Irrigation · dormant
Restoration of traditional water bodies
4 budgets named it 4 year span 286 ₹ crore allocated 200 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2014-15.
Allocated by budget year
See it on the map → All Irrigation projects →
What each budget said, year by year
2011-12 ` 200 crores
“A sum of ` 200 crores is sanctioned under the Thirteenth Finance Commission for the restoration of traditional water bodies and ` 50 crores will be spent during the year 2011-2012.”
“நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பதிமூன்றாவது நிதிக்குழு பரிந்துரைப்படி பாரம்பரிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 50 கோடி ரூபாய் 2011-2012 ஆம் ஆண்டில் செலவிடப்படும். நபார்டு வங்கியின் ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 67 கோடி ரூபாய் செலவில், 4 திட்டங்களின் கீழ் ஏரிகளின் கொள்ளளவு, நீர் உபயோகத்திறன் ஆகியவை அதிகரிக்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தின் மூலமாக நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கு 11.27 கோடி ரூபாய் செலவில் உரிய நீர் ஆதார கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். வேளாண் பொறியியல் துறை பல்வேறு நீர் சேகரிப்பு முயற்சிகள் வாயிலாக நீர்பயன்பாட்டுத் திறனை உயர்த்த பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திருக்கோவிலூர், குண்டாறு, கொடகனாறு, வைகை, தெற்குவெள்ளாறு, கொடிவேரி போன்ற ஆற்றுப் பாசனப் பகுதிகளில் இத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011-2012 ஆம் ஆண்டு கால்வாய், வாய்க்கால்களின் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த, பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.26 · ¶41 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.200 crores
“Under the Thirteenth Finance Commission grants, 674 works for restoration of traditional water bodies at a cost of Rs.200 crores are being taken up.”
“நமது மாநிலத்தில் குறைவான அளவிலேயே நீர் ஆதாரம் உள்ளதால், நமது ஏரிகளின் கொள்ளளவை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும். அனைத்துப் பாசன ஏரிகளையும் புனரமைத்து, அவற்றின் கொள்ளளவை ஏற்கெனவே இருந்த அளவிற்கு உயர்த்துவதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த அரசு வகுத்துள்ளது. இதன்படி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13,699 ஏரிகளில், 6,436 ஏரிகளில் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 7,263 ஏரிகளும் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். இதுபோன்றே, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 21,609 சிறு பாசன ஏரிகளும், 3,884 பிற முக்கிய நீர்நிலைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நபார்டு கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மூலமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். பதிமூன்றாவது நிதிக்குழு அளித்துள்ள நிதியைப் பயன்படுத்தி, 200 கோடி ரூபாய் செலவில் பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைப்பதற்கான 674 பணிகள் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 184.50 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாய்ப் பணிகள், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நபார்டு கடனுதவியோடு செயல்படுத்தப்பட்டுவரும் நான்கு வெள்ளத் தடுப்புப் பணிகளை உள்ளிட்ட, 67 நீர் ஆதாரத் திட்டங்கள், 685.34 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 2012-2013 ஆம் ஆண்டில், நபார்டு கடனுதவியுடன் நீர் ஆதாரங்களை புனரமைக்கவும், நவீனமயமாக்கவும் மேலும் 45 பணிகளை செயல்படுத்த உள்ளோம். சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.31 · ¶48 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.50 crores
“Similarly, 176 works for the rehabilitation of traditional water bodies at a cost of Rs.50 crores will be taken up in 2013-2014.” financedept_2013-14_speech_en · p.25 · ¶58 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.86.28 crore
“Similarly, 160 works are proposed to be taken up for restoration of traditional water bodies and Rs.86.28 crore has been allocated in the Budget Estimates 2014-2015.”
“திருவாரூர் மாவட்டத்தில் காவேரி, வெண்ணாறு துணை வடிநிலப் பகுதிகளில் 19.82 கோடி ரூபாய் செலவில் 1335 செயற்கை நீர்ச் செறிவூட்டல் குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும். நபார்டு வங்கியின் நிதியுதவியோடு, 2013-2014 ஆம் ஆண்டில் 209.89 கோடி ரூபாய் செலவிலான 32 திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில், நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாசனப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 86.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.23 · ¶43 · source PDF ↗ · on the map →
Linked projects
- Mission for Water Resource Management / Kudimaramath revival · sibling
- Renovation of rural water bodies · sibling
- Restoration of 5,000 water bodies · sibling
- Restoration of rural water bodies (completed) · sibling
Nearby in the same sector
- Dam Rehabilitation and Improvement Project (DRIP) · 11 years
- Micro Irrigation Mission (State funds) · 11 years
- Tamarabarani–Nambiar river link · 7 years
- Climate Change Adaptation Programme in Cauvery Delta · 6 years
- Athikadavu - Avinashi Flood Canal Project · 6 years
- Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management (IAMWARM) Phase-II · 5 years