Health · dormant
Tamil Nadu Health System Project (TNHSP)
First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2011-12 ` 194 crores
“During 2011-2012 ` 194 crores is allocated under TNHSP.”
“மாண்புமிகு முதலமைச்சரின் கடந்த ஆட்சி காலத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், 627.72 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில், 564.94 கோடி ரூபாய் உலக வங்கியின் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், மாவட்ட, வட்ட அளவில் உள்ள பொது மருத்துவமனைகளில் தாய்மார்கள், பச்சிளங் குழந்தைகள் சுகாதார சேவைகளை எளிதாக அணுகி பெற வழி செய்தல், அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 2011-2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்திற்கு 194 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. '108* ஆம்புலன்ஸ் சேவையின் மூலமாக வழங்கப்படும் அவசரகால போக்குவரத்து சேவையை மருத்துவமனைகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதிகளையும் அனுமதிப்பது (inter facility transfer) போன்ற கூடுதல் சேவைகளுடன் இத்திட்டச் செயல்பாடு மேம்படுத்தப்படும். பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளில் கூடுதல் வசதிகளுடன் கூடிய சிறப்பு ஊர்திகள்மூலம் இந்த சேவை அளிக்கப்படும். பச்சிளங் குழந்தைகளின் அவசரகால சேவைக்கென மாவட்டந்தோறும் ஊர்தி ஒன்று தனியாக அமர்த்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.56 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 628 crores
“Tamil Nadu Health System Project is being implemented from 2006 at an estimated cost of ` 628 crores with the World Bank assistance for the improvement of infrastructure facilities in taluk and district hospitals. This scheme has been further extended upto 2013.” tnbudget_2011-12_speech_en_interim · p.23 · ¶54 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.158 crores
“The Tamil Nadu Health Systems Project, initiated during the previous tenure of this Government, has contributed immensely to the strengthening of maternal and child health services in the district and taluk hospitals in the State. Under this programme, Rs.158 crores has been earmarked for the year 2012-2013.”
“தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக, 2012-2013 ஆம் ஆண்டில் இந்த அரசு 950 கோடி ரூபாய் செலவிடும். தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத வட்டாரங்களில், 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரும் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் இந்த அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் பேறுகால மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில், இதற்காக 158 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.55 · ¶87 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.117.93 crores
“Rs.117.93 crores has been allocated to implement TNHSP during 2013-2014.” financedept_2013-14_speech_en · p.40 · ¶99 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.23.52 crores
“The project has received an extension up to 15-9-2015 and an allocation of Rs.23.52 crores has been made in the Budget Estimates 2015-2016.”
“உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சையின் சேவைத் தரத்தை உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் தொற்றுநோய் அல்லாத நோய்த்தடுப்பு அம்சத்தின் கீழ், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்காக 36.75 இலட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கு 15.9.2015 வரை கால நீட்டிப்பு கிடைத்துள்ளது என்பதை இந்த பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தின் நிறைவுப் பணிகளுக்கு 23.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.51 · ¶87 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.2,685.91 crore
“The State Government will soon launch the ‘Tamil Nadu Health Systems Reforms Programme’ with World Bank funding support at a total cost of Rs.2,685.91 crore, to improve the access of the poor and disadvantaged to the Government health facilities.” tnbudget_2019-20_speech_en · p.51 · ¶89 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.260.14 crore
“The Tamil Nadu Health Systems Reforms Programme supported by the World Bank at a cost of Rs.2,857 crore is intended to further strengthen the quality of care in government hospitals, particularly the management of non-communicable diseases and to reduce the inequities in reproductive and child health services. The Budget Estimates 2020-21 include a provision of Rs.260.14 crore for the programme.”
“தமிழ்நாடு அரசின் பொது சுகாதார முறையின் மூலமாக, தொடக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ சேவைகளைத் தரமாக வழங்குவதில் தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது. மாநிலத்தில் உள்ள ஆரம்பம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதார நிலையங்களுக்கான வசதிகளை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத்தாழ்வின்றி, சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 260.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.70 · ¶125 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.116.46 crore
“The Tamil Nadu Health Systems Reform Project is being implemented to improve the quality of care, strengthen the management of non- communicable diseases and injuries and reduce inequities in reproductive and child health in Tamil Nadu. This project will be implemented in 2021-22 with a provision of Rs.116.46 crore in the Revised Budget Estimates 2021-22.”
“மிக மந்த நிலையில் செயல்படுத்தப்பட்டு வந்த, ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடனான தமிழ்நாடு நகர்ப்புர சுகாதாரத் திட்டம் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 17 நகரங்களில் அமைந்துள்ள 21 அரசு நிறுவனங்களில் மருத்துவக் கட்டடங்களும் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும் 741.91 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். தமிழ்நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தினை மேம்படுத்துதல், தொற்றாநோய் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை மேலாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நீக்குவதற்கு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது, இந்த ஆண்டில் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தம் 116.46 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.53 · ¶122 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.291.50 crore
“The Tamil Nadu Health System Reforms Project supported by the World Bank is being implemented at a cost of Rs.2,857 crore to further strengthen the quality of care in Government hospitals, particularly the management of non-communicable diseases and to reduce the inequities in reproductive and child health services. A provision of Rs.291.50 crore has been made in 2021-22 for the project.” tnbudget_2021-22_speech_en_interim · p.64 · ¶101 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years
- National Health Mission (overall) · 5 years