Industry · dormant
New MSME Policy 2021
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2021-22
“To maintain Tamil Nadu’s leading position in the Micro, Small and Medium Enterprises sector, the Government of Tamil Nadu has released a New MSME Policy on 16th February, 2021.”
“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்குவதற்கு, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாளன்று, புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதலீட்டு வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டதுடன், விற்பனை அளவு சார்ந்த வரன்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரையறையை மத்திய அரசு மாற்றியது. இந்த மாற்றப்பட்ட வரையறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் வளர்ச்சியடைவதற்கும் உதவும். 110 தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கோவிட்-19 பெருந்தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், புத்துயிர் அளிப்பதற்கும் டாக்டர்.சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும் கூடுதல் மூலதனமாக 1,000 கோடி ரூபாயை அரசு வழங்கும். இதற்காக, 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶110) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.70 · ¶110 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years