Education · dormant

Free school uniforms and footwear

9 budgets named it 11 year span 13,464 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 ` 59 crores transfer scheme AIADMK · revised

“This Government has decided to give two sets of uniforms to the school children with an additional financial commitment of ```` 59 crores during 2011-2012.”
“2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ பள்ளிக்‌ குழந்தைகளுக்கு இரண்டு செட்‌ சீருடைகள்‌ வழங்கப்படும்‌. இதற்கு கூடுதலாக 59 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ உறுதியளித்தபடி 2012-2013 ஆம்‌ ஆண்டு முதல்‌ பள்ளிக்‌ குழந்தைகளுக்கு நான்கு செட்‌ சீருடைகள்‌ வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆண்டிற்கு 177 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவு ஏற்படும்‌. ஆறாம்‌ வகுப்பும்‌ அதற்கு மேலும்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு அரைக்‌ கால்சட்டைக்குப்‌ பதிலாக முழுக்‌ கால்சட்டையும்‌, மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப்‌ பதிலாக சல்வார்‌ கமீசும்‌ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடை மாற்றம்‌ பள்ளி மாணவ மாணவியரிடையே பெருத்த வரவேற்பைப்‌ பெறும்‌ என நம்புகிறேன்‌. தற்போதுள்ள கூலி விவரத்தைக்‌ கருத்தில்‌ கொண்டு தையல்‌ கூலியும்‌ உயர்த்தி வழங்கப்படும்‌. அரசு பள்ளிகள்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ அனைத்துக்‌ குழந்தைகளுக்கும்‌ காலணிகள்‌ வழங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ முடிவு செய்துள்ளார்கள்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.51 · ¶83 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.329.89 crores continuation AIADMK

“As promised in our election manifesto, this Government will distribute four sets of uniforms to school children every year from 2012-2013. Further, as already announced, boys from sixth standard onwards will be given full pants instead of half pants and girls will be given salwar kameez. A sum of Rs.329.89 crores has been allocated in the Budget Estimates for the supply of uniforms to 48.63 lakh children.”
“தேர்தல்‌ அறிக்கையில்‌ உறுதியளிக்கப்பட்டவாறு, இந்த அரசு 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து பள்ளி மாணவ மாணவியருக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும்‌. மேலும்‌, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆறாம்‌ வகுப்பிலிருந்து பயிலும்‌ மாணவர்களுக்கு அரைக்கால்‌ சட்டைக்குப்‌ பதிலாக முழுக்‌ கால்‌ சட்டையும்‌, பெண்களுக்கு சல்வார்‌ கமீசும்‌ வழங்கப்படும்‌. 48.63 லட்சம்‌ குழந்தைகளுக்கு சீருடைகள்‌ வழங்குவதற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 329.89 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல்‌, ஒன்றாம்‌ வகுப்பிலிருந்து பத்தாம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ அனைத்து பள்ளிக்‌ குழந்தைகளுக்கும்‌ விலையில்லாக்‌ காலணிகள்‌ வழங்கும்‌ திட்டத்தையும்‌, 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும்‌. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால்‌ 81 லட்சம்‌ குழந்தைகள்‌ பயனடைவார்கள்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.59 · ¶92 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.1,299.74 crores transfer scheme AIADMK

“All put together, these benefits to students will cost the State exchequer Rs.1,299.74 crores.”
“சிறப்பாகக்‌ கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத்‌ தேவையான அனைத்து தேவைகளையும்‌ இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு புத்தகங்கள்‌ வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய்‌. ii. 86.71 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு நோட்டுப்‌ புத்தகங்கள்‌ வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய்‌. iii. 14.02 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு இலவசப்‌ பேருந்து பயணச்‌ சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய்‌. iv. 53.53 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌ வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய்‌. Vv. 13 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு பள்ளிப்‌ புத்தகப்‌ பைகள்‌ வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய்‌. Vi. 6.1 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு காலணிகள்‌ வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய்‌. vii. 9.67 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு வடிவியல்‌ பெட்டிகள்‌, வரைபடப்‌ புத்தகங்கள்‌ போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய்‌. Vii. 6.03 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள்‌ வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய்‌. IX. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணைப்படி, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, மலைப்‌ பகுதிகளில்‌ படிக்கும்‌ 10.30 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள்‌ வழங்க 4.12 கோடி ரூபாய்‌. X. 32.79 இலட்சம்‌ மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள்‌ வழங்க 54.63 கோடி ரூபாய்‌. இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய்‌ செலவு ஏற்படும்‌. உயர்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.353.22 crores transfer scheme AIADMK

“Rs.353.22 crores has been provided to supply 4 sets of uniform covering 53.53 lakh students.”
“சிறப்பாகக்‌ கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத்‌ தேவையான அனைத்து தேவைகளையும்‌ இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு புத்தகங்கள்‌ வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய்‌. ii. 86.71 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு நோட்டுப்‌ புத்தகங்கள்‌ வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய்‌. iii. 14.02 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு இலவசப்‌ பேருந்து பயணச்‌ சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய்‌. iv. 53.53 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌ வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய்‌. Vv. 13 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு பள்ளிப்‌ புத்தகப்‌ பைகள்‌ வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய்‌. Vi. 6.1 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு காலணிகள்‌ வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய்‌. vii. 9.67 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு வடிவியல்‌ பெட்டிகள்‌, வரைபடப்‌ புத்தகங்கள்‌ போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய்‌. Vii. 6.03 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள்‌ வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய்‌. IX. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணைப்படி, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, மலைப்‌ பகுதிகளில்‌ படிக்கும்‌ 10.30 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள்‌ வழங்க 4.12 கோடி ரூபாய்‌. X. 32.79 இலட்சம்‌ மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள்‌ வழங்க 54.63 கோடி ரூபாய்‌. இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய்‌ செலவு ஏற்படும்‌. உயர்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.409.30 crore transfer scheme AIADMK

“Rs.409.30 crore to supply 4 sets of uniform covering 46.29 lakh students.”

financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.1,037.85 crores transfer scheme AIADMK

“a total amount of Rs.1,037.85 crores is provided for the supply of textbooks, notebooks, four sets of uniform, school bags, footwear, geometry box, atlas, crayons, colour pencils and woolen sweaters for the year 2015-2016.”
“மாணவ மாணவியரின்‌ நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில்‌ கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, 4 சீருடைத்‌ தொகுப்புகள்‌, புத்தகப்பைகள்‌, காலணிகள்‌, வடிவியல்‌ பெட்டிகள்‌, வரைபடப்‌ புத்தகங்கள்‌, க்ரேயான்கள்‌, SOT பென்சில்கள்‌, கம்பளி ஆடைகள்‌ போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம்‌ ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 6.62 இலட்சம்‌ மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்‌ வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.55 · ¶95 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,705 crores transfer scheme AIADMK · revised

“The Government will continue to provide laptop computers, free textbooks, notebooks, educational kits, four sets of uniform, footwear, school bags, bus passes and bicycles, etc. In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.2,705 crores has been allocated for these purposes.”
“இந்த அரசு, மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகள்‌, விலையில்லா பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, கல்வி உபகரணங்கள்‌, நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌, காலணிகள்‌, புத்தகப்‌ பைகள்‌, பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகள்‌, மிதிவண்டிகள்‌ போன்றவற்றைத்‌ தொடந்து வழங்கும்‌. இதற்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 2,705 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.59 · ¶120 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.1,503 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.1,503 crore has been provided for these welfare schemes.”
“பல்வேறு நலத்திட்டங்கள்‌ மூலம்‌ குழந்தைகளை ஊக்கப்படுத்தி இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி மூலம்‌ அனைத்துக்‌ குழந்தைகளுக்கும்‌ கல்வி வழங்குவதற்கு உள்ள தடைகளை நீக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌, புத்தகப்பைகள்‌, காலணிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ வடிவியல்‌ பெட்டிகள்‌ உள்ளிட்ட கல்வி கருவிகளையும்‌, மிதிவண்டிகள்‌ மற்றும்‌ பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகள்‌ போன்றவற்றையும்‌ இந்த அரசு விலையில்லாமல்‌ தொடர்ந்து வழங்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1503 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மடிக்கணினிகள்‌ வழங்குவதற்காக 758 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனக்‌ கணக்கில்‌ செலவுகள்‌ மூலதனப்‌ பணிகளுக்கான செலவை மேற்கொள்வதில்‌ இந்த அரசு தனிக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மூலதனப்‌ பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 22,369 கோடி ரூபாய்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 24193 கோடி ரூபாயாக உயர்த்தி கணிக்கப்பட்டுள்ளதுடன்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 27,789 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 8.06 சதவீதம்‌ மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 10.07 சதவீதமாகவும்‌ மேலும்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை உள்நாட்டில்‌ நிலவும்‌ மந்தமான பொருளாதார சூழ்நிலையின்‌ காரணமாக, வரி வருவாய்‌ வளர்ச்சியானது 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மதிப்பீடுச்‌ செய்யப்பட்டதை விட குறைந்துள்ளது. மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌ வளர்ச்சி விகிதத்தில்‌, குறிப்பாக முத்திரைத்தாள்கள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணங்களின்‌ கீழ்‌ பெறப்படும்‌ வரவுகளில்‌, குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. எனவே, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 15,930 கோடி ரூபாயாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான நிதிப்‌ பற்றாக்குறை 40,534 கோடி ரூபாயாக இருக்கும்‌ என திருத்த வரவு-செலவுத்‌ திட்டத்தின்படியான மதிப்பீடு, திருத்த மதிப்பீடுகளில்‌ 61344 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 4.58 சதவீதம்‌ என்பதுடன்‌, தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப்‌ பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ வரையறைக்கும்‌ கூடுதலாகும்‌. தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப்‌ பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ வரையறைக்கும்‌ கூடுதலான நிதிப்‌ பற்றாக்குறை, “உதய்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ கடன்களால்‌ ஏற்பட்டுள்ளது. இது, ஒரு தற்காலிக நிலை மட்டுமே ஆகும்‌. எனவே, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ மீண்டும்‌ 3 சதவீதத்திற்கு குறைவாக வரப்பெறும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலர்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ அடிப்படையில்‌, ஏழாவது ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மாநிலத்தின்‌ நிதி நிலைமையின்‌ சுமையை அதிகரிக்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 41977 கோடி ரூபாயாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ள நிதிப்‌ பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 2.79 சதவீதமாகும்‌. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 3.18 சதவீதமாகவும்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 2.82 சதவீதமாகவும்‌ இருக்கும்‌. V. கடன்கள்‌ பதினான்காவது நிதி ஆணையம்‌ பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக்‌ கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌, கடன்‌ வரவுகள்‌ மற்றும்‌ திரும்பச்‌ செலுத்துதல்‌ மதிப்பிடப்பட்டுள்ளன. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான, நிகரக்‌ கடன்‌ வரம்பு 45,119 கோடி ரூபாய்‌ என்று கணிக்கப்பட்டிருந்தாலும்‌, மாநில அரசு 41965 கோடி ரூபாய்‌ மட்டுமே நிகரக்‌ கடன்‌ வாங்க திட்டமிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன்‌ 31.03.2018 அன்று, 3,14,366 கோடி ரூபாயாக இருக்கும்‌. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 20.90 சதவீதம்‌ மட்டுமே ஆகும்‌. VI. கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்வொரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2016 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின்‌ அளவு முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 42.14 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 4.25 சதவீதமாகவும்‌ உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவீதம்‌ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.50 சதவீதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2016 அன்று உள்ளபடி மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 8.29 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 0.84 சதவீதமாகவும்‌ உள்ளது. முடிவுரை மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சிப்‌ பாதையில்‌ மெல்ல முன்னேறிச்‌ செல்வதை, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின்‌ வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின்‌ அடிப்படையில்‌), 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 7.94 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. இருப்பினும்‌, மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌, குறிப்பாக, முத்திரைத்தாள்கள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணங்களின்‌ கீழ்‌ பெறப்படும்‌ வரவுகளில்‌ இழப்பு, வருவாய்‌ வரவுகளில்‌ கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌, பதினான்காவது நிதிக்‌ குழுவின்‌ பரிந்துரைகளால்‌ மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில்‌ தமிழகத்தின்‌ பங்கு குறைந்தது மற்றும்‌ மத்திய அரசு பொறுப்பேற்கும்‌ திட்ட பணிகளில்‌ மாநில அரசின்‌ பங்கு உயர்ந்தது ஆகியவை மாநில அரசின்‌ நிதிநிலையை பாதித்துள்ளது. எனினும்‌, பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான வரி அளவை உயர்த்தியதன்‌ மூலம்‌ வணிகவரி வசூல்‌ உயரும்‌ எனக்‌ கருதப்படுகிறது. ஏழாவது மத்திய ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகளை, அலுவலர்‌ குழுவின்‌ அறிக்கையின்‌ அடிப்படையில்‌ செயல்படுத்துவதால்‌ ஊதிய விகிதத்தில்‌ ஏற்படும்‌ திருத்தத்தைத்‌ தவிர, இதர செலவுகளின்‌ பாங்கு நிலையாக உள்ளது. வருவாய்‌ வரவுகளில்‌ காணப்படும்‌ இந்த சுணக்கமான சூழ்நிலையிலும்‌, ஒட்டுமொத்த நிதிப்‌ பற்றாக்குறை, நிகரக்‌ கடன்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிலுவையில்‌ உள்ள மொத்தக்‌ கடன்‌ விகிதம்‌ ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும்‌. மாநிலத்தின்‌ நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகைச்‌ செய்யும்‌ விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும்‌ தொடர்ந்து எடுத்து நிதி மேலாண்மையை வலுப்படுத்தும்‌. OK OK OK OK 2K OK 2K OK 2K 2K OK 2K OK OK OK 2K OK” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.62 · ¶111 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,653.89 crore transfer scheme AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.1,653.89 crore has been allocated for these welfare schemes.”
“அனைத்து குழந்தைகளுக்கும்‌ தரமான கல்வி அளிக்க வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌, மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள்‌, புத்தகப்‌ பைகள்‌, காலணிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ வடிவியல்‌ பெட்டிகள்‌ உள்ளிட்ட கல்வி உபகரணங்கள்‌, மிதிவண்டிகள்‌ மற்றும்‌ பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல்‌ தொடர்ந்து வழங்கி வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம்‌ 1,653.89 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவ, மாணவிகளின்‌ பள்ளி இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்‌ தலா 5,000 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 313.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.61 · ¶104 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.409.30 crore continuation DMK · revised

“The scheme for distribution of free school uniforms for children from classes 1 to 8 will be implemented with supplies from powerlooms and weaving units located within in Tamil Nadu. The Revised Budget allocation for the programme during 2021-22 is Rs.409.30 crore.”

financedept_2021-22_speech_en_revised · p.62 · ¶145 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.3,703.35 crore continuation AIADMK · interim

“Provision of nutritious noon meals, textbooks, notebooks, laptops, uniforms, footwear, school bags, crayons, colour pencils, geometry boxes and atlases, the free bus pass scheme and the provision of bicycles to students will continue to be implemented. A total amount of Rs.3,703.35 crore has been provided in the Revised Estimates 2020-21 for the continuance of these schemes.”
“குழந்தைகளுக்கு உயர்தரக்‌ கல்வியை வழங்குவது இந்த அரசின்‌ உயர்ந்த முன்னுரிமையாகும்‌. எனவே, பள்ளிக்‌ கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 34,181.73 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-12 ஆம்‌ ஆண்டு முதல்‌ 273 தொடக்கப்‌ பள்ளிகள்‌ திறக்கப்பட்டுள்ளன. 127 தொடக்கப்‌ பள்ளிகள்‌ நடுநிலைப்‌ பள்ளிகளாகவும்‌, 1115 நடுநிலைப்‌ பள்ளிகள்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளாகவும்‌, 644 உயர்நிலைப்‌ பள்ளிகள்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளாகவும்‌ தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளன. தொடக்கக்‌ கல்வியில்‌ மாணவர்‌ நிகர சேர்க்கை விகிதம்‌ 99.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளி இடைநிற்றல்‌ விகிதம்‌ 0.75 சதவீதமாகக்‌ குறைந்துள்ளது. மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள்‌, நோட்டுப்புத்தகங்கள்‌, மடிக்கணினிகள்‌, சீருடைகள்‌, காலணிகள்‌, பள்ளி புத்தகப்பைகள்‌, கிரையான்கள்‌, வண்ண பென்சில்கள்‌, வடிவியல்‌ பெட்டிகள்‌ மற்றும்‌ நிலவரைபடப்‌ புத்தகங்கள்‌, இலவசப்‌ பேருந்து அட்டை மற்றும்‌ விலையில்லா மிதிவண்டி வழங்குதல்‌ போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. இந்தத்‌ திட்டங்கள்‌ தொடர்வதற்காக, 2020-21 ஆம்‌ ஆண்டின்‌ திருத்த மதிப்பீடுகளில்‌ மொத்தம்‌ 3,703.35 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்விச்‌ சட்டம்‌, 2009, பிரிவு 12(1) (9 இன்‌ படி, இதுவரை 5,61111 குழந்தைகள்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. இதற்காக, மொத்தம்‌ 1324.28 கோடி ரூபாய்‌ தமிழ்நாடு அரசால்‌ தனியார்‌ பள்ளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.60 · ¶94 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector