Welfare · dormant

Reimbursement of loss to fair price shops (PDS)

1 budget named it 1 year span 460 ₹ crore allocated AIADMK government

First announced in 2018-19 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2018-19 Rs.460.17 crore continuation AIADMK

“The Government has increased the allocations to co-operatives for reimbursing the loss incurred by rural and urban fair price shops from Rs.222.93 crore in the Budget Estimates 2017-2018 to Rs.437.69 crore in the Revised Estimates and further to Rs.460.17 crore in the Budget Estimates for 2018-2019.”
“தமிழகத்தில்‌ 2016 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ 1-ஆம்‌ தேதி முதல்‌, தேசிய உணவுப்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, 2013 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும்‌, அனைவருக்குமான பொது விநியோகத்‌ திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன்‌ அடிப்படையில்‌, 34,773 நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ 183 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இதன்‌ மூலம்‌, அவர்களுக்கான உணவுப்‌ பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, விலையில்லா அரிசி வழங்கப்படுவதுடன்‌, சர்க்கரை, மண்ணெண்ணெய்‌, துவரம்‌ பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌ ஆகியவற்றை மானிய விலையிலும்‌ அரசு தொடர்ந்து வழங்கும்‌. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ வெளிப்படைத்‌ தன்மையை அதிகரிப்பதற்காகவும்‌, சிறப்பாகச்‌ செயல்படுத்துவதற்காகவும்‌, ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட ஸ்மார்ட்‌ அட்டைகளை அனைத்துக்‌ குடும்பங்களுக்கும்‌ இந்த அரசு வழங்கியுள்ளது. ஊரக மற்றும்‌ நகர்ப்புர நியாயவிலைக்‌ கடைகளில்‌ ஏற்படும்‌ நட்டத்தினை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஈடு செய்வதற்காக 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட 22293 கோடி ரூபாய்‌, திருத்த மதிப்பீடுகளில்‌ 437.69 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இத்தொகை 460.17 கோடி ரூபாயாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 6,000 கோடி ரூபாய்‌ உணவு மானியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.28 · ¶42 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector