Irrigation · dormant
Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II
First announced in 2016-17 and named again in 4 later budgets, most recently 2023-24. Districts: 30.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Climate Change Adaptation Programme (Cauvery Delta) Phase II (2021-22), from 2021-22. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2016-17 Rs.2,950 crores
“the Phase-II of IAMWARM will be taken up with the World Bank assistance at an estimated cost of Rs.2,950 crores to extend the benefits to the uncovered sub-basins.”
“ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் 'பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்தின்” முதற்கட்டமாக, வெண்ணாறு உப வடிநிலப் பகுதியில் 279 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் எஞ்சியுள்ள பணிகள், 2016-2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். உலக வங்கியின் உதவியுடன், 61 உப வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நீர்வள நிலவளத் திட்டத்தின்” முதல் கட்டப் பணிகள் (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management Project — Phase-l) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படாத உப வடிநிலப் பகுதிகளில், 2,950 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான (Phase-ll) பணிகள் உலக வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.30 · ¶57 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2019-20 Rs.2,962 crore
“the Irrigated Agricultural Modernisation Project (IAMP), is under implementation in the remaining 66 sub-basins covering 30 districts with an outlay of Rs.2,962 crore to benefit an extent of 5.43 lakh hectares.”
““நீர்வள நிலவளத் திட்டம்” சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 30 மாவட்டங்களில் உள்ள 66 உப வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள 5.43 இலட்சம் ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில், 2,962 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (Irrigated Agricultural Modernisation Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 4,778 ஏரிகளையும், 477 அணைக்கட்டுகளையும் புனரமைப்பதற்காகவும், தடுப்/பணைகளைக் கட்டுவதற்காகவும், ஏரியின் நீர்ப்பரப்புப் பகுதியில் செயற்கை முறையில் நீர்செறிவூட்டும் கிணறுகளை அமைப்பதற்காகவும், காவேரி பாசனப் பகுதி மற்றும் பிற உப வடிநிலங்களில் அமைந்துள்ள வடிகால்களையும், பாசன வாய்க்கால்களையும் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 235.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.27 · ¶42 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.2,962 crore
“The Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project is being implemented at a cost of Rs.2,962 crore.”
“அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல்கட்ட திருத்தப்பட்ட திட்டச் செலவினம் 803.49 கோடி ரூபாயுடன் 89 அணைகளும், இரண்டு பாசனப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டம் ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் (DRIP-IT) 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து (DRIP-I & II) 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 220.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநிலப் பகுதிகளில், 1325 குளங்கள் மற்றும் 107 அணைக் கட்டுகளைப் புனரமைத்தல், மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 57 குளங்கள் மற்றும் இரண்டு முதன்மை பாசனக் கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகள் ஜூலை 2020 இல் முடிவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநிலப் பகுதிகளில், 906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டுகளைப் புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமானப் பணிகள் 649.55 கோடி ரூபாய் செலவில் 2020-21 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் இதற்காக 2020-21 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.35 · ¶61 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.649.50 crore
“The Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project (TNIAMP) for rehabilitation of 4,778 tanks and 477 anicuts and artificial recharge wells is being implemented. The Phase I works are at an advanced stage of completion and during 2020-21, Phase II works at a total cost of Rs.649.50 crore have been taken up.”
“அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு 803.49 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட 89 அணைகளில், 87 அணைகளின் பணிகள் முடிவடைந்தன. மேலும், இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 610.26 கோடி ரூபாயில் 37 அணைகளுக்கான பணிகளின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4,778 குளங்கள், 477 அணைக்கட்டுகள் மற்றும் செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் புனரமைக்கும் பணிகள், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில்) அனைத்துப் பணிகளும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டப் பணிகள், 649.50 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.37 · ¶56 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.462 crore
“Under Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project, the Government has sanctioned rehabilitation works in 341 tanks, 67 anicuts and 11 canals at an estimated cost of Rs.462 crore.”
“நீர்நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவினமயமாக்கல் திட்டத்தில் 462 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 1 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 259 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 309 ஏரிகளில் பழுதுபார்த்தல், புனரமைத்தல், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.29 · ¶63 · source PDF ↗ · on the map →
Linked projects
- another phase of TN Irrigated Agriculture Modernisation Project Phase III & IV · 2021-22
- runs alongside Grand Anicut Canal system modernisation · 2020-21 –2024-25
- another phase of Irrigated Agricultural Modernisation and Water bodies Restoration and Management (IAMWARM) · 2014-15
- renames or replaces Climate Change Adaptation Programme (Cauvery Delta) Phase II · 2021-22
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Cauvery–Vaigai–Gundar flood control / interlinking programme · 4 years