Welfare · recurring

Free rice / food subsidy under PDS

13 budgets named it 13 year span 94,442 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 12 later budgets, most recently 2023-24.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 4,500 crores transfer scheme AIADMK · revised

“In view of the additional subsidy involved in providing free rice under the Public Distribution System, ```` 4,500 crores is budgeted during 2011-2012 as food subsidy.”
“அனைத்துத்‌ தரப்பு மக்களுக்கும்‌ உணவுப்‌ பாதுகாப்பை வழங்கும்‌ வகையில்‌ அனைவருக்குமான பொது விநியோகத்‌ திட்டத்தை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. இந்த அரசு பதவி ஏற்றவுடன்‌ அரிசி பெறத்‌ தகுதியான 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, இலவச அரிசி வழங்கி தேர்தல்‌ வாக்குறுதியை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நிறைவேற்றியுள்ளார்கள்‌. இந்த அரசு சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணையை சலுகை விலையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தொடர்ந்து வழங்கும்‌. இந்தப்‌ பொது விநியோகத்‌ திட்டம்‌ மேலும்‌ சீரமைக்கப்பட்டு தவறுகள்‌ நடைபெறாவண்ணம்‌ திறம்பட கண்காணிக்கப்படும்‌. அரிசி கடத்தல்‌ போன்ற குற்றங்களில்‌ ஈடுபடுபவர்‌ மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த அரசு பதவியேற்ற கடந்த இரண்டு மாதங்களுக்குள்‌ கள்ளச்‌ சந்தை தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 67 நபர்கள்‌ தடுப்புக்‌ காவலில்‌ வைக்கப்பட்டுள்ளனர்‌. பொது விநியோகத்‌ திட்ட அரிசியை கள்ளத்தனமாகக்‌ கடத்தியவர்களுக்கு எதிராக 1519 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும்‌ 6,227 குவிண்டால்‌ அரிசி பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது. முந்தைய அரசால்‌ கலைக்கப்பட்ட ஐந்து எல்லையோர ரோந்துப்‌ படைகள்‌ மீண்டும்‌ புதுப்பிக்கப்படும்‌ எல்லைப்‌ பகுதிகளில்‌ அரிசிக்‌ கடத்தலை தடுப்பதற்காக, ஒரு புதிய உணவு வழங்கல்‌ குற்றத்‌ தடுப்புப்‌ பிரிவு பொள்ளாச்சியில்‌ ஏற்படுத்தப்படும்‌. இன்றியமையாப்‌ பொருட்கள்‌ கடத்தப்படுவதைத்‌ தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்‌ என்பது இதன்மூலம்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இலவச அரிசி வழங்குவதனால்‌ ஏற்படும்‌ கூடுதல்‌ மானியத்தையும்‌ கணக்கில்‌ கொண்டு 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கு உணவு மானியத்திற்காக திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 4,500 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.30 · ¶48 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 transfer scheme DMK · interim

“On the day of taking charge on May 13th, 2006, this Government passed an order reducing the selling price of rice distributed under Public Distribution System from ` 3.50 per kilogram to ` 2.00 per kilogram with the objective of providing food security to every one. In the year 2008, on Perarignar Anna’s Birth Anniversary, the price of rice distributed under Public Distribution System was further reduced to ` one per kilogram.”

tnbudget_2011-12_speech_en_interim · p.15 · ¶34 · source PDF ↗ · on the map →

2011-12 ` 4,000 crores transfer scheme DMK · interim

“In this Interim Budget ` 4,000 crores has been allocated for food subsidy.”

tnbudget_2011-12_speech_en_interim · p.15 · ¶35 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.4,900 crores continuation AIADMK

“For 2012-2013, Rs.4,900 crores has been set apart by this Government to meet the food subsidy.”
“தேர்தல்‌ அறிக்கையில்‌ அளித்த வாக்குறுதியின்படி, 1.6.2011 முதல்‌, 1.85 கோடி அரிசி அட்டைதாரர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ விலையில்லா அரிசி வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தார்கள்‌. நாட்டிலேயே அனைவருக்கும்‌ முழுமையான உணவுப்‌ பாதுகாப்பு அளிக்கும்‌ இத்தகைய திட்டத்தைச்‌ செயல்படுத்தியுள்ள ஒரே மாநிலம்‌ தமிழகம்‌ மட்டும்தான்‌. துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு, பாமாயில்‌, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றையும்‌ சலுகை விலையில்‌ இந்த அரசு வழங்கி வருகிறது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌, உணவு மானியத்திற்காக 4,900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அரசால்‌ 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ ஏற்படுத்தப்பட்ட விலை கட்டுப்பாடு நிதியம்‌ மூலம்‌, இந்த ஆண்டில்‌, மிளகாய்வற்றல்‌, புளி ஆகியவற்றை வாங்கி அடக்க விலையிலேயே விற்பனை செய்து, வெளிச்‌ சந்தையில்‌ அவற்றின்‌ விலையைக்‌ கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. தொழில்‌ துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.34 · ¶53 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.4,900 crores continuation AIADMK

“A sum of Rs.4,900 crores has been provided in the Budget Estimates 2013-2014 for food subsidy.”

financedept_2013-14_speech_en · p.22 · ¶53 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.5,300 crore continuation AIADMK

“For the year 2014-2015, the allocation for food subsidy has been further enhanced to Rs.5,300 crore.”
“அனைவருக்கும்‌ பயனளிக்கக்கூடிய முன்மாதிரியான பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலமாக, இந்த அரசு உணவுப்‌ பாதுகாப்பை அனைத்துத்‌ தரப்பு மக்களுக்கும்‌ உறுதி செய்து வருகிறது. மாநிலத்தில்‌ உள்ள ஒரு கோடியே 84 இலட்சம்‌ அரிசி அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்தோடு, சிறப்புப்‌ பொது விநியோகத்‌ திட்டத்தில்‌ மானிய விலையில்‌ பருப்புகளும்‌, சமையல்‌ எண்ணெயும்‌ வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்தவாறு, 281 கோடி ரூபாய்‌ செலவில்‌ அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும்‌ நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலமாக சிறப்புப்‌ பொங்கல்‌ பரிசுப்‌ பைகள்‌ வழங்கப்பட்டன. 2013-2014 ஆம்‌ ஆண்டிற்கு உணவு மானியமாக 4,900 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது திருத்திய மதிப்பீட்டில்‌ 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு இந்த ஒதுக்கீடு 5,300 கோடி ரூபாயாக மேலும்‌ உயர்த்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.21 · ¶39 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.5,300 crores continuation AIADMK

“the State will continue to implement the universal PDS and an allocation of Rs.5,300 crores has been made as food subsidy for the coming financial year.”
“அனைவருக்கும்‌ உணவுப்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2011 ஜூன்‌ மாதம்‌ முதல்‌, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும்‌ விலையில்லா அரிசியை இந்த அரசு வழங்கி வருகிறது. மேலும்‌ சர்க்கரை, கோதுமை மற்றும்‌ மண்ணெண்ணெய்‌ ஆகியவற்றையும்‌ மானிய விலையில்‌ இந்த அரசு அளித்து வருகிறது. இதனுடன்‌, சிறப்புப்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌ பருப்பு மற்றும்‌ சமையல்‌ எண்ணெய்யும்‌ மானிய விலையில்‌ வழங்கப்பட்டு வருகின்றன. பருப்பு வகைகளின்‌ சந்தை விலை உயர்ந்துள்ளதால்‌ சிறப்புப்‌ பொது விநியோகத்‌ திட்டத்திற்கான செலவும்‌ பெருமளவு உயர்ந்துள்ளது. இத்தகைய நிதிச்சுமைக்கு இடையிலும்‌, அனைவருக்கும்‌ பயனளிக்கக்கூடிய பொது விநியோகத்‌ திட்டத்தை நமது மாநிலம்‌ தொடர்ந்து செயல்படுத்தும்‌. வரும்‌ நிதியாண்டில்‌ உணவு மானியத்திற்கு 5,300 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.24 · ¶37 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.5,500 crores continuation AIADMK · interim

“In this Interim Budget, a sum of Rs.5,500 crores has been provided as food subsidy.”
“2011 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ பதவியேற்ற முதல்‌ நாளன்றே, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும்‌ விலையில்லா அரிசி வழங்கிட ஆணையிட்டு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அளித்த தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்‌. அனைவருக்கும்‌ பயனளிக்கக்கூடிய முன்னோடி பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 191 கோடி அரிசி அட்டைகள்‌ உள்ளிட்ட 2.02 கோடி குடும்ப அட்டைகள்‌ இன்றளவில்‌ புழக்கத்தில்‌ உள்ளன. மத்திய அரசு சர்க்கரை லெவியை நிறுத்தி அதன்‌ மானியத்தைக்‌ கட்டுப்படுத்தியுள்ளபோதிலும்‌, கிலோ ஒன்றிற்கு 13.50 ரூபாய்‌ என்ற மானிய விலையில்‌ இந்த அரசு மாதந்தோறும்‌ சுமார்‌ 36,500 டன்‌ சர்க்கரையை தொடர்ந்து வழங்கி வருகிறது. சந்தை விலை அதிக அளவு உயர்ந்துள்ள போதிலும்‌, பருப்பு வகைகளை கிலோ ஒன்றிற்கு 30 ரூபாய்‌ விலையிலும்‌, சமையல்‌ எண்ணெய்‌ லிட்டர்‌ ஒன்றிற்கு 25 ரூபாய்‌ என்ற விலையிலும்‌ இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, உணவு மானியமாக 25,000 கோடி ரூபாயும்‌, பொது விநியோகத்திட்ட கடைகளை நடத்துவதற்காக கூட்டுறவு அமைப்புகளுக்கு அளிக்கப்படும்‌ நிர்வாக மானியமாக 762.93 கோடி ரூபாயும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. உணவு மானியத்திற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 5,500 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.27 · ¶38 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.5,500 crore continuation AIADMK

“An allocation of Rs.5,500 crore has been made in the Budget Estimates 2017-2018 for food subsidy.”

tnbudget_2017-18_speech_en · p.27 · ¶44 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.6,000 crore continuation AIADMK

“Besides this, an amount of Rs.6,000 crore has been provided in the Budget Estimates 2018-2019 for food subsidy.”
“தமிழகத்தில்‌ 2016 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ 1-ஆம்‌ தேதி முதல்‌, தேசிய உணவுப்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, 2013 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும்‌, அனைவருக்குமான பொது விநியோகத்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன்‌ அடிப்படையில்‌, 34,773 நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ 183 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இதன்‌ மூலம்‌, அவர்களுக்கான உணவுப்‌ பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, விலையில்லா அரிசி வழங்கப்படுவதுடன்‌, சர்க்கரை, மண்ணெண்ணெய்‌, துவரம்‌ பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌ ஆகியவற்றை மானிய விலையிலும்‌ அரசு தொடர்ந்து வழங்கும்‌. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ வெளிப்படைத்‌ தன்மையை அதிகரிப்பதற்காகவும்‌, சிறப்பாகச்‌ செயல்படுத்துவதற்காகவும்‌, ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட ஸ்மார்ட்‌ அட்டைகளை அனைத்துக்‌ குடும்பங்களுக்கும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. ஊரக மற்றும்‌ நகர்ப்புர நியாயவிலைக்‌ கடைகளில்‌ ஏற்படும்‌ நட்டத்தினை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஈடு செய்வதற்காக 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட 22293 கோடி ரூபாய்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 437.69 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இத்தொகை 460.17 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 6,000 கோடி ரூபாய்‌ உணவு மானியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.28 · ¶42 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.6,000 crore continuation AIADMK

“During 2019-2020, an allocation of Rs.6,000 crore has been provided for food subsidy and Rs.333.81 crore is provided to co-operatives for implementing public distribution system.”

tnbudget_2019-20_speech_en · p.30 · ¶50 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.6,500 crore continuation AIADMK

“In the Budget Estimates for 2020-21, a total amount of Rs.6,500 crore has been provided for food subsidy and Rs.400 crore as subsidy for Co-operatives implementing the Public Distribution System.”
“கடந்த 2013 ஆம்‌ ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உணவுப்‌ பாதுகாப்புச்‌ சட்டத்திற்கு உட்பட்டு, தமிழக அரசு அனைவருக்குமான பொது விநியோகத்‌ திட்டத்தை வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தி வருகிறது. முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோக முறை 38.51 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேலும்‌ மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்‌ குடும்ப அட்டை வைத்திருப்போர்‌, மாநிலத்தின்‌ எந்தவொரு நியாயவிலைக்‌ கடையிலும்‌ தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும்‌ திட்டம்‌ விரைவில்‌ செயல்படுத்தப்படும்‌. இதுவரை, மாநிலம்‌ முழுவதும்‌ 585 நியாய விலைக்‌ கடைகள்‌ அம்மா மினி கூட்டுறவு சிறப்பு அங்காடிகளாக மேம்படுத்தப்பட்டு, 300-க்கும்‌ மேற்பட்ட பொருட்கள்‌ பொதுமக்களின்‌ நலனுக்காக 5 சதவீதம்‌ தள்ளுபடியில்‌ விற்பனை செய்யப்படுகின்றன. சிறப்பு பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2020-21 ஆம்‌ நிதியாண்டிலும்‌ துவரம்‌ பருப்பு மற்றும்‌ சமையல்‌ எண்ணெய்‌ ஆகியவை மானிய விலையில்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. 2020 ஆம்‌ ஆண்டு ஜனவரியில்‌, குடும்பம்‌ ஒன்றிற்கு தலா 1000 ரூபாயை பொங்கல்‌ பரிசாக வழங்குவதற்காக அரசு ஏற்கெனவே 2,363.13 கோடி ரூபாய்க்கு ஒப்புதல்‌ அளித்துள்ளது. 2020-21 ஆம்‌ நிதியாண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மொத்தம்‌ 6,500 கோடி ரூபாய்‌ உணவு மானியத்திற்காகவும்‌, பொது விநியோகத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக 400 கோடி ரூபாயும்‌ வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்வளம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.28 · ¶48 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.8,437.57 crore enhancement DMK · revised

“Under the special Public Distribution System supply of lentils and edible oil at subsidized rates will be continued during the financial year 2021-22 as well. In the Revised Budget Estimates for 2021-22 the provision for food subsidy has been further increased to Rs.8,437.57 crore.”
“பொது விநியோகத்‌ திட்டம்‌ வலுப்படுத்தப்படுவதையும்‌ தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள்‌ கிடைப்பதையும்‌ உறுதிப்படுத்துவதற்கு இந்த அரசு தீர்மானித்துள்ளது. தேவையுள்ள இடங்களில்‌ புதிய நியாயவிலைக்‌ கடைகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கு குழு ஒன்று ஏற்படுத்தப்படும்‌, சிறப்பு பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மானிய விலையில்‌ பருப்பு வகைகள்‌ மற்றும்‌ சமையல்‌ எண்ணெய்‌ வழங்குவது 2021-22 ஆம்‌ நிதியாண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌, உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு 8,437.57 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீர்‌ வளங்கள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.20 · ¶42 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.9,604.27 crore enhancement AIADMK · interim

“In the Revised Estimates 2020-21, the provision for food subsidy has been stepped up from Rs.6,500 crore to Rs.9,604.27 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.31 · ¶46 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.7,500 crore continuation DMK

“An amount of Rs.7,500 crore has been provided in this Budget towards Food Subsidy in the Public Distribution System.”

financedept_2022-23_speech_en · p.17 · ¶43 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.10,500 crore transfer scheme DMK

“An amount of Rs.10,500 crore has been provided in this Budget towards Food Subsidy in the Public Distribution System.”

financedept_2023-24_speech_en · p.28 · ¶62 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector