Education · recurring

Free laptop distribution scheme

8 budgets named it 16 year span 9,760 ₹ crore allocated 1,100 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 ` 912 crores transfer scheme AIADMK · revised

“During 2011-2012 we have proposed to distribute 9.12 lakh laptops to the eligible students. In the Revised Budget Estimates, a sum of ```` 912 crores has been provided for this scheme.”
“அரசு பள்ளிகள்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ ஆகியவற்றில்‌ பயிலும்‌ அனைத்து 1, +2 மாணவ மாணவியர்களுக்கும்‌, அரசு, அரசு உதவி பெறும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ அனைத்து மாணவ மாணவியர்களுக்கும்‌ இலவசமாக மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்‌. இந்நாட்டு இங்கர்சால்‌ என்றும்‌ தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும்‌ போற்றப்பெறும்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பிறந்த பொன்னாளான செப்டம்பர்‌ 15 ஆம்‌ நாளன்று இத்திட்டம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ தொடங்கி வைக்கப்படும்‌. ஊரகப்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த மாணவர்களும்‌ குறிப்பாக நலிவடைந்த பிரிவைச்‌ சேர்ந்த மாணவர்களும்‌ தகவல்‌ தொழில்நுட்பப்‌ புரட்சியின்‌ நன்மைகளைப்‌ பெறும்‌ வகையில்‌ கணினிப்‌ பயன்பாட்டில்‌ அவர்களது அறிவுநுட்பமும்‌, திறனும்‌ மேம்படச்‌ செய்ய வேண்டும்‌ என்பதே இந்த அரசின்‌ நோக்கமாகும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 இலட்சம்‌ மடிக்கணினிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம்‌. இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ இத்திட்டத்திற்கென 912 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள்‌ நல்வாழ்வு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.54 · ¶87 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.1,500 crores continuation AIADMK

“A massive programme of distributing laptop computers without cost to all college students and plus two students studying in Government and Government aided institutions was launched by this Government during 2011-2012. This scheme will be continued during 2012-2013 and Rs.1,500 crores has been set apart for this purpose in this Budget.”
“மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே, திறன்‌ மிக்க மனிதவள மேம்பாட்டில்‌ அனைத்து மாநிலங்களிலும்‌ முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றிட நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எடுத்து வரும்‌ முயற்சிகள்‌ பற்றி நீங்கள்‌ அறிவீர்கள்‌. அரசு, அரசு உதவிபெறும்‌ கல்வி நிறுவனங்களில்‌ பயிலும்‌ அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும்‌, +2 மாணவர்களுக்கும்‌ விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கான பெருந்திட்டம்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசால்‌ தொடங்கப்பட்டது. 2012-2013 ஆம்‌ ஆண்டிலும்‌ இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 1500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில்‌ உள்ள இளைய தலைமுறையினரிடையே தகவல்‌ தொழில்நுட்பத்‌ திறன்‌ வேகமாக வளர்ந்திட அரசின்‌ இம்முயற்சி பெரிதும்‌ உதவும்‌ என நம்புகிறேன்‌. இளைஞர்‌ நலன்‌, விளையாட்டு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.61 · ¶95 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.1,500 crores transfer scheme AIADMK

“A total number of 5.65 lakh laptop computers will be given to students during the academic year 2013-2014. An allocation of Rs.1,500 crores has been made in the Budget Estimates 2013-2014.”
“மாநிலத்தில்‌ தரமான மனித ஆற்றலை வளர்ப்பதில்‌ மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்‌ திட்டம்‌ பெரும்‌ பங்கு வகிக்கிறது. வளரும்‌ சமுதாயத்தில்‌ காணப்படும்‌ தொழில்நுட்ப இடைவெளி இத்திட்டத்தின்‌ மூலம்‌ நிரப்பப்படுவதை நமது மாநிலம்‌ உறுதி செய்துவருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ மாணவர்களுக்கு 5.65 இலட்சம்‌ மடிக்கணினிகள்‌ வழங்கப்படும்‌. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ 1500 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாடு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.44 · ¶108 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.1,100 crore transfer scheme project cost AIADMK

“During the coming financial year also, 5.5 lakh laptop computers will be provided to Plus Two students and students in polytechnic colleges at a cost of Rs.1,100 crore.”

financedept_2014-15_speech_en · p.52 · ¶103 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.1,100 crores transfer scheme AIADMK

“For this flagship scheme, this Government has allocated Rs.1,100 crores in the Budget Estimates for 2015-2016.”
“இளைஞர்களுக்கு நவீன கணினித்‌ திறனை அளிக்கவும்‌, அவர்களது போட்டித்‌ திறனை மேம்படுத்தவும்‌, மாநிலத்தில்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21.65 இலட்சம்‌ மாணவ மாணவியர்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைந்துள்ளனர்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இந்த முன்னோடித்‌ திட்டத்திற்கு 1,100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.62 · ¶109 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,100 crores transfer scheme AIADMK · interim

“So far, 31.78 lakh laptop computers have been provided to students. An expenditure of Rs.3,231.74 crores has been incurred up to 2014-2015 and a sum of Rs.1,100 crores has been allocated during the current year, thus fulfilling the electoral commitment.”
“எதிர்காலத்தில்‌ திறன்மிக்க மனிதவள ஆற்றலின்‌ தேவையைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, '“கணினிமய தமிழ்நாடு” என்ற கனவை நனவாக்கும்‌ வகையிலும்‌, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்களில்‌, 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ செயல்படுத்தி வருகிறார்கள்‌. இந்த ஒரு புதுமையான திட்டத்தின்‌ மூலமாக, மாணவர்களுக்கு தற்காலத்‌ தேவைக்கேற்ப உயர்‌ தொழில்நுட்பத்‌ திறன்களை அளித்து, அதே சமயம்‌ கணினி அறிவில்‌ இடைவெளியைக்‌ குறைத்து இரு முக்கிய குறிக்கோள்களையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எட்டியுள்ளார்கள்‌. இதுவரை, 31.78 இலட்சம்‌ மடிக்கணினிகள்‌ வழங்கப்பட்டு தேர்தல்‌ வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரை, இதற்கென 3,231.74 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு 1100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.57 · ¶90 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.890 crores transfer scheme AIADMK · revised

“This scheme will be continued and 5.35 lakh students will be provided with laptop computers during 2016-2017. A sum of Rs.890 crores is provided for this scheme in the Revised Budget Estimates 2016-2017.”
“அனைவருக்கும்‌ சம வாய்ப்பு அளிப்பதற்காகவும்‌, டிஜிட்டல்‌ தொழில்நுட்ப இடைவெளியைக்‌ குறைப்பதற்காகவும்‌, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்‌ புதுமையான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ 5.35 இலட்சம்‌ மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள்‌ வழங்கப்படுவதன்‌ மூலம்‌, இத்திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்திற்காக 890 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶75) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.39 · ¶75 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.758 crore continuation AIADMK

“Further, Rs.758 crore has been provided for the supply of laptop computers.”
“பல்வேறு நலத்திட்டங்கள்‌ மூலம்‌ குழந்தைகளை ஊக்கப்படுத்தி இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி மூலம்‌ அனைத்துக்‌ குழந்தைகளுக்கும்‌ கல்வி வழங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌, புத்தகப்பைகள்‌, காலணிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ வடிவியல்‌ பெட்டிகள்‌ உள்ளிட்ட கல்வி கருவிகளையும்‌, மிதிவண்டிகள்‌ மற்றும்‌ பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகள்‌ போன்றவற்றையும்‌ இந்த அரசு விலையில்லாமல்‌ தொடர்ந்து வழங்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1503 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மடிக்கணினிகள்‌ வழங்குவதற்காக 758 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனக்‌ கணக்கில்‌ செலவுகள்‌ மூலதனப்‌ பணிகளுக்கான செலவை மேற்கொள்வதில்‌ இந்த அரசு தனிக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மூலதனப்‌ பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 22,369 கோடி ரூபாய்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 24193 கோடி ரூபாயாக உயர்த்தி கணிக்கப்பட்டுள்ளதுடன்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 27,789 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 8.06 சதவீதம்‌ மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 10.07 சதவீதமாகவும்‌ மேலும்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை உள்நாட்டில்‌ நிலவும்‌ மந்தமான பொருளாதார சூழ்நிலையின்‌ காரணமாக, வரி வருவாய்‌ வளர்ச்சியானது 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மதிப்பீடுச்‌ செய்யப்பட்டதை விட குறைந்துள்ளது. மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌ வளர்ச்சி விகிதத்தில்‌, குறிப்பாக முத்திரைத்தாள்கள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணங்களின்‌ கீழ்‌ பெறப்படும்‌ வரவுகளில்‌, குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. எனவே, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 15,930 கோடி ரூபாயாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான நிதிப்‌ பற்றாக்குறை 40,534 கோடி ரூபாயாக இருக்கும்‌ என திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தின்படியான மதிப்பீடு, திருத்த மதிப்பீடுகளில்‌ 61344 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 4.58 சதவீதம்‌ என்பதுடன்‌, தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப்‌ பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ வரையறைக்கும்‌ கூடுதலாகும்‌. தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப்‌ பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ வரையறைக்கும்‌ கூடுதலான நிதிப்‌ பற்றாக்குறை, “உதய்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ கடன்களால்‌ ஏற்பட்டுள்ளது. இது, ஒரு தற்காலிக நிலை மட்டுமே ஆகும்‌. எனவே, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ மீண்டும்‌ 3 சதவீதத்திற்கு குறைவாக வரப்பெறும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலர்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ அடிப்படையில்‌, ஏழாவது ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மாநிலத்தின்‌ நிதி நிலைமையின்‌ சுமையை அதிகரிக்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 41977 கோடி ரூபாயாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ள நிதிப்‌ பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 2.79 சதவீதமாகும்‌. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 3.18 சதவீதமாகவும்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 2.82 சதவீதமாகவும்‌ இருக்கும்‌. V. கடன்கள்‌ பதினான்காவது நிதி ஆணையம்‌ பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக்‌ கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌, கடன்‌ வரவுகள்‌ மற்றும்‌ திரும்பச்‌ செலுத்துதல்‌ மதிப்பிடப்பட்டுள்ளன. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான, நிகரக்‌ கடன்‌ வரம்பு 45,119 கோடி ரூபாய்‌ என்று கணிக்கப்பட்டிருந்தாலும்‌, மாநில அரசு 41965 கோடி ரூபாய்‌ மட்டுமே நிகரக்‌ கடன்‌ வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன்‌ 31.03.2018 அன்று, 3,14,366 கோடி ரூபாயாக இருக்கும்‌. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 20.90 சதவீதம்‌ மட்டுமே ஆகும்‌. VI. கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்வொரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2016 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின்‌ அளவு முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 42.14 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 4.25 சதவீதமாகவும்‌ உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவீதம்‌ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.50 சதவீதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2016 அன்று உள்ளபடி மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 8.29 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 0.84 சதவீதமாகவும்‌ உள்ளது. முடிவுரை மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சிப்‌ பாதையில்‌ மெல்ல முன்னேறிச்‌ செல்வதை, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின்‌ வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின்‌ அடிப்படையில்‌), 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 7.94 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. இருப்பினும்‌, மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌, குறிப்பாக, முத்திரைத்தாள்கள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணங்களின்‌ கீழ்‌ பெறப்படும்‌ வரவுகளில்‌ இழப்பு, வருவாய்‌ வரவுகளில்‌ கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌, பதினான்காவது நிதிக்‌ குழுவின்‌ பரிந்துரைகளால்‌ மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில்‌ தமிழகத்தின்‌ பங்கு குறைந்தது மற்றும்‌ மத்திய அரசு பொறுப்பேற்கும்‌ திட்ட பணிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு உயர்ந்தது ஆகியவை மாநில அரசின்‌ நிதிநிலையை பாதித்துள்ளது. எனினும்‌, பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான வரி அளவை உயர்த்தியதன்‌ மூலம்‌ வணிகவரி வசூல்‌ உயரும்‌ எனக்‌ கருதப்படுகிறது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகளை, அலுவலர்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ அடிப்படையில்‌ செயல்படுத்துவதால்‌ ஊதிய விகிதத்தில்‌ ஏற்படும்‌ திருத்தத்தைத்‌ தவிர, இதர செலவுகளின்‌ பாங்கு நிலையாக உள்ளது. வருவாய்‌ வரவுகளில்‌ காணப்படும்‌ இந்த சுணக்கமான சூழ்நிலையிலும்‌, ஒட்டுமொத்த நிதிப்‌ பற்றாக்குறை, நிகரக்‌ கடன்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிலுவையில்‌ உள்ள மொத்தக்‌ கடன்‌ விகிதம்‌ ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும்‌. மாநிலத்தின்‌ நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகைச்‌ செய்யும்‌ விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும்‌ தொடர்ந்து எடுத்து நிதி மேலாண்மையை வலுப்படுத்தும்‌. OK OK OK OK 2K OK 2K OK 2K 2K OK 2K OK OK OK 2K OK” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.62 · ¶111 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.2,000 crore new project TVK · revised

“Recognising this, our Government will implement the 'Vetri Laptop Scheme' for college students. With an allocation of Rs.2,000 crore, this initiative aims to equip students with laptops as an essential learning resource.”
“கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது ஓர்‌ இன்றியமையாத தகவல்‌ தொழில்நுட்பச்‌ சாதனமாக உள்ளது. நாளுக்கு நாள்‌ மேம்பட்டு வரும்‌ இன்றைய தகவல்‌ தொழில்நுட்ப உலகில்‌ தங்கள்‌ தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சியினை பெற்றுக்‌ கொள்ளவும்‌, சிறப்பான வழியில்‌ தங்கள்‌ நேரத்தினை பயன்படுத்துவதற்கும்‌, மாணவர்களுக்கு மடிக்கணினி மிகவும்‌ பயனுள்ளதாக இருக்கும்‌. இதனை உணர்ந்த நமது அரசு, கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினித்‌ திட்டத்தைச்‌: செயல்படுத்தும்‌. 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டிலான இத்திட்டம்‌ கல்லூழி மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை மேம்படுத்தும்‌ ஒரு கருவியாக அமையும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.14 · ¶21 · full speech ↗ · on the map →

Nearby in the same sector