Other · dormant

Infrastructure Development Fund

3 budgets named it 5 year span 8,000 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2017-18.

Allocated by budget year

See it on the map → All Other projects →

What each budget said, year by year

2013-14 Rs.2,000 crores new project AIADMK

“An allocation of Rs.2,000 crores for the Infrastructure Development Fund and Rs.200 crores for the Project Preparation Fund have been provided in the Budget Estimates 2013-2014.”
“பொருளாதாரத்தில்‌ உயர்‌ வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பல முக்கியக்‌ கட்டமைப்புத்‌ திட்டங்களில்‌ குறிப்பிடத்தக்க அளவில்‌ முதலீடுகள்‌ செய்வதற்கு, இந்த அரசு முக்கியத்துவம்‌ அளிக்கும்‌. இரண்டு ஐந்தாண்டுத்‌ திட்டங்களின்‌ கால அளவை மனதில்‌ கொண்டு, செயல்படுத்தத்தக்க, முக்கியக்‌ கட்டமைப்புத்‌ திட்டங்களின்‌ தொகுப்பைக்‌ கொண்டுள்ள தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023-ன்‌ இரண்டாவது பகுதிக்கு, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்ற தமிழ்நாடு மாநில கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின்‌ முதல்‌ கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில்‌, 15 இலட்சம்‌ கோடி ரூபாய்‌ அளவிலான மொத்த முதலீடுகள்‌ பெறுவதை தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 இலக்காகக்‌ கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும்‌ பாசனத்‌ துறையில்‌ 127,250 கோடி ரூபாயும்‌, நகர்ப்புர கட்டமைப்புத்‌ துறையில்‌ 2,59,000 கோடி ரூபாயும்‌ போக்குவரத்து மற்றும்‌ சாலைத்‌ துறையில்‌ 3,65,927 கோடி ரூபாயும்‌, மனித ஆற்றல்‌ மேம்பாட்டிற்காக 60,120 கோடி ரூபாயும்‌ இதனுள்‌ அடங்கும்‌. 2023 ஆம்‌ ஆண்டு வாக்கில்‌ கட்டமைப்புத்‌ துறையில்‌ 60 சதவீத முதலீடு, தனியார்‌ துறையிடமிருந்து பெறப்படும்‌ என கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின்‌ வேகமான கட்டமைப்பு வளர்ச்சிக்கான, தெளிவான கொள்கை மற்றும்‌ நடைமுறை அமைப்பினை ஏற்படுத்தும்‌ நோக்குடன்‌ தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில்‌ ஒளிவுமறைவின்மை (பொதுத்‌ துறை தனியார்‌ துறை பங்கேற்புக்‌ கொள்முதல்‌) விதிகளோடு, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு சட்டம்‌, விதிகள்‌ மற்றும்‌ வரைமுறைகள்‌ நடப்பு ஆண்டில்‌ வெளியிடப்பட்டுள்ளன. 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 2,000 கோடி ரூபாயும்‌, திட்ட வடிவமைப்பு நிதிக்காக 200 கோடி ரூபாயும்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளன. முதன்மைத்‌ துறை வேளாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.12 · ¶27 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,000 crores continuation AIADMK · interim

“In the Interim Budget, Rs.2,000 crores has been allocated for the ‘Tamil Nadu Infrastructure Development Fund’ and Rs.200 crores has been allocated for the ‘Project Preparation Fund’.”
“இந்த அரசு எடுத்த அனைத்து முயற்சிகளின்‌ காரணமாக, உலக மற்றும்‌ தேசிய அளவில்‌ காணப்படும்‌ பொருளாதார மந்த நிலையிலும்‌, மாநிலத்தின்‌ பொருளாதார வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டு, 2011-2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டு காலத்திற்கான, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு மாநில மொத்த உற்பத்தியின்‌ வளர்ச்சி விகிதம்‌, நிலையான விலைகளின்‌ அடிப்படையில்‌, 8.01 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்திய அளவிலும்‌, அண்டை மாநிலங்களைக்‌ காட்டிலும்‌, தமிழகம்‌ அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, பொருளாதார அளவில்‌ இரண்டாவதாக இருந்த உத்தரப்‌ பிரதேச மாநிலத்தையும்‌ விஞ்சி, நாட்டிலேயே இரண்டாவது மிகப்‌ பெரிய பொருளாதாரத்தைக்‌ கொண்ட மாநிலமாக தமிழகம்‌ உருவெடுத்துள்ளது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியினைப்‌ பெறும்‌ நோக்கில்‌ நமது மாநிலத்தை முன்னேற்றுவதற்காக, மூன்று கட்டங்களாக “தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்கு 2,000 கோடி ரூபாயும்‌, திட்ட வடிவமைப்பு நிதியத்திற்கு 200 கோடி ரூபாயும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.5 · ¶6 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,000 crores continuation AIADMK · revised

“In the Revised Budget Estimates 2016-2017, an amount of Rs.2,000 crores has been allocated for the 'Tamil Nadu Infrastructure Development Fund' and Rs.100 crores has been allocated for the 'Project Preparation Fund'.”
“தமிழ்நாடு தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 ஆவணத்தில்‌ தெரிவிக்கப்பட்ட திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்காகவும்‌, முக்கியக்‌ கட்டமைப்புத்‌ திட்டங்களுக்கு, குறிப்பாக, அரசு-தனியார்‌ கூட்டு முயற்சிகள்‌ மூலமாகச்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு சிறப்புக்‌ கவனம்‌ செலுத்துவதற்காகவும்‌, இந்த அரசு தமிழ்நாடு தொழில்‌ கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை (TNIDB) 2012 ஆம்‌ ஆண்டில்‌ அமைத்துள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 2,000 கோடி ரூபாய்‌ தமிழ்நாடு தொழில்‌ கட்டமைப்பு நிதியத்திற்கும்‌', 100 கோடி ரூபாய்‌ ‘Ace தயாரிப்பு நிதியத்திற்கும்‌' ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶12) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.9 · ¶12 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.2,000 crore continuation AIADMK

“An amount of Rs.2,000 crore has been allocated in the Budget Estimates 2017-2018 for the Tamil Nadu Infrastructure Development Fund (TNIDF) which includes an allocation of Rs.270 crore towards the balance of First Loss Catalytic Capital.”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களால்‌ தொலைநோக்குப்‌ பார்வையுடன்‌ அனைவருக்கும்‌ பயனளிக்கும்‌ வகையிலும்‌, நீடித்து நிலைக்கத்தக்க சமூகப்‌ பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தும்‌ வகையிலும்‌, தமிழ்நாடு தொலைநோக்குத்‌ திட்டம்‌ 20237 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தத்‌ தொலைநோக்குத்‌ திட்டத்தின்‌ அடிப்படையில்‌, கூடுதல்‌ நிதி திரட்ட தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியத்தை முதல்‌ வகை மாற்று முதலீட்டு நிதியமாக (Alternative Investment Fund — Category |), தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக்‌ கழகத்தின்‌ மூலம்‌ மாநில அரசு நிறுவியுள்ளது. இந்தியப்‌ பங்கு மற்றும்‌ பரிவர்த்தனை வாரியத்தில்‌ (SEB!) தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம்‌ பதிவு செய்யப்பட்டு, திரட்டப்பட உள்ள 6,000 கோடி ரூபாய்‌ மொத்த நிதியில்‌, முதற்கட்டமாக 1,200 கோடி ரூபாய்‌ நிதியைத்‌ திரட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திரட்டப்படும்‌ நிதி, தமிழ்நாட்டின்‌ புதிய உட்கட்டமைப்புத்‌ திட்டங்களுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌. இந்த மொத்த நிதியில்‌, முதலில்‌ ஈடுசெய்யப்படும்‌ ஊக்க மூலதனமாக (First Loss Catalytic Capital) மாநில அரசு வழங்க வேண்டிய ஐந்து சதவீதமான 300 கோடி ரூபாயில்‌ ஒரு பகுதியை, அதாவது 30 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கெனவே விடுவித்துள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு முதலில்‌ ஈடுசெய்யப்படும்‌ ஊக்க மூலதனத்திற்காக மீதமுள்ள 270 கோடி ரூபாய்‌ உட்பட 2,000 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின்‌ திட்டத்‌ தயாரிப்பு நிதிக்காக 200 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector