Health · recurring
Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme
First announced in 2011-12 and named again in 12 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2011-12 ` 596 crores
“The existing Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme will be strengthened by increasing the assistance of ```` 6,000 to ```` 12,000 for poor women up to two deliveries.”
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஏழை எளிய பெண்களுக்கு இரண்டு மகப்பேறுகள் வரை வழங்கப்படும் உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதில் 4,000 ரூபாய் ஏழாவது மாதத்திலும், 4,000 ரூபாய் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வசதி பெறும்போதும், கடைசி தவணையாக 4,000 ரூபாய் ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கு தேசிய அட்டவணையின்படி நோய்தடுப்பு மருந்துகள் கொடுத்த பின்பும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக இந்தத் திருத்த வரவு-செலவுத்திட்ட மதிப்பீட்டில் 596 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.58 · ¶95 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 360 crores
“From 2006-2007, 25,20,186 pregnant women have been provided with an assistance of ` 1,470 crores. In this Interim Budget, ` 360 crores have been allocated for this purpose.” tnbudget_2011-12_speech_en_interim · p.35 · ¶88 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.720 crores
“The benefit under the Dr. Muthulakshmi Reddy Maternity Assistance Scheme has been enhanced to Rs.12,000/-, which is the highest in the country. This has come as a boon to the poor beneficiaries and has improved the health status of both the mother and the child. The three phase payment has also strengthened antenatal, postnatal care and improved child immunisation. An allocation of Rs.720 crores has been provided for this scheme in 2012- 2013.”
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், நாட்டிலேயே உயர்ந்த அளவான 12,000 ரூபாயாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைப் பயனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இத்திட்டம், தாய் சேய் இருவரின் உடல் நலத்தைப் பேணிக் காக்க பேருதவி புரிகிறது. மூன்று தவணைகளில் இந்த உதவியை வழங்கும் முறை, பிரசவத்திற்கு முன்பும் பின்பும் அளிக்கப்படும் மருத்துவ கவனிப்பையும், குழந்தைகளுக்கான நோய்த் தடுப்புச் சேவையையும் மேலும் வலுப்படுத்த வழி செய்துள்ளது. இத்திட்டத்திற்காக 720 கோடி ரூபாய் 2012-2013 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.55 · ¶85 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.720 crores
“For the year 2013-2014, a sum of Rs.720 crores has been allocated for this programme.” financedept_2013-14_speech_en · p.39 · ¶95 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.716.77 crore
“For the year 2014-2015, an amount of Rs.716.77 crore has been allocated in the Budget Estimates.”
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு பேருதவியாக அமைந்துள்ளது. நமது நாட்டிலேயே அதிக அளவாக, மூன்று தவணைகளில் மொத்தம் 12,000 ரூபாய் உதவித் தொகை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, 19 இலட்சம் கர்ப்பிணிப் பெண்கள் 1708 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர். 2014-2015 ஆம் ஆண்டிற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 716.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.49 · ¶98 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.668.32 crores
“An allocation of Rs.668.32 crores has been made for the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme in the Budget Estimates 2015-2016, which has been a blessing to poor pregnant women.”
“முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 2,110.64 கோடி ரூபாய் செலவில் 10.05 இலட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ், 764.20 கோடி ரூபாய் பெற்று, அதன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச் செலவிட்டுள்ளன. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கு 781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 668.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத் திட்டத்திற்கு 50 கோடி ரூபாயும், மகளிர் சுகாதாரத் திட்டத்திற்கு 60.58 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.51 · ¶86 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.668 crores
“An allocation of Rs.668 crores has been provided for the scheme in 2016-2017.”
“இந்த அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் “மாண்புமிகு முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்” கீழ், இதுவரை, 2,852 கோடி ரூபாய் செலவில் 13.74 இலட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில், அரசு மருத்துவமனைகளின் மிகச் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, 1032 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு, இந்த நிதி மூலம் இம்மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், 32.29 இலட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் 3,016 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கு 668 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2015-2016 ஆம் ஆண்டு முதல், இப்பயனாளிகளுக்கு அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் சிசு இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதற்கு இத்திட்டம் பேருதவி புரிந்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.47 · ¶72 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.668 crores
“'Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme', aimed at improving the Infant Mortality Rate (IMR) and the Maternal Mortality Ratio (MMR) in the State, has benefited 34.57 lakh pregnant women since May 2011 at a cost of Rs.3,239 crores. In the Revised Budget Estimates 2016-2017, Rs.668 crores has been allocated for this scheme.” tnbudget_2016-17_speech_en_revised · p.56 · ¶114 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,001 crore
“In the Budget Estimates 2017-2018, an amount of Rs.1,001 crore has been provided for this scheme.” tnbudget_2017-18_speech_en · p.59 · ¶106 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.1,001.33 crore
“In the Budget Estimates of 2018-2019, Rs.1,001.33 crore has been allocated for this flagship scheme.”
“மாநிலத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்” கீழ், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 12,000 ரூபாய் நிதியுதவியை 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவலாக உள்ள இரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட நிதியில் 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம்” வழங்கப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இந்த முன்னோடித் திட்டத்திற்காக 1,001.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்”, 'அம்மா மகப்பேறு சஞ்சீவி” திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். இது தவிர, மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ், சானிட்டரி நாப்கின்கள் வழங்க வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 60.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.59 · ¶99 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.959.21 crore
“A sum of Rs.959.21 crore has been provided in the Budget Estimates 2019-2020 for this scheme.” tnbudget_2019-20_speech_en · p.49 · ¶86 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.959.21 crore
“A sum of Rs.959.21 crore has been provided in the Budget Estimates 2020-21 for the implementation of Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme.”
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இத்திட்டத்தின் வெற்றியை சுட்டிக்காட்டுகிறது. இதில், 65 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 60.64 இலட்சம் ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் 6,033.81 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர். மத்திய அரசின் மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டமான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம், மாநில அரசின் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து 23.10 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.70 · ¶124 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.959.20 crore
“Rs.959.20 crore is provided for the scheme in Revised Budget Estimates 2021-22.”
“மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும். இந்நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும். 2018ல் சிசு இறப்பு விகிதம் 15 எனவும் தாய் இறப்பு விகிதம் 60 எனவும் தமிழ்நாடு முக்கிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னிலை வகித்து வருகிறது, சிசு இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்து வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். தாய் இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்கேதுவாக குழந்தை பிறப்பிற்கு பிந்தைய மருத்துவ நலக்கொள்கையில் இந்த திட்டம் தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படும். 959.20 கோடி ரூபாய் செலவில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.52 · ¶119 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“Under the Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme, the Government provides enhanced financial assistance of Rs.18,000 per beneficiary. Since May, 2011, financial assistance of Rs.6,929.07 crore has been disbursed to 68.91 lakh pregnant mothers.” tnbudget_2021-22_speech_en_interim · p.65 · ¶102 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.817 crore
“an amount of Rs.817 crore has been provided for Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme” financedept_2022-23_speech_en · p.29 · ¶80 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.1,092 crore
“an amount of Rs.1,092 crore has been provided for Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme” financedept_2025-26_speech_en · p.48 · ¶104 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years
- National Health Mission (overall) · 5 years