Education · dormant

Sarva Shiksha Abhiyan school infrastructure

8 budgets named it 8 year span 15,053 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 ` 498.24 crores continuation AIADMK · revised

“` 498.24 crores has been provided for school infrastructure during 2011-2012.”
“குழந்தைகளுக்கான 2009 ஆம்‌ ஆண்டு இலவச-கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ இயற்றப்பட்ட பிறகு, கல்வி ஓர்‌ அடிப்படை உரிமையாக அரசியல்‌ சாசனப்படி கட்டாயமாக்கப்‌ பட்டுள்ளது. மத்திய அரசின்‌ இந்தச்‌ சட்டத்தைப்‌ பின்பற்றி இந்த அரசு, அனைத்துக்‌ குழந்தைகளையும்‌ தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌, இடைநிலைப்‌ பள்ளிகளிலும்‌ சேர்த்து தரமான கல்வியை வழங்கும்‌. அனைத்துக்‌ குழந்தைகளையும்‌ பள்ளியில்‌ சேர்த்து தொடர்ந்து 100 விழுக்காடு மாணவர்களும்‌ தொடக்கக்‌ கல்வி பெறுவதற்கு வழிவகை செய்வதே இந்த அரசின்‌ குறிக்கோளாகும்‌. இந்த இலக்கை எய்துவதற்காக அனைவருக்கும்‌ தொடக்கக்‌ கல்வி வழங்குவதை நோக்கமாகக்‌ கொண்ட “அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டம்‌" (Sarva Shiksha Abhiyan) சிறப்பாகச்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கக்‌ கல்வியை மிகவும்‌ பயனுள்ளதாக ஆக்குவதற்காக இத்திட்டத்தின்‌ கீழ்‌ பள்ளிகளின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பை மேம்படுத்தவும்‌, மனித வள மேம்பாட்டின்‌ ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்‌ அளிக்கவும்‌ முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிகளில்‌ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 498.24 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்களும்‌ (School Management Committees) அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம்‌ ஆண்டுக்கு இத்திட்டத்திற்கு 27.07 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குச்‌ செல்லாமல்‌ 56,113 சிறார்கள்‌ உள்ளனர்‌ என கணக்கிடப்பட்டுள்ளது. தீவிர முயற்சிகள்‌ மூலம்‌ இவர்கள்‌ அனைவரையும்‌ இந்த ஆண்டே பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.49 · ¶80 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.2,000 crores continuation AIADMK

“In the coming financial year, SSA will be implemented in the State with an outlay of Rs.2,000 crores, out of which the State's contribution will be Rs.700 crores.”
“அனைவருக்கும்‌ ஆரம்பக்‌ கல்வி அளிப்பதற்கான 'அனைவருக்கும்‌ கல்வி இயக்கம்‌” இந்த நிதியாண்டில்‌ 1,891.42 கோடி ரூபாய்‌ செலவில்‌, செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வியின்‌ தரம்‌, பள்ளிக்‌ கட்டமைப்பு ஆகிய இரண்டு இனங்களில்‌ இந்த இயக்கம்‌ முக்கிய கவனம்‌ செலுத்தி வருகிறது. வரும்‌ நிதியாண்டில்‌, இந்த திட்டம்‌ 2,000 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. இதில்‌ மாநில அரசின்‌ பங்களிப்பு 700 கோடி ரூபாயாகும்‌. அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வி கிடைக்கச்‌ செய்யும்‌ நோக்கோடு தேசிய இடைநிலை கல்வித்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, இத்திட்டம்‌ 1,069.51 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டு, 710 நடுநிலைப்‌ பள்ளிகள்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளாக தரம்‌ உயர்த்தப்பட்டு, பள்ளிக்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்துதல்‌ போன்ற பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இடைநிலைக்‌ கல்வியை மேம்படுத்த இந்த திட்டத்திற்கு போதுமான நிதியுதவியை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.58 · ¶90 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.700 crores continuation AIADMK

“For the year 2013-2014, Rs.700 crores is provided under SSA, Rs.366.57 crores under RMSA and Rs.293 crores under NABARD assistance.”

financedept_2013-14_speech_en · p.42 · ¶103 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.700 crore continuation AIADMK

“Under the Sarva Shiksha Abhiyan, an amount of Rs.700 crore will be provided as the State's share for 2014-2015.”
“புதிய பள்ளிக்‌ கட்டடங்கள்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, கழிப்பறை வசதிகள்‌, மாணவியருக்கும்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கும்‌ தனி கழிப்பறைகள்‌, சமையல்‌ கூடங்கள்‌, சுற்றுச்‌ சுவர்கள்‌, ஆய்வகங்கள்‌ போன்ற கட்டமைப்புகளைப்‌ பள்ளிகளில்‌ ஏற்படுத்திட அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டம்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டம்‌, நபார்டு வங்கியின்‌ நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களில்‌ ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களைப்‌ பயன்படுத்தி கணிசமான முதலீடுகளை இந்த அரசு செய்துள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ பள்ளிகளின்‌ கட்டமைப்புத்‌ தேவைகளை நிறைவு செய்ய நபார்டு நிதியுதவியின்‌ மூலம்‌ 250 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்‌ கல்வித்‌ திட்டத்திற்கு, மாநில அரசின்‌ பங்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 700 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டத்திற்கு, மாநில அரசின்‌ பங்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 384.90 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.50 · ¶101 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.2,090.09 crores continuation AIADMK

“Allocation of Rs.2,090.09 crores under Sarva Shiksha Abhiyan (SSA) and Rs.816.19 crores under Rashtriya Madyamik Shiksha Abhiyan (RMSA) are also provided.”
“இந்த அரசு அறிமுகப்படுத்திய புதுமையான திட்டங்களின்‌ காரணமாக பள்ளிக்‌ கல்வி வளர்ச்சியில்‌ நமது மாநிலம்‌ முன்னிலையில்‌ உள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ பள்ளிக்கல்வித்‌ துறைக்கு 20,936.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள்‌ அனைத்தும்‌ தேசிய அளவில்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக்‌ கொண்டு செல்லும்‌ என நாங்கள்‌ உறுதியாக நம்புகிறோம்‌. உயர்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.56 · ¶97 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,329.15 crores continuation AIADMK · interim

“In the Interim Budget 2016-2017 Rs.2,329.15 crores is allocated for SSA andRs.1,139.52 crores is provided for RMSA.”
“பள்ளிகளில்‌ தரமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த அரசு உயர்‌ முன்னுரிமை அளித்து வருகிறது. கூடுதல்‌ வகுப்பறைகள்‌, அறிவியல்‌ ஆய்வகங்கள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, சுற்றுச்‌ சுவர்கள்‌, மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி கழிவறைகள்‌ போன்ற கட்டமைப்பு வசதிகள்‌ 4,165.95 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ போதிய குடிநீர்‌ மற்றும்‌ கழிவறை வசதிகளை வழங்குவதற்காக, நபார்டு வங்கியின்‌ நிதியுதவியோடு 650.68 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்தின்‌ கீழ்‌ 6,124 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வி இயக்கத்தின்‌ கீழ்‌ 2,069 கோடி ரூபாயும்‌ வழங்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும்‌, தேசிய இடைநிலைக்‌ கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.50 · ¶78 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,329.15 crores continuation AIADMK · revised

“In the Revised Budget Estimates 2016-2017, Rs.2,329.15 crores under the SSA and Rs.1,139.52 crores under the RMSA have been provided.”

tnbudget_2016-17_speech_en_revised · p.58 · ¶119 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.2,656 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.2,656 crore and Rs.1,194 crore have been provided for SSA and RMSA respectively.”

tnbudget_2017-18_speech_en · p.63 · ¶114 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.1,750 crore continuation AIADMK

“Allocations of Rs.1,750 crore and Rs.850 crore have been made for SSA and RMSA respectively in the Budget Estimates 2018-2019.”
“'அனைவருக்கும்‌ கல்வி இயக்கம்‌” (Sarva Shiksha Abhiyan) மற்றும்‌ அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வி இயக்கத்தின்‌” (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) கீழ்‌, முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத்‌ தொகை, முறையே 1,312.04 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 93410 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்காத நிலையிலும்‌, இத்திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தி வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அனைவருக்கும்‌ கல்வி இயக்கத்திற்காகவும்‌, அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வி இயக்கத்திற்காகவும்‌, முறையே 1750 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 850 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டத்தை” திறம்படச்‌ செயல்படுத்திட, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கு 200.70 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.62 · ¶106 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector