Welfare · recurring
Free bicycles for SC/ST students
First announced in 2011-12 and named again in 12 later budgets, most recently 2026-27.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 43 crores
“` 43 crores is also allotted for the distribution of free bi-cycles to students belonging to Scheduled Castes and Scheduled Tribes.”
“ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்படும். இதேபோன்று கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பத்து நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், பத்து உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும். கழிவறை வசதிகளை 779 பள்ளிகளில் ஏற்படுத்துவதற்காக, சிறப்பு மானியமாக 15.58 கோடி ரூபாய் அனுமதிக்கப்படும். பத்து இலட்சம் ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட உயர்படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில், 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.73 · ¶124 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 112.08 crores
“During the year 2011-2012, it has been decided to distribute free bicycles to six lakh students at a cost of ` 112.08 crores.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ மாணவியர்களுக்கு இலவசக் கல்வியையும், மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய, மெட்ரிக் படிப்பிற்கு மேற்பட்ட படிப்புகளுக்கான படிப்பு உதவித் தொகையையும் இந்த அரசு வழங்கி வருகிறது. இதற்காக 2011-2012 ஆம் ஆண்டிற்கு, 89.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில், 112.08 கோடி ரூபாய் செலவில் ஆறு இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.75 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14 Rs.200.98 crores
“Rs.200.98 crores will be provided for the supply of bicycles to 6.30 lakh students.”
“சிறப்பாகக் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத் தேவையான அனைத்து தேவைகளையும் இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம் மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய். ii. 86.71 இலட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய். iii. 14.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய். iv. 53.53 இலட்சம் மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய். Vv. 13 இலட்சம் மாணவ மாணவியருக்கு பள்ளிப் புத்தகப் பைகள் வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய். Vi. 6.1 இலட்சம் மாணவ மாணவியருக்கு காலணிகள் வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய். vii. 9.67 இலட்சம் மாணவ மாணவியருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய். Vii. 6.03 இலட்சம் மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய். IX. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, 2013-2014 ஆம் ஆண்டில், மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 இலட்சம் மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ரூபாய். X. 32.79 இலட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய். இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.56.34 crores
“Rs.56.34 crores has been allotted for the distribution of free bicycles to the students belonging to the Scheduled Castes and Scheduled Tribes.”
“2013-2014 ஆம் ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு 7,042 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, ஆதிதிராவிடர் நலனில், இந்த அரசு தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. இது, 2012-2013 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டைவிட 15.29 சதவீதம் கூடுதலாகும். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்குப் புத்துயிரூட்ட, 2013-2014 ஆம் ஆண்டிற்கு பங்கு மூலதன உதவியாக 13.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்பு உதவி மூலம், பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திட இந்த நிறுவனத்திற்கு மேலும் 122.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 56.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.52 · ¶128 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.139.42 crores
“Rs.139.42 crores has been allocated for distribution of free bicycles to students belonging to BC, MBC, DNC and Minorities.”
“இந்த அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி மேம்பாட்டிற்காக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டில் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகளுக்காக 173.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 5,06,630 ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர உதவும். மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 139.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶135) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.55 · ¶135 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.216.04 crore
“Rs.216.04 crore for the supply of bicycles to 6.30 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.219.50 crores
“Further, Rs.219.50 crores is also provided for the supply of bicycles to 6.62 lakh students.”
“மாணவ மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், SOT பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6.62 இலட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.55 · ¶95 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.64.86 crores
“A sum of Rs.64.86 crores has been provided for free cycle scheme in the Interim Budget Estimates 2016-2017.”
“ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆதி திராவிடர் துணைத் திட்டம் (8087) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு (TSP) விகிதாச்சார அடிப்படையில் தகுந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்துள்ளது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் பயன்களை விரிவுபடுத்தி வழங்கியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பயில இயன்றுள்ளது. உயர் கல்விக்கான கல்வி உதவித் திட்டத்தில், மத்திய அரசு உறுதியளித்தவாறு அதன் பங்காகிய 1592 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்காவிட்டாலும், 2015-2016 திருத்த மதிப்பீடுகளில் இதற்கான ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தியுள்ளது. 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக 836 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், இதற்காக 3,607 கோடி ரூபாய் இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகைக்காக, இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், 289 கோடி ரூபாய் செலவில், 8,63,159 மிதிவண்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 64.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.58 · ¶92 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.162.83 crores
“Further, an amount of Rs.162.83 crores has been allocated in this Interim Budget for free cycle scheme.”
“பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்கு இந்த அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பிரிவினரின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 வது வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 736.81 கோடி ரூபாய் செலவில் 22.18 இலட்சம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 162.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶96) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.60 · ¶96 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.64.86 crores
“To continue the scheme of distributing cycles free of cost to students belonging to the Scheduled Castes and Scheduled Tribes studying in 11th Standard in Government and Government Aided schools, an amount of Rs.64.86 crores has been allocated in the Revised Budget Estimates.”
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 64.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶129) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶129 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.168.04 crores
“An amount of Rs.168.04 crores has been allocated in the Revised Budget for this purpose.”
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாவது வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்காக இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 168.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶134) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.65 · ¶134 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.69 crore
“An amount of Rs.69 crore has also been provided in the Budget Estimates 2017-2018 for providing bicycles free of cost to Scheduled Caste and Scheduled Tribe students studying in 11th Standard in Government and Government aided schools.” tnbudget_2017-18_speech_en · p.66 · ¶121 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.180 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.180 crore has been provided for this scheme.”
“இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டையும் நலனையும் பேணுவதில் முனைப்போடு உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில், 72,000 மாணவ, மாணவியருக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 7.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 2017-2018 வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 23 கோடி ரூபாயும், மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கென 182 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.69 · ¶126 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.71.01 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.71.01 crore has been provided for the free bicycle scheme, and Rs.150 crore has been provided for extending Special Central Assistance.”
“2017-2018 ஆம் ஆண்டில், பள்ளிக்கல்வி உதவித்தொகைத் (Pre-Matric Scholarship) திட்டத்தின் கீழ் 3.60 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு 98 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 1546.88 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வரவேண்டியுள்ள நிலையிலும், எவ்விதத் தடையுமின்றி மாணவ, மாணவிகள் உயர்கல்வியைத் தொடரும் வகையில் உயர்கல்விக்கான உதவித்தொகையை (௦51-14211௦ Scholarship) இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 2017-2018 ஆம் ஆண்டில், 8.75 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 129.16 கோடி ரூபாயும், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1838.24 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 71.01 கோடி ரூபாய் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்காகவும், 150 கோடி ரூபாய் மத்திய சிறப்பு உதவித் திட்டத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி, 2018-2019 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பகிர்வு நிதியில், ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி, ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.65 · ¶112 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.229.98 crore
“The scheme of providing bicycles free of cost to the students belonging to these communities and studying in class XI in Government and Government aided schools will continue in 2018-2019 with a budgetary allocation of Rs.229.98 crore.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் நலனைப் பேணி, அவர்களை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியோடு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளைத் தொடர்ந்து வழங்க, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 229.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் கடனுதவியுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டில் அரசால் 13.07 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதிகள் கட்டுவதற்காக 20.10 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்காக 80.37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறைக்காக 972.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.67 · ¶114 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.138.48 crore
“Further, the Government is allocating Rs.138.48 crore in the year 2019-2020 for distributing bicycles to the school students and ITI students.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரைச் சார்ந்த மாணவ மாணவியர் குறைந்த செலவில் தடையின்றி கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை ஆகியவற்றை இந்த அரசு வழங்கி வருகிறது. 2019-2020 ஆண்டில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 290.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2019-2020 ஆம் ஆண்டில் பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக அரசு 138.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விடுதி மாணவ மாணவியருக்கான உணவுச் செலவினங்களுக்காக 79.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்காக 911.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.68 · ¶122 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.71.01 crore
“A sum of Rs.71.01 crore has been included in the Budget Estimates 2019-2020 for providing bicycles free of cost to the students belonging to the Schedule Castes and Scheduled Tribes studying in Government and Government aided schools.”
“பெண் குழந்தைகளின் சேர்க்கையினை 3 முதல் 8 வரை உள்ள வகுப்புகளில் ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப் பரிசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 48.70 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7101 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளிலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.70 · ¶126 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.142.84 crore
“3.63 lakh bicycles at a cost of Rs.142.84 crore are being provided to Class XI and ITI students.”
“பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, அவர்களுக்குத் தரமான கல்வி வசதிகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அரசு நன்கு அறியும். இந்த சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 302.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 3.63 இலட்சம் மிதிவண்டிகள் 142.84 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 1348 விடுதிகளில் 85,314 மாணவ மாணவிகள் தங்கியுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 7 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும். புதிய விடுதிக் கட்டடங்களின் கட்டுமானத்திற்காக 2019-20 ஆம் ஆண்டில் 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய அனைத்து விடுதிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை நிறுவப்பட்டுவருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்காக 1,034.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶168) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.93 · ¶168 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.162 crore
“an amount of Rs.162 crore towards supply of free bicycles, in this Budget.”
“பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.33 · ¶93 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.305 crore
“An amount of Rs.305 crore has been earmarked towards distribution of bicycles to students.” financedept_2023-24_speech_en · p.24 · ¶53 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.193 crore
“In the coming year, a sum of Rs.124 crore for pre-matric a sum of Rs.237 crore for post-matric scholarship and a sum of Rs.193 crore for providing free bicycles to students have been allocated.” tnbudget_2024-25_speech_en · p.65 · ¶141 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.277 crore
“Modern, branded bicycles equipped with helmets and water bottles will be provided to approximately 5.32 lakh Gen-Z students studying in Class XI across Government and Government-aided schools in the current academic year. An estimated amount of Rs.277 crore is allocated towards this scheme.”
“அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டில் tid வகுப்புப் பயிலும் சுமார் 532 இலட்சம் Gen-Z 7 இளம் தலைமுறை மாணாக்கர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவின பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. தண்னை உயிராக நேசிக்கும் Gen-Z தலைமுறையை தலைசிறந்த தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதன் வெளிப்பாடே இந்த மேம்படுத்தப்பட்ட டுசயல்திட்டம்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.13 · ¶18 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Post-matric scholarships (Adi Dravidar) · 2011-12 –2026-27
- contains Free supplies to school children · 2014-15
- part of Free bicycles to Archagars and Poojaris · 2011-12
- runs alongside Free school uniforms and footwear · 2011-12 –2021-22
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years