28 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ 11441.32 கோடி ரூபாய்‌ செலவில்‌ எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, 'திறன்மிகு நகரங்கள்‌” திட்டத்திற்காக 1,650 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.46 · ¶81 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.2,350 crore continuation DMK · revised

“In the Budget Estimates for 2021-22, Rs.2,350 crore has been provided for the Smart Cities Mission and Rs.1,450 crore for AMRUT.”
“சீர்மிகு நகரங்கள்‌ திட்டம்‌ மற்றும்‌ அம்ருத்‌ திட்டத்தின்கீழ்‌, நிறைவு பெறாத திட்டங்கள்‌ அனைத்தும்‌ 31,3,2023- க்குள்‌ நிறைவு செய்யப்படும்‌, 2021-22-க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில்‌, சீர்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.34 · ¶76 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.2,350 crore continuation AIADMK · interim

“In the Interim Budget Estimates 2021-22, Rs.2,350 crore has been provided for Smart Cities Mission and Rs.1,450 crore for AMRUT.”
“தமிழ்நாடு வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில்‌, நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும்‌ அடிப்படை சேவைகளை வலுப்படுத்துவதற்கான முதலீடுகள்‌ அதிக முக்கியத்துவம்‌ வாய்ந்தது. சீர்மிகு நகரங்கள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரையில்‌, 11,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 507 திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. அட்டல்‌ நகர்ப்புற புத்துணர்வு மற்றும்‌ நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டத்தின்‌ கீழ்‌ (அம்ருத்‌), 11441.32 கோடி ரூபாய்‌ செலவில்‌ 445 திட்டங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, அதில்‌ 420 திட்டங்கள்‌ நிறைவடைந்துள்ளன. 2020-21ஆம்‌ ஆண்டின்‌ திருத்த மதிப்பீடுகளில்‌, சீர்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்கான ஒதுக்கீடு 1,850 கோடி ரூபாயாகவும்‌, அம்ருத்‌ திட்டத்திற்கு 1450 கோடி ரூபாயாகவும்‌ அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சீர்மிகு நகரங்கள்‌ திட்ட இயக்கத்திற்கு 2,350 கோடி ரூபாயும்‌, அம்ருத்‌ திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.47 · ¶74 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.1,875 crore continuation DMK

“Rs.1,875 crore has been allocated for the Smart Cities Programme in the Budget.”
“அண்மையில்‌ நகர்ப்புர உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ நடைபெற்று, புதிய மக்கள்‌ பிரதிநிதிகள்‌ பதவியேற்றுள்ளனர்‌. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின்‌ அடிப்படைத்‌ தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர்‌ நகர்ப்புர மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு 1000 கோடி ரூபாயும்‌, சிங்காரச்‌ சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும்‌, திறன்மிகு நகரங்கள்‌ திட்டத்திற்கு 1875 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.38 · ¶112 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector