Industry · dormant
Global Investors Meet 2014
3 budgets named it 10 year span 275 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2014-15 and named again in 2 later budgets, most recently 2023-24. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2014-15 Rs.100 crore
“the Government will host a Global Investors Meet in Chennai in October 2014, for which an outlay of Rs.100 crore has been provided in this Budget.”
“நமது நாட்டின் முக்கிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. தற்போதுள்ள வலுவான உற்பத்தி அடித்தளம், துணைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இணைப்பு, நல்ல கட்டமைப்பு வசதிகள், சிறந்த பணிப் பண்பாடு, திறன்மிக்க மனித ஆற்றல் ஆகியன தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. இவை, உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்கினண்றன. 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல், இதுவரை 26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலிட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனன. இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.32 · ¶62 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.75 crore
“As already planned, the next Global Investors Meet will be held during 2017-2018 to attract further industrial investment and Rs.75 crore has been provided for this purpose in the Budget Estimates 2017-2018.”
“நாட்டிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை எடுத்துக்காட்டும் வகையிலும், அந்நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில், முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், 4.70 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், 2.42 இலட்சம் கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தொழில் முதலீடுகளை தொடர்ந்து ஈர்ப்பதற்காக, ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் நிதியாண்டில் நடத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.42 · ¶76 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.100 crore
“the next Global Investors Meet (GIM) will be organized in Chennai on 10th and 11th January 2024.”
“இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது. தொழில்கள் ௯ெழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும். மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும் உலகச் சந்தையுடனும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இதற்கென, வரவு-ட௭சலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.47 · ¶116 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Global Investors Meet 2015 investment · 2016-17
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years