Agriculture · dormant
Integrated Farming System
3 budgets named it 3 year span 50 ₹ crore allocated 102 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2018-19 and named again in 2 later budgets, most recently 2020-21. Districts: 25.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2018-19 Rs.50 crore
“This scheme will be implemented at an estimated cost of Rs.50 crore.”
“தொகுப்பு (Clusters) அடிப்படையில் 25 மாவட்டங்களில் உள்ள 10 இலட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களை மேம்படுத்த 2016-2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான சிறப்புத் திட்டத்தில் (Mission on Sustainable Dry Land Agriculture), 2017-2018 ஆம் ஆண்டில் 175.16 கோடி ரூபாய் செலவில் 400 மானாவாரித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புகளில் உற்பத்தியைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன், மேலும் 400 புதிய மானாவாரித் தொகுப்புகளை ஏற்படுத்த 2018-2019 ஆம் ஆண்டில் 32116 கோடி ரூபாய் செலவிடப்படும். மற்றுமொரு புதுமை முயற்சியாக வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கிடையே கூட்டுப் பண்ணைய செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 2017-2018 ஆம் ஆண்டில் இந்த அரசு கூட்டுப் பண்ணைய திட்டத்தை தொடங்கியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 391 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தில், 2018-2019 ஆம் ஆண்டில் 100.42 கோடி ரூபாய் செலவில் இரண்டு இலட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 2,000 புதிய வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் 500 குழுக்கள் 10 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும். மேலும் ஒரு புதுமை முயற்சியாக, பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளை விவசாயிகள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த 2018-2019 ஆம் ஆண்டில் *ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை” இந்த அரசு தொடங்கும். சோதனை முறையில் ஐந்து வட்டாரங்களில் தலா 1000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் உரிய தொழில்நுட்ப உதவியை வழங்கும். இந்த முயற்சி, பாரம்பரியமாக நாம் பின்பற்றி வந்த நிலைக்கத்தக்க விவசாய முறைகளுக்கு விவசாயிகளை திரும்பக் கொண்டு செல்லும் என நம்புகிறேன். இத்திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.101.62 crore
“During 2019-2020, another 5,000 IFS units will be assisted in 25 districts at an outlay of Rs.101.62 crore.” tnbudget_2019-20_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.50 crore
“The very successful Integrated Farming System has now been extended to 28 districts and will be implemented during 2020-21 with an outlay of Rs.50 crore.”
“சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, தற்போது 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2020-21 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுப்பண்ணைய முறையின் தொடர் முயற்சியாக, சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் ஆறு இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கெனவே 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது, 45 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019-20 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்தவாறு, அரசு, “தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கையினை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100.56 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.22 · ¶36 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Mission on Sustainable Dry Land Agriculture · 3 years · shares a district
- Native chicken rearing package · 2 years · shares a district
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years