Housing · dormant

Concrete houses for Thane-affected huts

1 budget named it 1 year span 1,000 ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2012-13 and not named in any budget since. Districts: two.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2012-13 Rs.1000 crores new project AIADMK

“our Hon'ble Chief Minister has ordered to set apart an amount of Rs.1000 crores in this Budget for constructing one lakh concrete houses to replace permanently damaged huts in these two districts.”
“குடிசைகளுக்கும்‌, நிரந்தரப்‌ பயிர்களுக்கும்‌ ஏற்பட்ட மிகப்‌ பெரும்‌ சேதத்தை கருத்தில்‌ கொண்டு, அவற்றை நிரந்தரமாக சீரமைப்பதற்கான திட்டங்களையும்‌ செயல்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டார்கள்‌. ஏற்கெனவே ஆளுநர்‌ உரையில்‌ அறிவித்தது போல, இந்த இரண்டு மாவட்டங்களில்‌ நிரந்தர சேதத்திற்கு உள்ளான குடிசைகளுக்கு மாற்றாக, ஒரு லட்சம்‌ கான்கிரீட்‌ வீடுகள்‌ கட்டித்தர மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டதன்‌ அடிப்படையில்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1,000 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, முந்திரி, தென்னை, இதர தோட்டப்‌ பயிர்களை மீண்டும்‌ நடவு செய்து, புதுப்பிக்கவும்‌, ஆண்டு பயிர்களை மீண்டும்‌ பயிரிட்டு விவசாயிகளின்‌ வாழ்வில்‌ வளமையை கொண்டுவரும்‌ வகையிலும்‌, 790.18 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஒரு சிறப்பு திட்டத்தையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌. இந்த இரண்டு மாவட்டங்களில்‌ நடைபெற்று வரும்‌ நிவாரணப்‌ பணிகளை கண்காணிப்பதற்கென ஒரு தனி திட்ட மேற்பார்வை அலகும்‌ ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு வகையில்‌, இயற்கை இடர்பாடுகளை தமிழகம்‌ அடிக்கடி சந்தித்து வருவதால்‌, பேரிடர்‌ நேரிடும்போது விரைவாகவும்‌, திறமையாகவும்‌ செயல்படக்கூடிய மாநில பேரிடர்‌ மீட்புப்‌ படை ஒன்று ஏற்படுத்தப்படும்‌. தேசிய பேரிடர்‌ மீட்புப்‌ படை போன்று மீட்பு நடவடிக்கைகளில்‌ விரைந்து செயல்பட சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பாக இந்த அமைப்பு செயல்படும்‌. தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector