IT & governance · announced once

Faceless Assessment (GST), Faceless Registration and computerised mining monitoring

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“Government is also leveraging Information Technology through initiatives such as 'Faceless Assessment' under the Goods and Services Tax, 'Faceless Registration' in the Registration Department and end-to-end computerisation in monitoring mining activities. These initiatives are together expected to generate additional revenue of approximately Rs.15,000 crore for the Government that will enable the implementation of many welfare schemes successfully.”
“இவ்வாறு பொது டெண்டர்கள்‌ மற்றும்‌ திட்ட அனுமதிகளில்‌ நேர்மையான மற்றும்‌ வெளிப்படைத்‌ தன்மை உடைய நிர்வாகத்தின்‌ மூலம்‌ பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள நமது அரசானது, நிதி ஆதாரங்களைப்‌ பெருக்குவதற்கான முன்முயற்சிகளையும்‌ எடுத்து வருகிறது. இவற்றின்‌ ஒருபகுதியாக, மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல்‌ சிறப்புக்‌ கட்டணத்தை அரசு அண்மையில்‌ விதித்துள்ளது. இதன்மூலம்‌, அரசிற்கு ஓர்‌ ஆண்டிற்கு ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சரக்கு மற்றும்‌ சேவை வரிகளில்‌ நேரடித்‌ தொடர்பற்ற (1௧௦61655)மதிப்பீடு, பதிவுத்‌ துறையில்‌ நேரடித்‌ தொடர்பற்ற (Faceless) பத்திரப்‌ பதிவு, சுரங்க நடவடிக்கைகளைக்‌ கண்காணிக்க முழுமையான கணினிமய௰மாக்கல்‌ (End-to-End Computerization) எனத்‌ தகவல்‌ தொழில்நுட்பத்தின்‌ உதவியுடன்‌ பல முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது. இதன்‌ மூலம்‌, அரசிற்கு கூடுதலாகக்‌ கிடைக்கும்‌ வருவாய்‌ ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய்‌ வரை இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ மூலம்‌ பல வெற்றித்‌ திட்டங்களை செயல்படுத்த முடியும்‌. 11 பொருளாதார வளர்ச்சியுடன்‌ இணைந்து செல்லக்கூடிய வருவாய்‌ வளர்ச்சியை அடையவும்‌, வருவாய்‌ ஆதாரங்களை விரிவுபடுத்தி, நிலைத்தன்மையுடன்‌ பராமரிக்கவும்‌, மாநிலத்தின்‌ வரி மற்றும்‌ ofl அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, ஒன்றிய கிட்ட ஆணையத்தின்‌ முன்னாள்‌ துணைத்‌ தலைவர்‌ திரு.மாண்டேக்‌ சிங்‌ அலுவாலியா (Thiru. Montek Singh Ahluwalia) அவர்களின்‌ தலைமையில்‌ 5 உறுப்பினர்களைக்‌ கொண்ட வருவாய்‌ மேம்பாட்டுக்‌ குழுவை: (Revenue Augmentation Committee) அரசு அண்மையில்‌ அமைத்துள்ளது. இதன்‌ மூலம்‌, மாநிலத்தின்‌ நிதி சுயாட்சியை வலுப்படுத்தி, அதன்‌ சமூகப்‌ பொருளாதார வளர்ச்சிக்‌ கடமைகளை நிறைவேற்றத்‌ தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குவதே அரசின்‌ நோக்கமாகும்‌. பள்ளிக்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.8 · ¶10 · full speech ↗ · on the map →

Nearby in the same sector