Water supply · dormant

Mission for Water Resource Management / Kudimaramath revival

4 budgets named it 5 year span 1,000 ₹ crore allocated 500 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 3 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Tamil Nadu Water Resources Conservation and Augmentation Mission (2020-21), from 2020-21. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Water supply projects →

What each budget said, year by year

2016-17 Rs.100 crores new project AIADMK · revised

“Initially, a sum of Rs.100 crores is set apart as incentive fund to revive Kudimaramath, which will be enhanced substantially with NABARD assistance in due course.”
“நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவப்‌ பெருந்தகையின்‌ வாக்கு. நீர்ப்‌ பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, நீர்‌ ஆதாரங்களைப்‌ பாதுகாத்து, உகந்த அளவில்‌ பயன்படுத்துவதற்கான முயற்சிகள்‌ தேவைப்படுகின்றன. நீர்‌ ஆதாரங்களைப்‌ பயன்படுத்துவோரின்‌ பங்கேற்புடன்‌ செயல்படுத்தப்படும்‌ குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காகவும்‌, நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்காகவும்‌, இந்த அரசு நீர்‌ ஆதார மேலாண்மைக்கு ஒரு மாநிலம்‌ தழுவிய இயக்கத்தை மேற்கொள்ளும்‌. வெளிநாட்டு நிதி உதவி பெறும்‌ பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌, அணைகள்‌ மற்றும்‌ நீர்‌ நிலைகளின்‌ கொள்ளளவை தொடர்ந்து அதிகரிப்பதுடன்‌, பொதுப்பணித்‌ துறையின்‌ மூலம்‌ பாசனத்திற்கான நீர்‌ ஆதாரங்களைப்‌ புனரமைப்பதற்கான ஒரு மாபெரும்‌ முயற்சி மேற்கொள்ளப்படும்‌. அதேபோல்‌, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பெறப்படும்‌ நிதியை ஒருங்கிணைத்து, குளங்கள்‌, ஊரணிகள்‌ மற்றும்‌ கோவில்‌ குளங்களை சுத்தம்‌ செய்து மேம்படுத்துவதுடன்‌, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டிலுள்ள சிறு பாசன ஏரிகள்‌ மற்றும்‌ பாசன அமைப்புகளையும்‌ மேம்படுத்துவதற்கான ஒரு மாபெரும்‌ திட்டத்தையும்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, முதல்‌ கட்டமாக 100 கோடி ரூபாய்‌ ஊக்க நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில்‌ நபார்டு வங்கி உதவியுடன்‌ இந்த நிதி கணிசமான அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.29 · ¶54 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.300 crore enhancement AIADMK

“The Government will undertake Kudimaramath with an increased allocation of Rs.300 crore during 2017-2018.”
“நீர்‌ ஆதாரங்களை சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும்‌, முழுமையான அளவில்‌ அவற்றைப்‌ பயன்படுத்துவதற்காகவும்‌, ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. நீர்‌ நிலைகளை சீரமைக்கும்‌ முயற்சியாக, பொது மக்களின்‌ பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படும்‌ குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்ட, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ “நீர்‌ ஆதார மேலாண்மை இயக்கம்‌” ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 300 கோடி ரூபாயாக உயர்த்தி, குடிமராமத்து முறையை அரசு வலுப்படுத்தும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌, நீர்நிலைகளில்‌ வளர்ந்துள்ள செடிகள்‌ மற்றும்‌ புதர்க்‌ காடுகளை அகற்றுதல்‌, அணைகளைப்‌ பராமரித்தல்‌, மதகுகள்‌, ஏரிகள்‌ மற்றும்‌ கால்வாய்களில்‌ உள்ள இதர கட்டமைப்புகளை சீரமைத்தல்‌ போன்ற செயல்பாடுகள்‌ சமுதாயப்‌ பங்களிப்புடன்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.29 · ¶50 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.300 crore continuation AIADMK

“An amount of Rs.300 crore has been allocated in the Budget Estimates 2018-2019 for Kudimaramath.”
“நீர்வள ஆதாரங்களைப்‌ பாதுகாக்க, 2016-2017 ஆம்‌ ஆண்டு முதல்‌, பாரம்பரிய நீர்‌ மேலாண்மை முறையான குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டி அதனை at இயக்கமாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டத்தினைத்‌ தொடர்ந்து செயல்படுத்த, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 300 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்‌ செறிவூட்டுதல்‌ மூலம்‌ நீர்வளத்தை மேம்படுத்துவதற்கு, 1,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ தடுப்பணைகள்‌ கட்டப்படும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இப்பேரவையில்‌ ஏற்கனவே அறிவித்துள்ளதை மாண்புமிகு உறுப்பினர்கள்‌ அறிவீர்கள்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, நபார்டு வங்கியின்‌ நிதியுதவியுடன்‌ 200 கோடி ரூபாய்‌ செலவில்‌ தடுப்பணைகளைக்‌ கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நபார்டு வங்கியின்‌ ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌, மேலும்‌ 250 கோடி ரூபாய்‌ செலவில்‌ தடுப்பணைகள்‌ கட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.300 crore continuation AIADMK

“During 2020-21, 1,364 irrigation works by the Public Works Department at at estimated cost of Rs.500 crore will be taken up. Rs.300 crore is provided in the Budget Estimates 2020-21 for the Kudimaramath Scheme.”
“மிகவும்‌ பாராட்டுப்‌ பெறும்‌ குடிமராமத்து திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 4,865 பணிகளை, 930.25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பொதுப்பணித்‌ துறை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, 4,059 பணிகள்‌ நிறைவடைந்துள்ள நிலையில்‌ மீதம்‌ உள்ள பணிகள்‌ விரைவில்‌ முடிக்கப்படும்‌. 2019-20 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌, பாசன ஏரிகளைப்‌ புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ 1,364 நீர்ப்பாசனப்‌ பணிகள்‌ 500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பொதுப்பணித்‌ துறையால்‌ மேற்கொள்ளப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ குடிமராமத்து திட்டத்திற்கென 300 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5,000 ஊராட்சி ஒன்றியங்களின்‌ பராமரிப்பில்‌ உள்ள சிறிய பாசன ஏரிகள்‌, கிராம ஊராட்சிகளின்‌ பராமரிப்பில்‌ உள்ள 25,000 குளங்கள்‌ மற்றும்‌ ஊருணிகளுக்கு புத்துயிர்‌ அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளதுடன்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 750 கோடி ரூபாய்‌ நிதியையும்‌ இணைத்துள்ளது. இதுவரை, மொத்தம்‌ உள்ள 30,000 பணிகளில்‌, 21,444 பணிகள்‌ நிறைவடைந்துள்ளன. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌, கிராமங்களில்‌ மீதமுள்ள குளங்கள்‌ மற்றும்‌ ஊருணிகள்‌ ஆழப்படுத்துதல்‌ மற்றும்‌ நகர்ப்புரங்களில்‌ உள்ள கோவில்‌ குளங்கள்‌ புனரமைப்பு ஆகிய பணிகள்‌, பல்வேறு திட்டங்களின்‌ கீழான நிதியைக்‌ கொண்டு ஊரக மற்றும்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள்‌ மேற்கொள்ளும்‌. இவை, நிலத்தடி நீர்‌ அமைப்புகளை செறிவூட்டுவதுடன்‌, மிக அதிகமாக நிலத்தடி நீர்‌ எடுக்கப்பட்ட ஒன்றியங்களில்‌ நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.32 · ¶57 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector