Agriculture · completed claimed
Native chicken rearing package
2 budgets named it 5 year span — ₹ crore allocated 97 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2012-13 and named again in 1 later budget, most recently 2016-17. Districts: 25.
Allocated by budget year
See it on the map → All Agriculture projects →
What each budget said, year by year
2012-13
“It is, hence, proposed to bring in a special package for encouraging native chicken rearing on a commercial scale throughout the State.”
“மாநிலத்தின் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை உயர்த்திட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் கோழி வளர்ப்புத் தொழிலில் பெற்றுள்ள வெற்றியை மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல இந்த அரசு விரும்புகிறது. ஆண்டொன்றிற்கு 1,080 கோடி முட்டைகளை உற்பத்தி செய்து, நாட்டின் முட்டை உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மேலும், நாட்டின் கோழிகளின் எண்ணிக்கையில் 17.71 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. கிராமப்புற ஏழை மக்களுக்கு, சுற்றுப்புற சூழலுக்குக் குந்தகமின்றி அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய, இலாபகரமான தொழிலாக கோழி வளர்ப்புத் தொழில் உருவெடுத்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வணிக ரீதியில் நாட்டுக் கோழி வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். மேலும், நாமக்கல் பகுதியில் இருப்பதை போன்று, சங்கரன்கோயில் மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும், கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி வளர்ப்பினை ஊக்குவித்து, கோழிப் பண்ணைகளை அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.25 · ¶39 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.97.35 crores
“In the past five years, 3,014 broiler farms and 10,195 native chicken farms have been established in 25 Districts at a cost of Rs.97.35 crores.”
“வேளாண்மைக்கு நிகரான முக்கியத்துவத்தை, கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்க வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, கால்நடைத் துறைக்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள். (முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இத்துறைக்கு ஒதுக்கீடுகளை அதிகரித்ததன் மூலமாக, விவசாயிகளின் வருவாயில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 மாவட்டங்களில் 97.35 கோடி ரூபாய் செலவில் 3,014 பிராய்லர் கோழிப் பண்ணைகளையும், 10,195 நாட்டுக் கோழிப் பண்ணைகளையும் அமைக்க இந்த அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 23111 கோடி ரூபாய் செலவில் 60,000 பயனாளிகளுக்கு 60,000 விலையில்லா கறவைப் பசுக்களையும், 927.75 கோடி ரூபாய் செலவில் ஏழு இலட்சம் பெண்களுக்கு 28 இலட்சம் வெள்ளாடுகள் / செம்மறி ஆடுகளையும் இந்த அரசு வழங்கியுள்ளது. இதன் பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும், 42.95 இலட்சம் ஆட்டுக் குட்டிகளையும் கூடுதல் சொத்தாக பயனாளிகள் பெற்றதோடு, நாளொன்றுக்கு 2.6 இலட்சம் லிட்டர் அளவிற்கு பால் உற்பத்தியையும் இந்த அரசு பெருக்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 593.65 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் பால்வளத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு பெருமளவு மேம்படுத்தியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.20 · ¶27 · source PDF ↗ · on the map →
Linked projects
- Native chicken 'Aseel' promotion scheme · sibling
Nearby in the same sector
- Mission on Sustainable Dry Land Agriculture · 3 years · shares a district
- Integrated Farming System · 3 years · shares a district
- Free milch animal distribution (Second White Revolution) · 9 years
- Agricultural mechanisation programme · 8 years
- Green fodder development scheme · 8 years
- Interest-free crop loan scheme · 8 years