Irrigation · completed claimed
Dam Rehabilitation and Improvement Project (DRIP)
First announced in 2011-12 and named again in 10 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2011-12 ` 745.49 crores
“Government of India has given an in-principle approval for an amount of ```` 745.49 crores to be spent over a period of six years from 2011 covering 104 dams under this project.”
“தமிழ்நாடு, நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். பாசன வசதிக்கு முற்றிலும் பருவமழையை தமிழ்நாடு நம்பி உள்ளது. எனவே ஆற்று வடிநில திட்டமிடல் மூலம் நீரை திறம்பட பயன்படுத்துவதும், மழை நீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரை பெருக்குவதும் அவசியமானதாகும். இந்த அரசு உலக வங்கி உதவியுடன் “அணைக்கட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Dam Rehabilitation and Improvement Project)” ஒன்றைச் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதலை அளித்துள்ளது. இதில் 2011 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு 745.49 கோடி ரூபாய் செலவிடப்படும். இதன் மூலம் 104 அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டு 8 அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டு அவற்றின் நீர்ப் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.25 · ¶40 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 745 crores
“The Dam Rehabilitation and Improvement Programme (DRIP) with the World Bank assistance will be implemented in 104 dams over a period of 6 years commencing from 2011-2012 at a cost of ` 745 crores.” tnbudget_2011-12_speech_en_interim · p.12 · ¶27 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.50 crores
“The Dam Rehabilitation and Improvement Project (DRIP) with World Bank assistance will be taken up to improve and rehabilitate 66 dams under the Water Resources Department (WRD) and 38 dams under the control of the Tamil Nadu Generation and Distribution Company at a cost of Rs.745.49 crores over a period of 6 years, in 4 phases, from 2012-2013. In the first year, 12 WRD dams are proposed to be improved and a sum of Rs.50 crores has been provided for this scheme in the Budget Estimates.”
“பாசனத் துறையில் மிக அதிக அளவு முதலீடுகள் தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்து, இத்துறைக்கு வாய்ப்புள்ள வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற இந்த அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. நீர்வள ஆதாரத் துறையில் உள்ள 66 அணைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திடம் உள்ள 38 அணைகளையும் உலக வங்கி உதவியுடன், அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் 745.49 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, அணைகள் புனரமைப்பு-மேம்பாட்டுத் திட்டம் வரும் 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் முதல் ஆண்டில், 12 நீர்வள ஆதாரத் துறையில் உள்ள அணைகள் மேம்படுத்தப்படும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட்டத்தில், கூடுதலாக 1.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், அமராவதி உப வடிநிலம் 2012-2013 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு, 128.31 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.29 · ¶45 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.390 crores
“Out of the total project cost of Rs.745.49 crores, a sum of Rs.390 crores has been provided in the Budget Estimates 2013-2014 to take up dam rehabilitation works.” financedept_2013-14_speech_en · p.25 · ¶60 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.329.65 crore
“A sum of Rs.329.65 crore has been allocated in the Budget Estimates 2014-2015 for this project.”
“உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில், 'அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. 104 அணைகளை நான்கு கட்டங்களில் புனரமைப்பதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதற்காக உலக வங்கியோடு திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒரு திட்டமேலாண்மை அலகும் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 28 அணைகளில் பணிகளை மேற்கொள்வதற்கான நீரியல் ஆய்வுகளும் முடிக்கப்பட்டுள்ளன. 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கென 329.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.23 · ¶42 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.450.13 crores
“The Dam Rehabilitation and Improvement Project (DRIP) with World Bank Assistance is being implemented to rehabilitate 113 dams, at a cost of Rs.745.49 crores. In the Budget Estimates 2015-2016, an amount of Rs.450.13 crores has been allocated for this purpose.”
“உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் 113 அணைகளைப் புனரமைப்பதற்காக, அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இதற்காக 450.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டுவரும் பாசன விவசாயத்தை நவினப்படுத்துதல் மற்றும் நீர்வள மேலாண்மைத் திட்டம் (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management) வரும் ஜூன் 2015ல் முடிவடைகிறது. இத்திட்டத்தில் இதுவரை 2,544.15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,950 கோடி ரூபாய்க்கு உலக வங்கியின் நிதியுதவியைக் கோரி மத்திய அரசுக்குத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள, மற்றொரு அயல்நாட்டு உதவிபெறும் திட்டமாகிய காவேரி வடிநில பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்திற்கான பணிகள் 2015-2016 ஆம் ஆண்டில் தொடங்கும். இந்தத் திட்டத்தில் வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.26 · ¶40 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.408 crores
“With the assistance of the World Bank, this Government has started implementing the ‘Dam Rehabilitation and Improvement Project’ from 2012-2013 at an outlay of Rs.745.49 crores. An amount of Rs.408 crores has been allocated for this purpose in the Interim Budget Estimates.”
“உலக வங்கி உதவியோடு அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை 745.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 408 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதியில், பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ளும் திட்டத்தை வடிவமைத்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியையும் இந்த அரசு வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உதவுவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில அளவில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடாகிய 1560 கோடி ரூபாயில், வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் 960.66 கோடி ரூபாய் செலவில் இத்திட்டப் பணிகளை, இந்த அரசு முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 398.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 61 உப வடிநிலப் பகுதிகளில் 2,674.80 கோடி ரூபாய் செலவில், நீர்வள நிலவளத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள், உலக வங்கி உதவியுடன் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2,950 கோடி ரூபாய் செலவில், முதல் கட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படாத உப வடிநிலப் பகுதிகளில், உலக வங்கி உதவியோடு இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.25 · ¶35 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.258.46 crores
“The World Bank funded 'Dam Rehabilitation and Improvement Project' (DRIP) is being implemented at an outlay of Rs.745.49 crores. Out of 105 dams to be rehabilitated, works have already commenced in 66 dams. In this Revised Budget, Rs.258.46 crores has been allotted for this scheme.” tnbudget_2016-17_speech_en_revised · p.30 · ¶56 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.354 crore
“The World Bank funded ‘Dam Rehabilitation and Improvement Project’ is being implemented in 107 dams in the State at an estimated cost of Rs.745.49 crore from the year 2012-2013. Works in 22 dams have been completed while works in other dams are in progress. The total expenditure incurred so far is Rs.195.30 crore. In this Budget Estimates, Rs.354 crore has been provided for this project.” tnbudget_2017-18_speech_en · p.30 · ¶53 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.362.02 crore
“The World Bank funded 'Dam Rehabilitation and Improvement Project' (DRIP) is under implementation in 89 dams in Tamil Nadu at a cost of Rs.745.49 crore. So far, works in 63 dams have been completed and works in 23 dams are under progress and expenditure of Rs.362.02 crore has been incurred. In the Budget Estimates for 2018-2019, Rs.166.08 crore has been allotted for the project.”
“'அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்” உலக வங்கி உதவியுடன், தமிழ்நாட்டில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில், 362.02 கோடி ரூபாய் செலவிடப்பட்டு 63 அணைகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதுடன் 23 அணைகளில் பணிகள் நடைபெற்றும் வருகின்றன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 166.08 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.31 · ¶48 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.43 crore
“The ‘Dam Rehabilitation and Improvement Project’ (DRIP) is under implementation in 89 dams in Tamil Nadu with World Bank assistance, at a cost of Rs.745.49 crore. In the Budget Estimates, Rs.43 crore will be allocated for this project.” tnbudget_2019-20_speech_en · p.28 · ¶44 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.220.12 crore
“Under DRIP Phase-II, 37 dams will be covered at a total project cost of Rs.610.26 crore. A provision of Rs.220.12 crore has been made in the Budget Estimates 2020-21 for the two Phases of DRIP.”
“அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல்கட்ட திருத்தப்பட்ட திட்டச் செலவினம் 803.49 கோடி ரூபாயுடன் 89 அணைகளும், இரண்டு பாசனப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டம் ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் (DRIP-IT) 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து (DRIP-I & II) 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 220.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநிலப் பகுதிகளில், 1325 குளங்கள் மற்றும் 107 அணைக் கட்டுகளைப் புனரமைத்தல், மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 57 குளங்கள் மற்றும் இரண்டு முதன்மை பாசனக் கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகள் ஜூலை 2020 இல் முடிவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநிலப் பகுதிகளில், 906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டுகளைப் புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமானப் பணிகள் 649.55 கோடி ரூபாய் செலவில் 2020-21 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் இதற்காக 2020-21 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.35 · ¶61 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.803.49 crore
“Work on 87 of the 89 dams taken up under the Dam Rehabilitation and Improvement Project (DRIP) Phase I at a revised project cost of Rs.803.49 crore has been completed, and the project has been extended upto March, 2021.” tnbudget_2021-22_speech_en_interim · p.37 · ¶56 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years
- Restoration of traditional water bodies · 4 years