Irrigation · recurring

Grand Anicut Canal system modernisation

3 budgets named it 5 year span 300 ₹ crore allocated 2,639 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2020-21 and named again in 2 later budgets, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2020-21 Rs.300 crore new project AIADMK

“As part of the programme of Extension, Renovation and Modernisation of Irrigation Infrastructure in the Cauvery Basin, works on the Grand Anicut Canal system are to be taken up at an estimated cost of Rs.2,298 crore with assistance from the Asian Infrastructure Investment Bank (AIIB). In the Budget for 2020-21, Rs.300 crore is provided for this project.”
“2019-20ஆம்‌ ஆண்டில்‌, காவேரி வடிநிலப்‌ பகுதிகளில்‌ உள்ள 281 கால்வாய்களைத்‌ தூர்வாரும்‌ பணிகளுக்காக 60.95 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில்‌ இப்பணிகளை சிறப்பாகச்‌ செயல்படுத்தியதால்‌, பாசன நீர்‌ எவ்வித இடையூறுமின்றி காவேரி வடிநிலத்தின்‌ கடைமடைப்‌ பகுதி வரை சென்றடைந்தது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ காவேரி வடிநிலப்‌ பகுதிகளில்‌ உள்ள கால்வாய்களில்‌, 392 தூர்வாரும்‌ பணிகளை அடுத்த பருவமழைக்‌ காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரிப்‌ படுகையில்‌ நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல்‌, புதுப்பித்தல்‌ மற்றும்‌ நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, கல்லணைக்‌ கால்வாய்‌ அமைப்பின்‌ பணிகள்‌, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின்‌ உதவியுடன்‌ 2,298 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ கடன்‌ உதவியுடன்‌, 1560 கோடி ரூபாய்‌ செலவில்‌ பருவகால மாற்றத்‌ தழுவல்‌ திட்டத்தை செயல்படுத்தும்‌ பணி காவேரி பாசனப்‌ பகுதியில்‌ முழுவீச்சில்‌ முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில்‌ 105.20 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1995 கோடி ரூபாய்‌ திட்டச்‌ செலவில்‌, வெண்ணார்‌ உப வடிநிலத்தில்‌ ஏனைய பகுதிகளை இத்திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்தின்‌ கீழ்‌ கொண்டு வருவதற்கான கோரிக்கையையும்‌ ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.33 · ¶58 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.2,639.15 crore continuation project cost DMK · revised

“The Extension, Renovation and Modernisation programme of the Grand Anaicut Canal System at a total cost of Rs.2,639.15 crore has been taken up with the assistance from the AIIB.”
“உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும்‌ நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு முகமைகளிடம்‌ இருந்து தேவையான உதவிகளைப்‌ பெற்று நீர்வளங்கள்‌ துறையில்‌ சிறப்புத்‌ திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்‌. கல்லணை கால்வாய்‌ புதுப்பித்தல்‌ விரிவுபடுத்துதல்‌ மற்றும்‌ நவீனப்படுத்துதல்‌ திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து 2,639.15 கோடி ரூபாய்‌ நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இரண்டாவது அணை சீரமைத்தல்‌ மற்றும்‌ புதுப்பித்தல்‌ திட்டமானது 610.26 கோடி ரூபாய்‌ செலவில்‌ உலக வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ துவங்கப்படவுள்ளது, பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டம்‌, காவேரி டெல்டாப்‌ பகுதியில்‌ 1825 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ உதவியுடன்‌ மேற்கொள்ளப்படும்‌, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ மூன்றாம்‌ கட்டமும்‌, நான்காம்‌ கட்டமும்‌, உலக வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ 779.89 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. இந்த திருத்த வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ 326,37 கோடி ரூபாய்‌ இந்தத்‌ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகள்‌, ஏரிகள்‌, வடிகால்கள்‌ மற்றும்‌ பாசன அமைப்புகளின்‌ புனரமைத்தல்‌ உட்பட 59 புதிய பாசனப்‌ பணிகள்‌ நபார்டு வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ மேற்கொள்ளப்பட்டன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.22 · ¶49 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.2,639 crore continuation project cost AIADMK · interim

“The ERM works of the Grand Anicut Canal System at an estimated cost of Rs.2,639 crore with financial assistance anticipated from the Asian Infrastructure Investment Bank (AIIB) have been launched by the Hon’ble Prime Minister.”

tnbudget_2021-22_speech_en_interim · p.36 · ¶54 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.1,037 crore continuation project cost DMK

“The works for first phase of „Extension, Renovation and Modernization of Grand Anicut Canal system‟ are being undertaken at an estimated cost of Rs.1,037 crore for effective water management in Cauvery Basin, and are nearing completion.”
“தமிழ்நாட்டில்‌ காவிரி வடிநிலத்தில்‌, நீர்‌ மேலாண்மையினை திறம்படச்‌ செய்யும்பொருட்டு, கல்லணைக்‌ கால்வாயினை நீட்டித்தல்‌, புனரமைத்தல்‌ மற்றும்‌ நவினமயமாக்குதல்‌” திட்டத்தின்‌ முதற்கட்டமாக 1037 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெறும்‌ தருவாயில்‌ உள்ளன. தற்போது இரண்டாம்‌ கட்டமாக வரும்‌ நிதியாண்டில்‌ 400 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌ இதன்‌ மூலம்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ உள்ள 2.3 இலட்சம்‌ ஏக்கர்‌ பாசன நிலங்கள்‌ பயன்பெறும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.55 · ¶118 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector