Welfare · completed claimed
Integrated Child Development centres infrastructure
First announced in 2011-12 and named again in 12 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 231 crores
“During the tenure of this Government, ` 231 crores have been spent for improving the infrastructure facilities of these centres.”
“தமிழ்நாட்டில் தற்போது உள்ள 54,439 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையங்கள் மூலம், 24.54 இலட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இம்மையங்களின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த இந்த ஆட்சிக் காலத்தில் ரூபாய் 231 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் பயனாக, குழந்தைகளின் உணவில் ஊட்டச்சத்து நிலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. 2006-ல் 6164 சதவீதமாக இருந்த ஆரோக்கியமான குழந்தைகளின் எண்ணிக்கை, தற்போது 64.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது, தற்போது ஐந்து முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.34 · ¶86 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.1,217.97 crores
“A sum of Rs.1,217.97 crores has been provided in the Budget Estimates 2012-2013 for the Integrated Child Development Scheme.”
“அங்கன்வாடி மையங்களை சீர்படுத்தி மேம்படுத்துவதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. நடப்பு நிதியாண்டில் சிறிய அளவில் சீரமைப்பு தேவைப்பட்ட 9,873 அங்கன்வாடி மையங்களில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 6,202 அங்கன்வாடி மையங்களில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய அளவிலான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், 20,558 அங்கன்வாடி மையங்களில் 12.34 கோடி ரூபாய் செலவில் மின் விசிறி, குழல்விளக்கு வசதிகளுடன் மின்சார இணைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தவிர, குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய 20,244 கழிப்பறைகள் கட்டுவதற்கு 36.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்திற்கு 2012-2013 ஆம் ஆண்டில் 1217.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதியோர், ஆதரவற்றோர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.77 · ¶122 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.1,320.52 crores
“Rs.1,320.52 crores has been allocated for the Integrated Child Development Services Scheme for 2013-2014.” financedept_2013-14_speech_en · p.58 · ¶141 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.1,475.42 crore
“For all these initiatives under the Integrated Child Development Services Scheme, this Government has allocated Rs.1,475.42 crore in the Budget Estimates 2014-2015.”
“நமது நாட்டில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சேவைகளை அளிப்பதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். 15,313 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், 15,399 மையங்களைப் பழுதுபார்த்தல், குழந்தைகள் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் 16,402 கழிப்பறைகளை அமைத்தல், 20,558 மையங்களுக்கு மின் இணைப்பு பெறுதல், அனைத்து மையங்களுக்கும் எடை பார்க்கும் கருவிகள், சுகாதாரப் பைகள் வழங்குதல் ஆகிய பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில், ஆறு முதல் 36 மாதங்களுக்கு உட்பட்ட 16.6 இலட்சம் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட 11.55 இலட்சம் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட சத்தான உணவு வழங்கப்படுகிறது. 6.64 இலட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3.86 இலட்சம் வளரிளம் பெண்களுக்கும் கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. இந்த அனைத்து முயற்சிகளுக்காகவும், 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1475.42 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.57 · ¶114 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.1,575.36 crores
“An outlay of Rs.1,575.36 crores is provided for this scheme during 2015-2016.”
“ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், 35.36 இலட்சம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, மருத்துவச் சேவைகளை வழங்கி பயனளித்து வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 1,575.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், 54.63 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வகை கலவை சாதம் (variety meals) வழங்கப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 1470.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.60 · ¶106 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,696 crores
“A sum of Rs.1,696 crores has been provided for ICDS scheme in this Interim Budget.”
“அங்கன்வாடி மையங்களில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், 601.91 கோடி ரூபாய் செலவில் 15,313 புதிய அங்கன்வாடி மையங்களைக் கட்டியும், 29.52 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்த 16,402 கழிவறைகளை அமைத்தும், 12.34 கோடி ரூபாய் செலவில் 20,558 மையங்களுக்கு மின் இணைப்பு வழங்கியும், 123.93 கோடி ரூபாய் செலவில் 15,399 மையங்களை பழுது பார்த்தும், இம்மையங்களின் தரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய் செலவில் 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1696 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,699.79 crores
“A sum of Rs.1,699.79 crores has been provided for the ICDS scheme in the Revised Budget.”
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்” கீழ், ஊட்டச்சத்து மிக்க கலவை சாதம் வழங்கப்பட்டு, தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 26.88 இலட்சம் குழந்தைகளும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 28.17 இலட்சம் குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சத்துணவுத் திட்டத்திற்காக 1644.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்” (ICDS) கீழ், 6 முதல் 36 மாதங்கள் வரை உள்ள 17.63 இலட்சம் குழந்தைகளுக்கும், 2 முதல் 5 வருடங்கள் வரை உள்ள 13.97 இலட்சம் குழந்தைகளுக்கும், 6.55 இலட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், 4.02 இலட்சம் வளரிளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 1699.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶139) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.67 · ¶139 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,779 crore
“A sum of Rs.1,687 crore and Rs.1,779 crore have been provided for the Nutritious Meal Programme and ICDS scheme respectively in the Budget Estimates 2017-2018.”
“குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் அளவை உயர்த்தவும், பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தை” 43,143 சத்துணவு மையங்கள் மூலம் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்துமிக்க உணவும், இணை உணவும் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில், 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு முறையே 1687 கோடி ரூபாய் மற்றும் 1779 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலத் துறைக்காக 4,781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶132) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.72 · ¶132 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.2,146.30 crore
“In the Budget Estimates, Rs.1,747.72 crore and Rs.2,146.30 crore have been allocated for the Nutritious Meal programme and the ICDS scheme respectively.”
““புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்” 43,143 சத்துணவு மையங்கள் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சத்துணவுத் திட்டத்திற்கு 1,747.72 கோடி ரூபாயும், “ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு” 2,146.30 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. “ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்” கீழ், 100.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலத் துறைக்காக 5,61162 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.69 · ¶119 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.2,052.22 crore
“A sum of Rs.2,052.22 crore has been provided in the Budget Estimates 2019-2020 for implementing the ICDS scheme.”
“ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் 54,439 மையங்கள் மூலம் 24.23 இலட்சம் குழந்தைகளும் 3.91 இலட்சம் வளரிளம் பெண்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்து மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ணச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள் திட்டத்தைச் செயல்படுத்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,052.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலத் துறைக்காக 5,305.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.67 · ¶121 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.2,535.54 crore
“A provision of Rs.2,535.54 crore has been provided in the Budget Estimates for 2020-21 for ICDS.”
“43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் 48.57 இலட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1863.32 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஆரம்ப கால கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,535.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶161) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.89 · ¶161 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.2,536.69 crore
“A total sum of Rs.2,536.69 crore has been allocated for the ICDS scheme in the Revised Budget Estimates for the year 2021-22.” financedept_2021-22_speech_en_revised · p.68 · ¶159 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.2,634 crore
“In the Interim Budget Estimates for 2021-22, an amount of Rs.2,634 crore has been provided for ICDS.”
“புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் மதிய சத்துணவுத் திட்டம் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 43,246 மதிய சத்துணவுக் கூடங்கள் வாயிலாக 40.09 இலட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1953.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 54,439 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 மாதம் முதல் 6 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 33 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். வளர் இளம் பெண்களுக்கு அவர்களது ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க பல்வகை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 2 வயது முதல் 5 வயது வரையிலான 11.33 இலட்சம் குழந்தைகளுக்கு சூடான கலவை சாதம் வழங்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,634 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.74 · ¶118 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.2,542 crore
“An amount of Rs.2,542 crore has been provided towards Integrated Child Development Services (ICDS)”
“ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.31 · ¶85 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.3,676 crore
“A sum of Rs.3,676 crore will be allocated for the Integrated Child Development Scheme in the Budget Estimates 2025-26.”
“மேலும், குழந்தைகள் நல மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி டுசய்திடும் வகையில், வரும் நிதியாண்டில் சுமார் 83 கோடி ரூபாய் செலவில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 500 குழந்தைகள் நல மையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் 3676 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 8,597 கோடி ரூபாய் ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.29 · ¶56 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Anganwadi Centre buildings · 2011-12 –2025-26
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years