Sports · announced once

Neighbourhood Sports Facilities, gymnasiums and sports complexes

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Sports projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“Further, to bring sports to the common people, Neighbourhood Sports Facilities, small gymnasiums and sports complexes will be created in all blocks and urban local bodies.”
“உலகத்தரம்‌ வாய்ந்த வெற்றியாளர்களை உருவாக்குதல்‌ மற்றும்‌ இளைஞர்களுக்கு இடையே ஆரோக்கியம்‌ மற்றும்‌ உடற்தகுதியைப்‌ பேணும்‌ பண்பாட்டை வளர்த்தல்‌ ஆகிய இருமுனை அணுகுமுறையின்‌ மூலம்தான்‌ உண்மையான விளையாட்டு வளர்ச்சியை அடைய முடியும்‌. விளையாட்டு என்பது நமது பள்ளிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்‌. தற்போது, அரசு மற்றும்‌ அரசு உதவிடுபறும்‌ பள்ளிகளில்‌ ஒவ்வொரு வகுப்பிற்கும்‌ வாரத்திற்கு இரண்டு விளையாட்டுப்‌ பாடவேளைகள்‌ மட்டுமே உள்ளன. இந்நிலை மாற்றப்பட்டு, பள்ளி நேரத்திற்குப்‌ பிறகு தினமும்‌ ஒரு மணி நேரம்‌ முறைப்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும்‌ உடற்பயிற்சி செயல்பாடுகள்‌ அறிமுகப்படுத்தப்படும்‌. இத்திட்டத்திற்குத்‌ தேவையான விளையாட்டு உபகரணங்கள்‌ மற்றும்‌ வசதிகள்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளுக்கும்‌ வழங்கப்படும்‌. இது மாணவர்களின்‌ உடற்தகுதி, சிந்தனைத்‌ திறன்‌ வளர்ச்சி, கூட்டுச்செயல்பாடு மற்றும்‌ ஒழுக்கத்தை வலுப்படுத்துவதுடன்‌, மாநில, தேசிய மற்றும்‌ சர்வதேச அளவில்‌ சாதனை படைக்கக்கூடிய திறமை கொண்டவர்களைக்‌ கண்டறிவதற்கும்‌ வழிவகுக்கும்‌. மேலும்‌, விளையாட்டை பொதுமக்களுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ வகையில்‌, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள்‌ மற்றும்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின்‌ அருகாமைப்‌ பகுதிகளில்‌ விளையாட்டு வசதிகள்‌ (Neighbourhood Sports Facilities), சிறிய உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ விளையாட்டு வளாகங்கள்‌ உருவாக்கப்படும்‌. இளைய தலைமுறையினர்‌ ஒவ்வொருவரும்‌ தங்களுடைய விட்டிலிருந்து நடக்கும்‌ தூரத்தில்‌ விளையாடுவதற்கான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதன்‌ மூலம்‌, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும்‌ ஒழுக்கமிக்க தலைமுறையை நாம்‌ உருவாக்குவோம்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶34) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.21 · ¶34 · full speech ↗ · on the map →

Nearby in the same sector