Health · dormant
Free sanitary napkins for rural girls
First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2011-12 ` 46 crores
“This Government proposes to distribute the napkins free of cost to these rural girls through the ICDS network using the Village Health Nurses in the entire State. A sum of ```` 46 crores is provided in the Revised Budget Estimates for this purpose.”
“இளம் பெண்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எதிர்வரும் காலத்தில் தொற்று நோய்களையும், கருவுறாமையின் ஆபத்தையும் குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். கிராமப்புறங்களில் வாழும் இத்தகையப் பெண்களுக்கு ஆறு சானிடரி நாப்கின் உள்ள ஒரு பேக்கெட் ஆறு ரூபாய் என்ற மானிய விலையில் பத்து மாவட்டங்களில் விநியோகிக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களின் மூலமாக மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் வாழும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் இலவசமாகவே வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் செலவாகும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.58 · ¶94 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.55 crores
“This Government has announced a revolutionary scheme for free distribution of sanitary napkins to rural girls. This scheme, which is to be launched by the Hon'ble Chief Minister, will lead to great improvement in personal hygiene and will prevent health complications. Over 41 lakh adolescent girls in the 10-19 age group in rural areas stand to benefit from this first-of-its-kind initiative in India, covering the entire State. Sanitary napkins will be distributed through schools and anganwadis. An amount of Rs.55 crores has been provided for this scheme in the next financial year.”
“கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்களை அளிக்கும் புரட்சிகரமான திட்டத்தை இந்த அரசு அறிவித்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்ப உள்ள இத்திட்டம், பெண்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கும் வழிவகுக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முன் முயற்சியின் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 10 வயதிலிருந்து 19 வயதிற்கு உட்பட்ட 41 லட்சம் வளரிளம் பெண்கள் பயன்பெறுவார்கள். பள்ளிகள், அங்கன்வாடிகள் மூலமாக இந்த சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.55 · ¶86 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.54.63 crores
“Sanitary Napkins will continue to be supplied to 32.79 lakh girl children during 2013-2014 at a cost of Rs.54.63 crores.” financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.54.63 crore
“Supply of Sanitary Napkins to 36.07 lakh girl children at a cost of Rs.54.63 crore.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.60.58 crores
“Similarly, an amount of Rs.50 crores has been allocated for Amma Babycare Kit Scheme and an amount of Rs.60.58 crores has been allocated for the Menstrual Hygiene Programme in this Budget.”
“முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 2,110.64 கோடி ரூபாய் செலவில் 10.05 இலட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ், 764.20 கோடி ரூபாய் பெற்று, அதன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச் செலவிட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கு 781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 668.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத் திட்டத்திற்கு 50 கோடி ரூபாயும், மகளிர் சுகாதாரத் திட்டத்திற்கு 60.58 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.51 · ¶86 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.61 crore
“A sum of Rs.61 crore has been provided in this Budget Estimates for the distribution of sanitary napkins under the Menstrual Hygiene Programme.” tnbudget_2017-18_speech_en · p.59 · ¶106 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.60.58 crore
“an amount of Rs.60.58 crore has been provided for the implementation of sanitary napkin distribution scheme under the Menstrual Hygiene Programme.”
“மாநிலத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்” கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 12,000 ரூபாய் நிதியுதவியை 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவலாக உள்ள இரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட நிதியில் 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம்” வழங்கப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இந்த முன்னோடித் திட்டத்திற்காக 1,001.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்”, 'அம்மா மகப்பேறு சஞ்சீவி” திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். இது தவிர, மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ், சானிட்டரி நாப்கின்கள் வழங்க வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 60.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.59 · ¶99 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years
- National Health Mission (overall) · 5 years