Irrigation · completed claimed

Micro Irrigation Mission (State funds)

11 budgets named it 11 year span 6,316 ₹ crore allocated 986 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 10 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2011-12 ` 151 crores enhancement AIADMK · revised

“During 2011-2012, we will cover 1.25 lakh acres in all - covering 87,500 acres under the Micro Irrigation Mission and 37,500 acres under Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management Project (IAMWARM). I have proposed to allocate ```` 151 crores from State funds for this purpose.”
“மாநிலத்தின்‌ நிகர பாசனப்‌ பரப்பு 58 விழுக்காடாக மட்டுமே உள்ளது. பாசனத்‌ திறன்‌ ஆண்டுதோறும்‌ குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தில்‌ உள்ள 95 விழுக்காடு மேற்பரப்பு பாசன ஆதாரமும்‌, 85 விழுக்காடு நிலத்தடி நீராதாரமும்‌ பயன்படுத்தப்பட்ட நிலையில்‌ நுண்ணீர்‌ பாசனப்‌ பரப்பினை அதிகரிப்பதன்‌ மூலமே நீர்‌ பயன்பாட்டின்‌ திறனை மேம்படுத்த இயலும்‌. சொட்டு நீர்ப்‌ பாசனம்‌, தெளிப்பு நீர்ப்‌ பாசன முறையினை பரவலாக்க 1991 ஆம்‌ ஆண்டிலேயே நுண்ணீர்‌ பாசன உத்திகள்‌ அறிமுகப்படுத்தப்பட்டன. நீரைச்‌ சேமித்து நீர்‌ பயன்பாட்டினை திறம்பட நிர்வகிக்கவும்‌, நுண்ணீர்‌ பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம்‌ செய்யவும்‌ அதைப்‌ பெரும்‌ இயக்கமாக நடத்தவும்‌ இந்த அரசு விரும்புகிறது. தற்போது நுண்ணீர்‌ பாசனத்திற்கான தேசிய இயக்கத்‌ திட்டத்தில்‌ சிறு, குறு விவசாயிகளுக்கு 75 விழுக்காடும்‌, இதர விவசாயிகளுக்கு 65 விழுக்காடும்‌ மானியம்‌ வழங்கப்பட்டு வருகிறது. பண்ணை அளவில்‌ உற்பத்தித்‌ திறனை மேலும்‌ அதிகரிக்க நுண்ணீர்‌ பாசனம்‌ ஒரு முக்கிய தேவை என்று இந்த அரசு கருதுவதால்‌, சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர்‌ பாசனம்‌ அமைத்திட 100 விழுக்காடு மானியமும்‌, இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும்‌ இனி வழங்கப்படும்‌. மத்திய அரசு அளிக்கும்‌ மானியத்தை விட கூடுதலாக ஆகும்‌ மானியத்தினை மாநில அரசே முழுமையாக ஏற்றுக்‌ கொள்ளும்‌. இதே மானிய முறை நீர்வள நிலவளத்‌ திட்டத்திலும்‌ பின்பற்றப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ நுண்ணீர்‌ பாசன இயக்கத்தின்‌ கீழ்‌ 87,500 ஏக்கர்‌ பரப்பும்‌, தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 37,500 ஏக்கர்‌ பரப்பும்‌, ஆக மொத்தம்‌ 1,25,000 ஏக்கர்‌ பரப்பு நுண்ணீர்ப்‌ பாசன முறையின்‌ கீழ்‌ கொண்டுவரப்படும்‌. இதற்காக மாநில நிதியிலிருந்து 151 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.15 · ¶25 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.75 crores continuation AIADMK

“We propose to cover 1,73,000 acres during 2012- 2013 for which Rs.75 crores has been provided as subsidy in this Budget.”
“சிறந்த நீர்‌ மேலாண்மையையும்‌, பயிர்‌ பலவகைப்படுத்துதலையும்‌ ஊக்குவிப்பதற்காக நுண்ணீர்‌ பாசனத்‌ திட்டங்களுக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தையும்‌, மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தையும்‌ இந்த அரசு வழங்கி வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 112,500 ஏக்கர்‌ பரப்பு நுண்ணீர்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 1.73 லட்சம்‌ ஏக்கர்‌ பரப்பில்‌ இதனைச்‌ செயல்படுத்திட முடிவெடுக்கப்பட்டு, இதற்கான மானியமாக இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 75 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, விவசாயிகளுக்கு மானியத்தை நேரடியாக வழங்கி, நுண்ணீர்‌ பாசன கருவிகளை நிறுவும்‌ நிறுவனத்தை அவர்களே தேர்ந்தெடுக்கவும்‌, மூன்றாவது அமைப்பின்‌ ஆய்வுகளின்‌ (third party inspection) மூலமாக நிதியுதவி சரியாகப்‌ பயன்படுத்தப்படுவதை கண்காணிக்கவும்‌ வகை செய்யும்‌ புதிய திட்டமுறை வரும்‌ ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.22 · ¶33 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.520 crores continuation project cost AIADMK

“Funds under the National Mission on Micro Irrigation, National Food Security Mission, NHM and other schemes will be dovetailed with State funds for covering 1.30 lakh acres of cultivated land under micro irrigation at a total cost of Rs.520 crores during 2013-2014.”

financedept_2013-14_speech_en · p.17 · ¶37 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.400 crore continuation AIADMK

“During 2014-2015, it is proposed to cover 1.30 lakh acres with an outlay of Rs.400 crore dovetailed from various schemes.”
“நீர்ப்‌ பயன்பாட்டுத்‌ திறனை உயர்த்துவதற்காக, நீர்ச்‌ சேமிப்பிற்கும்‌, நுண்ணீர்ப்‌ பாசனத்திற்கும்‌ இந்த அரசு பெரும்‌ ஊக்கம்‌ அளித்து வருகிறது. நீர்வள நிலவளத்‌ திட்டம்‌, தேசிய நுண்ணீர்ப்‌ பாசன இயக்கம்‌, தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌ ஆகியவற்றுடன்‌ மாநில அரசு நிதியையும்‌ ஒருங்கிணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளில்‌ சுமார்‌ மூன்று இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பு நுண்ணீர்ப்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவரப்பட்டது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து 400 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1.30 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவு நுண்ணீர்ப்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவரப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.15 · ¶25 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.200 crores continuation AIADMK

“This Government will vigorously promote efficient use of water by bringing an additional area of 1.2 lakh acres under micro- irrigation with an outlay of Rs.200 crores in the coming financial year.”
“நுண்ணீரப்‌ பாசனத்தை ஊக்குவிப்பதற்கும்‌, நீர்ப்‌ பயன்பாட்டுத்‌ திறனை உயர்த்துவதற்கும்‌ இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசு 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத அளவிலேயே மானியம்‌ வழங்கிவரும்‌ நிலையிலும்‌, சிறு மற்றும்‌ குறு விவசாயிகளுக்கு 100 சதவீத அளவிலும்‌, இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அளவிலும்‌ நுண்ணீர்ப்‌ பாசனப்‌ பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு மானியம்‌ அளித்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து, கடந்த நான்கு ஆண்டுகளில்‌ மட்டும்‌ 605.25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 3.06 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பை நுண்ணீர்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவர வழிவகுத்துள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌, 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, மேலும்‌ 1.20 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பை நுண்ணீர்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவந்து, நீர்ப்‌ பயன்பாட்டுத்‌ திறனை உயர்த்திட இந்த அரசு முனைப்புடன்‌ செயல்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.17 · ¶24 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.986.38 crores completion claim project cost AIADMK · interim

“Enhancement of subsidy to 100 per cent for small and marginal farmers and 75 per cent to other farmers covering 1,76,390 hectares at an outlay of Rs.986.38 crores in the last five years to take micro irrigation to every farm.”
“பன்முனை உத்திகளை உள்ளடக்கி, தமிழகத்தில்‌ இரண்டாம்‌ பசுமைப்‌ புரட்சியை ஏற்படுத்த உறுதியுடன்‌ செயல்பட்டு வரும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, பயிர்‌ பலவகையாக்கல்‌ (Crop Diversification) மற்றும்‌ அறுவடைக்குப்‌ பிந்தைய மேலாண்மை (Post Harvest Management) போன்ற முயற்சிகள்‌ மூலம்‌ பயிர்‌ உற்பத்தித்‌ திறனையும்‌, விவசாயிகளின்‌ வருவாயையும்‌ பெருக்கியுள்ளார்கள்‌. இதன்‌ பயனாக, உற்பத்தித்‌ திறனில்‌ மக்காச்‌ சோளம்‌, நிலக்கடலை, எண்ணெய்‌ வித்துக்களில்‌ நாட்டிலேயே முதன்மை இடத்தையும்‌, கரும்பில்‌ இரண்டாம்‌ இடத்தையும்‌, சூரிய காந்தி மற்றும்‌ நெல்‌ உற்பத்தித்‌ திறனில்‌ மூன்றாம்‌ இடத்தையும்‌ தமிழகம்‌ பெற்றுள்ளது. 6 திருந்திய நெல்‌ சாகுபடி, நீடித்த நவீன கரும்பு சாகுபடி, துல்லியப்‌ பண்ணையம்‌, துவரை சாகுபடி, பருத்தி சாகுபடித்‌ திட்டம்‌ போன்ற பயிருக்கு ஏற்ற உத்திகளை பண்ணை அளவில்‌ கடைபிடிக்க ஊக்குவித்தல்‌ 6 மண்‌ வளத்திற்கு ஏற்றாற்போல்‌ உரமிடுதலை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மண்‌ வள அட்டைகள்‌ வழங்குதல்‌ 6 குறித்த நேரத்தில்‌, தரம்‌ வாய்ந்த விதைகள்‌ விவசாயிகளைச்‌ சென்றடைவதற்காக, 25 கோடி ரூபாய்‌ தொடக்க நிதியுடன்‌ அமைக்கப்பட்ட தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை 622 மாவட்டங்களில்‌ தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்‌ மூலமாகவும்‌, பிற மாவட்டங்களில்‌ தேசிய வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ மூலமாகவும்‌, நவீன தொழில்நுட்பங்களைப்‌ பயன்படுத்தி தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ சாகுபடி பரப்பு அதிகரிப்பு 6 விவசாயிகளும்‌, நுகர்வோரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 5 மாநகராட்சிகளைச்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ 51 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பெருநகர காய்கறித்‌ தொகுப்பு வளர்ச்சித்‌ திட்டம்‌” © நுண்ணீர்‌ பாசனம்‌ அனைத்துப்‌ பண்ணைகளுக்கும்‌ சென்றடைய, குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும்‌, பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும்‌ வழங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ 986.38 கோடி ரூபாய்‌ செலவில்‌ 176,390 ஹெக்டேரில்‌ நுண்ணீரப்‌ பாசனம்‌ உ பண்ணை இயந்திரமயமாக்கலை பெரிய அளவில்‌ ஊக்குவிக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 20194 கோடி ரூபாய்‌ செலவில்‌ டிராக்டர்கள்‌, உழவு மற்றும்‌ பயிர்‌ அறுவடை இயந்திரங்கள்‌ உள்ளிட்ட 62,735 கருவிகள்‌ வழங்கியது 6 வட்டார அளவில்‌, 150 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ 100 ஒருங்கிணைந்த வேளாண்‌ விரிவாக்க மையங்கள்‌ என பல்வேறு முக்கியத்‌ திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶23) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.17 · ¶23 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.319 crores continuation project cost AIADMK · revised

“During 2016-2017, micro-irrigation will be adopted in 28,540 acres of agricultural crops and in 86,707 acres of horticultural crops at a total cost of Rs.319 crores.”

tnbudget_2016-17_speech_en_revised · p.18 · ¶34 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.369 crore continuation AIADMK

“During 2017-2018, an additional one lakh acres will be brought under micro irrigation with a special focus on sugarcane and horticultural crops with an allocation of Rs.369 crore.”

tnbudget_2017-18_speech_en · p.20 · ¶34 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.715 crore continuation AIADMK

“In 2017-2018, Rs.622 crore was provided for promoting Micro Irrigation. For the year 2018-2019, an amount of Rs.715 crore is provided for this purpose.”
“தமிழ்நாட்டில்‌ தண்ணீர்ப்‌ பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வரும்‌ நிலையில்‌, வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலை பயிர்‌ சாகுபடிக்காக நுண்ணீப்‌ பாசனத்தை பெரிய அளவில்‌ விரிவாக்கம்‌ செய்வது அவசியமாகிறது. நுண்ணீர்ப்‌ பாசனத்தை மேம்படுத்த 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 622 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டது. வரும்‌ 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ இதற்கென 715 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரிப்‌ பாசன கடைமடைப்‌ பகுதிகளிலும்‌, கடலோரப்‌ பகுதிகளிலும்‌, பயிர்‌ முதிரும்‌ நிலையில்‌ ஏற்படும்‌ நீர்ப்‌ பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, பயிர்களைக்‌ காக்கும்‌ உயிர்ப்‌ பாசனம்‌ வழங்குவதில்‌ பண்ணைக்‌ குட்டைகள்‌ ஆற்றும்‌ பங்கினை உணர்ந்துள்ள இந்த அரசு, 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மேலும்‌ 10,000 பண்ணைக்‌ குட்டைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.23 · ¶33 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.1,361 crore continuation AIADMK

“It is proposed to cover another 2.0 lakh hectares under Micro Irrigation during 2019-2020 with an outlay of Rs.1,361 crore under micro irrigation.”

tnbudget_2019-20_speech_en · p.15 · ¶24 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.1,844.97 crore enhancement AIADMK

“I am happy to announce that in 2020-21, 7.41 lakh acre will be covered under micro irrigation with an enhanced outlay of Rs.1,844.97 crore.”
“நுண்ணீர்ப்‌ பாசனத்தை செயல்படுத்துவதில்‌ தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாகத்‌ திகழ்ந்து வருகிறது. கடந்த 2018-19 ஆம்‌ ஆண்டில்‌, தமிழ்நாட்டில்‌ 700.69 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3.51 இலட்சம்‌ ஏக்கர்‌ நிலம்‌ நுண்ணீர்ப்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவரப்பட்டது. 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 5.63 இலட்சம்‌ ஏக்கர்‌ நிலங்கள்‌ 1370.24 கோடி ரூபாய்‌ செலவில்‌ நுண்ணீர்ப்‌ பாசனத்தின்‌ கீழ்‌ கொண்டுவரப்படுகின்றன. வரும்‌ 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 1844.97 கோடி ரூபாய்‌ செலவில்‌ 7.41 இலட்சம்‌ ஏக்கர்‌ நிலங்கள்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி பெறும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.24 · ¶41 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.1,200 crore continuation AIADMK · interim

“In 2020-21, 5 lakh acres will be brought under micro irrigation by extending a record subsidy of Rs.1,200 crore.”

tnbudget_2021-22_speech_en_interim · p.27 · ¶38 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector