Health · recurring

National Health Mission (overall)

5 budgets named it 12 year span 9,839 ₹ crore allocated 20 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2014-15 and named again in 4 later budgets, most recently 2025-26.

Allocated by budget year

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2014-15 around Rs.1,400 crore continuation AIADMK

“Various schemes under the National Health Mission will be implemented with an outlay of around Rs.1,400 crore in 2014-2015.”
“தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்‌ ஒரு பகுதியாக, குழந்தைகளைப்‌ பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும்‌ ஒரு புதிய முன்‌ முயற்சியை இந்த அரசு செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில்‌, ஒவ்வொரு வட்டாரத்திற்கும்‌, ஒரு மருத்துவர்‌, ஒரு செவிலியர்‌, ஒரு மருந்தாளுநர்‌ ஆகியோரைக்‌ கொண்ட இரண்டு குழுக்கள்‌, அதாவது 770 நடமாடும்‌ மருத்துவக்‌ குழுக்கள்‌ அமைக்கப்படும்‌. கடுமையான நோய்‌ இருப்பதாக கண்டறியப்படும்‌ குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும்‌ சேவைகளை அளித்திட, 31 மாவட்டங்களிலும்‌ மாவட்டந்தோறும்‌ ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம்‌ வீதம்‌, மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளிலும்‌, மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை இல்லாத இடங்களில்‌ மாவட்டத்‌ தலைமை மருத்துவமனைகளிலும்‌ நிறுவப்படும்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, தேசிய ஊரகச்‌ சுகாதார இயக்கத்தின்‌ கீழ்‌ பல்வேறு திட்டங்கள்‌ 1,400 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிறைவேற்றப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.47 · ¶95 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.1,342.67 crores continuation AIADMK

“During 2015-2016, the National Health Mission will be continued with an outlay of Rs.1,342.67 crores.”
“தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ்‌, ஆரம்ப நிலை (primary care), இரண்டாம்‌ நிலை (Secondary care) மருத்துவக்‌ கட்டமைப்புகள்‌ மற்றும்‌ தாய்‌-சேய்‌ நல சுகாதாரப்‌ பணிகளை வலுப்படுத்த இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள்‌ மிகுந்த பாராட்டைப்‌ பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில்‌, இந்த சுகாதார இயக்கத்தின்‌ கீழ்‌, 265.56 கோடி ரூபாய்‌ செலவில்‌ 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளதோடு, 122 சுகாதார நிலையங்கள்‌ தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதாரம்‌ மட்டுமன்றி இரண்டாம்‌ நிலை, மூன்றாம்‌ நிலை §=6 (Tertiary care) சுகாதார வசதிகளை மேம்படுத்துவதிலும்‌ அரசு எப்போதும்‌ உறுதியாக உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்க, மருத்துவக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளின்‌, கட்டமைப்புகளை மேம்படுத்த 734.42 கோடி ரூபாயும்‌, உபகரணங்கள்‌ வாங்க 360.51 கோடி ரூபாயும்‌ ஒதுக்கப்பட்டு, 3,290 கூடுதல்‌ பணியிடங்களும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும்‌, இதர இரண்டாம்‌ நிலை மருத்துவமனைகளிலும்‌ 113.51 கோடி ரூபாய்க்கு கூடுதல்‌ கட்டமைப்பு வசதிகளும்‌ 74.40 கோடி ரூபாய்க்கு தளவாடங்களும்‌ உபகரணங்களும்‌ வாங்கவும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 1342.67 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ தேசிய சுகாதார இயக்கம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.52 · ¶88 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,368 crores continuation AIADMK · interim

“For 2016-2017, an allocation of Rs.1,368 crores is made for National Health Mission in this Interim Budget.”
“நமது மாநிலத்தில்‌ மகப்பேறு மற்றும்‌ குழந்தைகள்‌ நல சேவைகளை மேலும்‌ வலுப்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தை இந்த அரசு சிறப்பாகச்‌ செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1368 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்‌ திட்டம்‌ முடிவுற்றுள்ளபோதிலும்‌, இத்திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்ட தொற்று நோய்‌ அல்லாத நோய்கள்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌, மருத்துவ மேலாண்மை தகவல்‌ அமைப்பு போன்ற முன்னோடி முயற்சிகள்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. நகர்ப்புர மருத்துவக்‌ கட்டமைப்பை மேலும்‌ வலுப்படுத்துவதற்காக, 1634 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர மருத்துவக்‌ கட்டமைப்புத்‌ திட்டத்திற்கான ஜப்பான்‌ பன்னாட்டுக்‌ கூட்டுறவு முகமையின்‌ நிதியுதவி விரைவில்‌ பெறப்பட்டு, 2016-2017 ஆம்‌ ஆண்டு முதல்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.48 · ¶73 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,423.38 crores continuation AIADMK · revised

“As a measure to make primary healthcare accessible to the people, this Government will establish 37 new Primary Health Centres (PHCs) and upgrade 24 existing PHCs into 30 bedded PHCs during 2016-2017. An amount of Rs.1,423.38 crores is allocated under the 'National Health Mission' (NHM) for the year 2016-2017, to take up projects including establishment of new Maternal and Child Health Wings at Cuddalore and Tiruppur at a cost of Rs.20 crores each; strengthening of existing trauma care units at Tambaram, Krishnagiri and Villupuram at a cost of Rs.10 crores each.”
“அனைத்து மக்களும்‌ பொது சுகாதார சேவையை எளிதில்‌ பெறுவதை உறுதி செய்ய, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசு 37 ஆரம்ப சுகாதார நிலையங்களைப்‌ புதிதாக அமைப்பதுடன்‌, ஏற்கெனவே இயங்கிவரும்‌ 24 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள்‌ கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாகத்‌ தரம்‌ உயர்த்தும்‌. கடலூர்‌ மற்றும்‌ திருப்பூரில்‌ தலா 20 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய மகப்பேறு மற்றும்‌ குழந்தைகள்‌ நலப்‌ பிரிவுகளை ஏற்படுத்துவது; தலா 10 கோடி ரூபாய்‌ செலவில்‌ தாம்பரம்‌, கிருஷ்ணகிரி மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள விபத்து சிகிச்சை மையங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, “தேசிய சுகாதாரத்‌ திட்டத்தின்‌” (National Health Mission) கீழ்‌ 1423.38 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனக்‌ கணக்கில்‌ செலவுகள்‌ 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ மூலதனப்‌ பணிகளுக்கான செலவுகளை உயர்த்த மாநில அரசு கருதியுள்ளது. அதன்‌ விளைவாக, மூலதனம்‌ குறித்த செலவுகளுக்கு 2015-2016 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீட்டில்‌ செய்யப்பட்ட ஒதுக்கீடான 22,878.45 கோடி ரூபாய்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 24,679.38 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இது 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 9.25 சதவீதம்‌ மற்றும்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 11.13 சதவீதமாகவும்‌ மேலும்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, வருவாய்ப்‌ பற்றாக்குறை 9,154.78 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டது. எனினும்‌, தொடர்ந்து வரும்‌ உலகப்‌ பொருளாதார மந்த நிலையால்‌ வரி வருவாய்‌ வளர்ச்சி குறைவாக உள்ளது. மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌ வளர்ச்சி விகிதத்தில்‌ குறிப்பிடத்‌ தகுந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோலியப்‌ பொருட்கள்‌ விற்பனை மீதான வரி வருவாயில்‌ கடும்‌ வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால்‌, வணிக வரி வரவுகளில்‌ குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகிறது. இக்காரணிகளைக்‌ கணக்கில்‌ கொண்டு 2016-2017 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை 15,854.47 கோடி ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ நிதிப்‌ பற்றாக்குறை 40,533.84 கோடி ரூபாயாக இருக்கும்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 2.96 சதவீதமாகும்‌. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறை விகிதம்‌ 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 3.34 சதவீதமாகவும்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 2.96 சதவீதமாகவும்‌ இருக்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ ஏற்படக்கூடிய கூடுதல்‌ செலவினங்களைச்‌ சமாளித்து நிதிப்‌ பற்றாக்குறையை வரையறுக்கப்பட்ட மூன்று சதவீதத்திற்குள்ளாகவே கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசு கூடுதல்‌ நிதி ஆதாரத்தைத்‌ திரட்டுவது அல்லது செலவுகளைக்‌ கட்டுப்படுத்துவது அவசியமாகும்‌. V. கடன்கள்‌ பதினான்காவது நிதி ஆணையம்‌ பரிந்துரைத்த கணக்கீட்டின்படி மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்தக்‌ கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌, கடன்‌ வரவுகள்‌ மற்றும்‌ திரும்பச்‌ செலுத்துதல்‌ மதிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசு, 2011-2012 ஆம்‌ ஆண்டின்‌ புள்ளி விவரங்களின்‌ அடிப்படையில்‌ மாநில மொத்த உற்பத்தி மதிப்பை திருத்தம்‌ செய்துள்ளதால்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான நிகரக்‌ கடன்‌ வரம்பு 37,782 கோடி ரூபாயிலிருந்து 41085 கோடி ரூபாயாகத்‌ திருத்தப்பட்டுள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ நிகர கடன்‌ வாங்குதல்‌ 40,529 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன்‌ 31.03.2017 அன்று, 2,52,431 கோடி ரூபாயாக இருக்கும்‌. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்‌ 18.43 சதவீதம்‌ மட்டுமே ஆகும்‌. VI. கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்வொரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2015 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின்‌ அளவு முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 49.70 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 4.91 சதவீதமாகவும்‌ உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவீதம்‌ அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.50 சதவீதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 31.3.2015 அன்று உள்ளபடி மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 9.28 சதவீதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 0.92 சதவீதமாகவும்‌ உள்ளது. முடிவுரை மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ மந்த நிலையிலிருந்து மீண்டு வளர்ச்சிப்‌ பாதையில்‌ செல்வதை, 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 4.85 சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின்‌ வளர்ச்சி விகிதமானது நிலையான விலைகளின்‌ அடிப்படையில்‌), 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 8.79 சதவீதமாக அதிகரித்துள்ளது தெளிவாக்குகிறது. இருப்பினும்‌, மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌, குறிப்பாக, வணிக வரி வருவாய்‌ வரவுகளின்‌ குறைந்த வளர்ச்சி விகிதம்‌, வருவாய்‌ வரவுகளில்‌ கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌, மத்திய அரசு மாநிலங்களுக்குப்‌ பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில்‌ தமிழகத்தின்‌ பங்கு குறைந்ததும்‌, மத்திய அரசால்‌ காலம்‌ தாழ்த்தி உதவி மானியங்கள்‌ விடுவிக்கப்படுவதும்‌, மத்திய அரசு பொறுப்பேற்கும்‌ திட்டப்‌ பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினைக்‌ குறைத்துள்ளதும்‌ மாநிலத்தின்‌ நிதிநிலையை கூடுதலாக பாதித்துள்ளது. எனினும்‌, செலவுகளின்‌ பாங்கு நிலையாக உள்ளது. வருவாய்‌ வரவுகளில்‌ காணப்படும்‌ இந்த சுணக்கமான சூழ்நிலையிலும்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ நிதிப்‌ பற்றாக்குறையைத்‌ தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில்‌ ஒட்டுமொத்த நிதிப்‌ பற்றாக்குறை, நிகரக்‌ கடன்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ நிலுவையில்‌ உள்ள மொத்தக்‌ கடன்‌ விகிதம்‌ ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும்‌. மாநிலப்‌ பொருளாதாரத்தை வளர்ச்சிப்‌ பாதையில்‌ கொண்டு செல்ல அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும்‌ தொடர்ந்து எடுத்து வருகிறது. 262626 226 962626 9626262626 KOK 2K OK” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶111) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.55 · ¶111 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2018-19 Rs.1,551.22 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.1,551.22 crore has been allocated for the National Health Mission.”

financedept_2018-19_speech_en · p.57 · ¶98 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.2,754 crore continuation DMK

“An amount of Rs.2,754 crore has been provided for National Health Mission”
“தேசிய நலவாழ்வுக்‌ குழுமம்‌ மூலம்‌ டசயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு 2754 கோடி ரூபாயும்‌, டாக்டர்‌ முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்‌ திட்டத்திற்கு 1092 கோடி ரூபாயும்‌, முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்கு 1464 கோடி ரூபாயும்‌, அவசர ஊர்தி சேவைகளுக்கு 348 கோடி ரூபாயும்‌, இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறைக்கு 21906 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.48 · ¶104 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector