Urban · completed claimed
Integrated Urban Development Mission
First announced in 2011-12 and named again in 9 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2011-12 ` 750 crores
“```` 750 crores for the Integrated Urban Development Mission in the Revised Budget Estimates.”
“உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-।। நிறைவு பெற உள்ளதால், நகர்ப்புரங்களில் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் நிதி மேலும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு சென்னைக்கும் அதன் புறநகர் பகுதிகளுக்குமென, சென்னை பெரு நகர் வளர்ச்சித் திட்டம் ஒன்றையும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கென ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் என இரண்டு சிறப்புத் திட்டங்களைத் தொடங்க உள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தவிர இத்திட்டத்தில் சிறப்பு நிதியாக திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்காக 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள திட்டங்கள் இப்புதிய திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தெருக்கள், குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு, வெள்ள நீர் வடிகால், திடக் கழிவு மேலாண்மை, பேருந்து நிறுத்த வசதிகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகள் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்திற்கும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூடுதல் நிதியாதாரங்கள் நகர்ப்புரங்களின் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்குமெனக் கருதுகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.66 · ¶111 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.750 crores
“Under IUDM, the Government had sanctioned Rs.750 crores to take up infrastructure development activities in urban local bodies, excluding Chennai. To continue this mission, we have allocated Rs.750 crores for the year 2012- 2013.”
“தமிழ்நாட்டில் 48.45 சதவீத மக்கள் நகர்ப்புரங்களில் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக நகர்மயமான மாநிலமாகும். மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்றாற்போல் நகர்ப்புரங்களில் அடிப்படை வசதிகள் மேம்படவில்லை. இந்த அடிப்படை வசதிகளின் குறைபாடுகளைக் களையும் வகையில் “ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்” (UDM) மற்றும் 'சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம்” (CMCDM) என்ற இரு பெரும் திட்டங்கள் இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித்திட்டத்தில், சென்னை தவிர இதர நகர்ப்புரப் பகுதிகளின் வசதிகளை மேம்படுத்த 750 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 2012-2013 ஆம் ஆண்டிலும் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்திற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் சென்னை மாநகராட்சி மூலம் 333.27 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்காக மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கென 2012-2013 ஆம் ஆண்டும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையினை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்பு திட்டம் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் ஒருமுறை சிறப்பு நிதி ஒதுக்கீடாக 250 கோடி ரூபாய் வழங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.64 · ¶100 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.750 crores
“In the Budget Estimates 2013-2014 also, Rs.500 crores has been provided for Chennai Mega City Development and Rs.750 crores for the Urban Development Mission.” financedept_2013-14_speech_en · p.49 · ¶118 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.750 crore
“In the Budget Estimates 2014-2015 also, Rs.500 crore has been allocated for the Chennai Mega City Development Mission and the Integrated Urban Development Mission has been allocated Rs.750 crore.”
“நகர்ப்புர பகுதிகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இரு சிறப்பு நோக்குத் திட்டங்கள் இந்த அரசின் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளாகும். சென்னைப் பெருநகர் மேம்பாட்டுத் திட்டமும், ஒருங்கிணைந்த நகர்புர வளர்ச்சித் திட்டமும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த இரு சிறப்பு நோக்குத் திட்டங்களுக்காக ஆண்டுதோறும் 1250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநில அரசு அளிக்கும் இந்த நிதியை பயன்படுத்தி, நிதி ஆதாரத்தை மேலும் திரட்டி முக்கிய கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இத்திட்டங்கள் உதவியுள்ளன. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திலும், சென்னை பெருநகர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.41 · ¶81 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.750 crores
“This Government has now allocated another Rs.500 crores and Rs.750 crores for the Chennai Mega City Development Mission and the Integrated Urban Development Mission respectively for the year 2015-2016.”
“விரைவான நகரமயமாதலால், மாறிவரும் மக்கள்தொகை பரவலுக்கு ஏற்ப நகர்ப்புரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பெரும் சவாலாக உள்ளது. இச்சவாலை சமாளிக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ், 1434.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1,084 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 862.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 74 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும், 1929.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3,304 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டில் சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 750 கோடி ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக தமிழ்நாடு நகர்ப்புரச் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டிற்கு 420.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.45 · ¶73 · source PDF ↗ · on the map →
2016-17
“the Integrated Urban Development Mission (IUDM) for all other Corporations, Municipalities and Town Panchayats”
“மாநிலத்தில் நகர்மயமாதலின் தாக்கத்தை உணர்ந்து நகர்ப்புரக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிக்கான “சென்னைப் பெருநகர் வளர்ச்சி இயக்கம்” இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கம்” போன்ற முன்னோடித் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், 6,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான 13,688 பணிகள் இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.41 · ¶61 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.886 crores
“An amount of Rs.886 crores is provided for IUDM and Rs.800 crores for CMCDM in the Revised Budget Estimates for various works including spill over works.” tnbudget_2016-17_speech_en_revised · p.46 · ¶93 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.386 crore
“Amounts of Rs.386 crore and Rs.400 crore have been provided separately to complete the spill over works under Integrated Urban Development Mission (IUDM) and Chennai Mega City Development Mission (CMCDM) respectively in the Budget Estimates 2017-2018.” tnbudget_2017-18_speech_en · p.49 · ¶87 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.750 crore
“this Government have decided to re-launch the 'Integrated Urban Development Mission' (IUDM) from 2018-2019 and Rs.750 crore is allocated in this Budget for this purpose.”
“மாநிலத்தில் நகர்மயமாதல் அதிகரித்து வருவதால், நகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளும், உட்கட்டமைப்பு வசதிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகளை வழங்குவதற்காகவும், சாலைகள், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற நகர்ப்புர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், 2018-2019 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கத்தை அரசு மீண்டும் செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், *அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின்” (AMRUT) கீழ், பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில், நகர்ப்புர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்தையும்” 2018-2019 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இந்த அரசு செயல்படுத்தும். இதற்கென வரவு-செலவுத் திட்டத்தில் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.48 · ¶78 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.750 crore
“A sum of Rs.750 crore has been allocated for IUDM and Rs.500 crore has been allocated for CMCDM.” tnbudget_2019-20_speech_en · p.34 · ¶57 · source PDF ↗ · on the map →
2020-21 USD 500 million
“An Integrated Urban Development Project for providing urban services and street improvements has been prepared and posed to the Asian Infrastructure Investment Bank for a loan assistance of USD 500 million. This project will provide sustainable transport infrastructure in the 10 Corporations other than Chennai selected under the Smart Cities Mission to enhance road safety and improve mobility including through non motorized transport.” financedept_2020-21_speech_en · p.47 · ¶84 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.750 crore
“In the Budget Estimates, Rs.750 crore has been provided for the Integrated Urban Development Mission (IUDM) and Rs.500 crore for Chennai Mega City Development Mission (CMCDM) and Rs.18,540.12 crore has been allocated for the Municipal Administration and Water Supply sector.”
“2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கத்திற்கு 750 கோடி ரூபாய், சென்னைப் பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு 500 கோடி ரூபாய் உட்பட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.48 · ¶85 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years
- Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT) · 6 years