Irrigation · dormant

ERM of Irrigation Infrastructure in the Cauvery Basin

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2021-22 continuation AIADMK · interim

“The Government has taken up the Extension, Renovation and Modernisation (ERM) of Irrigation Infrastructure in the Cauvery Basin, covering various sub- basin areas.”
“பல்வேறு உபவடிநிலங்களைக்‌ கொண்ட காவேரி வடிநிலத்தில்‌ நீர்ப்பாசன உட்கட்டமைப்பினை நீட்டித்தல்‌, புனரமைத்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்குதல்‌ (ERM) பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 184 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டளை உயர்மட்டக்‌ கால்வாய்‌ பாசன அமைப்பிலும்‌, 335.50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ராஜவாய்க்கால்‌ நீர்ப்பாசன அமைப்பிலும்‌, மற்றும்‌ 230 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நொய்யல்‌ உப வடிநிலத்திலும்‌ நீட்டித்தல்‌, புனரமைத்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்குதல்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,639 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கல்லணைக்‌ கால்வாய்‌ நீட்டித்தல்‌, புனரமைத்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்குதல்‌ திட்டம்‌, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களால்‌ தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. 3,384 கோடி ரூபாய்‌ செலவில்‌ காவேரி உப வடிநிலத்தில்‌ நீட்டித்தல்‌, புதுப்பித்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்கல்‌ பணிகள்‌, நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின்‌ (NIDA) நிதியுதவியுடன்‌ செயல்படுத்துவதற்கு, நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 2021 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 21ஆம்‌ தேதியன்று தொடங்கி வைத்தார்‌. 933 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின்‌ உதவியுடன்‌, கீழ்‌ பவானி பாசனப்‌ பகுதிகளில்‌ நீட்டித்தல்‌, புனரமைத்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்கல்‌ திட்டம்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌. காவேரி டெல்டாவில்‌, கீழ்‌ வெண்ணாறு வடிநிலத்தில்‌, காலநிலை மாற்றத்‌ தழுவல்‌ திட்டத்தின்‌ முதற்கட்டம்‌ தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில்‌ அப்பணிகள்‌ நிறைவடையும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.36 · ¶54 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector