IT & governance · dormant
Information Communication Technology Policy 2011
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2011-12
“This Government will bring out a new Information Communication Technology Policy 2011 which will be more investor friendly facilitating the growth of the software and hardware industries.”
“உலகளவில் தகவல் தொழில்நுட்பத்திற்கும், அதனைச் சார்ந்த சேவை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கிய முதலீட்டு இடமாக அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் 2010-11 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 40,000 கோடி ரூபாயாகும். தகவல் தொழில்நுட்பமும், அதனைச் சார்ந்த தொழில்களும் வளர்ச்சியடைய இந்த அரசு அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செய்து தரும். குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்கள், ஊரகப் பகுதிகளில் இந்நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும். இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும் இந்த அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பக் கொள்கை 2011-ஐ உருவாக்கும். இக்கொள்கையானது மென்பொருள், வன்பொருள் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையும். 644 ஏற்கெனவே அறிவித்தபடி, அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகத்தைப் (Arasu Cable TV Corporation) புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தஞ்சாவூர், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலைமுனையங்கள் (head ends) மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 கி.மீ சுற்றெல்லையில் இருக்கும் கம்பிவட இயக்குபவர்கள் அரசு கம்பிவட தொலைக்காட்சி சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 16 மாவட்டங்களில் புதிய தலைமுனையங்கள் நிறுவியும், 11 மாவட்டங்களில் தனியார் தலைமுனையங்களுடன் ஒப்பந்தம் செய்தும் ஒளிபரப்பு வசதிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய தலைமுனையங்களிலிருந்து விரைவில் மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சக்தித் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.40 · ¶63 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years