Rural development · dormant

Clean Village Campaign (solid waste management)

4 budgets named it 4 year span 700 ₹ crore allocated 110 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2013-14 and named again in 3 later budgets, most recently 2016-17.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2013-14 Rs.150 crores continuation AIADMK

“A sum of Rs.150 crores will be earmarked within the devolution for putting up such facilities, including the cost of manpower for collecting and handling waste.”

financedept_2013-14_speech_en · p.46 · ¶111 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.200 crore continuation AIADMK

“A sum of Rs.200 crore is also being provided in the 2014-2015 Budget Estimates for solid waste management in the villages.”
“இந்த அரசின்‌ முன்னுரிமைகளில்‌ கிராமப்புறச்‌ சுகாதாரமும்‌ ஒன்றாகும்‌. 'தூய்மை பாரதம்‌' இயக்கத்தில்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 362.41 கோடி ரூபாய்‌ செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌, தனி நபர்க்‌ கழிப்பறைகளும்‌, சமுதாயக்‌ கழிப்பறைகளும்‌ கட்டும்‌ பணிகள்‌ ஊக்குவிக்கப்படுகின்றன. கிராமங்களைத்‌ தூய்மையாகவும்‌, பிளாஸ்டிக்‌ கழிவுகள்‌ இன்றியும்‌ பராமரிக்க, 'தூய்மை கிராமம்‌' திட்டத்தையும்‌ இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில்‌ திடக்‌ கழிவு மேலாண்மைக்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நகராட்சி நிருவாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.40 · ¶79 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.200 crores continuation AIADMK

“In the coming financial year, Rs.200 crores is being set apart again for rural solid waste management and Rs.200 crores is being provided for the Swachh Bharat Mission (Gramin) in rural areas.”
“அனைவரும்‌ எதிர்நோக்கியுள்ள கிராமப்புறத்‌ தூய்மை இந்தியா இயக்கத்தின்‌ கீழ்‌, மத்திய அரசு கணிசமான நிதியுதவி வழங்கும்‌ என நம்புகிறோம்‌. இந்த அரசு 'தூய்மை கிராமம்‌! இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதோடு கிராமப்புறங்களில்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகளைச்‌ செயல்படுத்த ஆண்டுக்கு 150 கோடி ரூபாய்‌ நிதியை பகிர்வு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளது. குப்பைகளைப்‌ பிரித்து மறுசுழற்சி செய்தல்‌ போன்ற அனைத்து திடக்கழிவு மேலாண்மையையும்‌ முக்கிய அம்சங்களாகக்‌ கொண்ட முன்மாதிரி தூய்மை கிராமங்களை உருவாக்கும்‌ ஒரு ஒருங்கிணைந்த திட்டம்‌, சோதனை அடிப்படையில்‌ 2,000 ஊராட்சிகளில்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்தப்படும்‌. மேலும்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ கிராமப்புறத்‌ தூய்மை இந்தியா இயக்கம்‌ மற்றும்‌ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 15 இலட்சம்‌ வீட்டுக்‌ கழிப்பறைகள்‌ அமைக்கப்படும்‌. வரும்‌ நிதியாண்டில்‌ கிராமப்புறத்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகளுக்காக 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கிராமப்புறத்‌ தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.44 · ¶72 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.110 crores continuation project cost AIADMK · interim

“Solid Waste Management Systems have been established initially in 2,000 Village Panchayats at a cost of Rs.110 crores.”
“பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌, இந்த அரசு செயல்படுத்தி வரும்‌ கிராம சுகாதார இயக்கம்‌, ஒருங்கிணைந்த மகளிர்‌ சுகாதார வளாகம்‌ போன்ற முயற்சிகள்‌ தேசிய அளவில்‌ பல பாராட்டுக்களைப்‌ பெற்றுள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும்‌ கழிவறைகள்‌ அமைப்பதை ஊக்குவிக்கவும்‌, அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும்‌, சுய உதவிக்‌ குழுக்களை இந்த அரசு சிறப்பாகப்‌ பயன்படுத்தியுள்ளது. இதுவரை இருந்திராத உயர்‌ அளவாக, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌, 1827 கோடி ரூபாய்‌ செலவில்‌, 15.23 இலட்சம்‌ வீடுகளில்‌ கழிப்பிடங்கள்‌ அமைக்கும்‌ பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. கிராமப்‌ பகுதிகளை சுத்தமாகவும்‌, சுகாதாரமாகவும்‌ பராமரித்திட வேண்டும்‌ என்பது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உன்னதமான குறிக்கோளாகும்‌. இதற்காக, 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2,000 கிராம ஊராட்சிகளில்‌ திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டப்‌ பணிகள்‌ முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டன. இப்பணிகள்‌ தற்போது மேலும்‌ 7,000 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாகச்‌ சென்று குப்பைகளைச்‌ சேகரித்தல்‌, அவற்றைத்‌ தரம்‌ பிரித்தல்‌ மற்றும்‌ தகுந்த முறையில்‌ மறு சுழற்சி செய்தல்‌ போன்ற பொறுப்புகள்‌ தூய்மைக்‌ காவலர்கள்‌ வசம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும்‌, கிராமங்களை தூய்மையாகப்‌ பராமரிக்க, 12,524 கிராம ஊராட்சிகளிலும்‌, 44.10 கோடி ரூபாய்‌ செலவில்‌ 17,638 மூன்று சக்கர வாகனங்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.39 · ¶59 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.150 crores continuation AIADMK · revised

“A sum of Rs.150 crores is provided for Solid Waste Management under the State devolution grants.”

tnbudget_2016-17_speech_en_revised · p.50 · ¶102 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector