Energy · dormant
Solar street lights scheme
2 budgets named it 2 year span — ₹ crore allocated 248 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2011-12 ` 248 crores
“A scheme has been envisaged to energise one lakh street lights with solar power in 1000 villages at the rate of 20,000 lights per year at a cost of ```` 248 crores”
“ஆண்டுக்கு 20,000 தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் 248 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தியில் எரியும் ஒரு இலட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் இதில் மாநில அரசின் பங்கு 19160 கோடி ரூபாயாகவும், மத்திய அரசின் மானியம் 56.40 கோடி ரூபாயாகவும் இருக்கும். 2011-2012 ஆம் ஆண்டில் 200 கிராமங்களில் 20,000 தெரு விளக்குகள் சூரிய எரி சக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதற்கென ஆகும் செலவான 49.60 கோடி ரூபாயில் மத்திய அரசு 11.20 கோடி ரூபாயையும், மாநில அரசு 38.40 கோடி ரூபாயையும் பகிர்ந்து கொள்ளும். இதேபோன்று 2011-2012 ஆம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 60,000 பசுமை வீடுகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கட்டப்படும். மத்திய அரசின் 48.60 கோடி ரூபாய் மானியம் உட்பட சுமார் 180 கோடி ரூபாய் செலவில் பசுமை வீடுகளுக்கு சூரிய எரிசக்தி வழங்கும் பணியினை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். அரசு ஏற்கெனவே உறுதியளித்தவாறு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு-தனியார் பங்களிப்பு முறையில் திறந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளைப் பின்பற்றி 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும். சாலைகள், சிறு துறைமுகங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.44 · ¶71 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.50 crores
“20,000 more street lights will be energised with solar power at a cost of Rs.50 crores.”
“காற்றாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை கொண்டுசெல்லத் தேவையான கட்டமைப்பை மேம்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென, மத்திய அரசிடமிருந்து நிதியுதவியும் கோரப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அவ்வீடுகளுக்கு சூரிய மின்விளக்குகள் அளிக்கும் திட்டமும், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளை அமைக்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் 2012-2013 ஆம் ஆண்டில் மேலும் 60,000 வீடுகளுக்கு சூரிய மின்விளக்குகள் 180 கோடி ரூபாய் செலவில் அளிக்கப்படும். அதேபோல், மேலும் 20,000 தெரு விளக்குகளுக்கு 50 கோடி ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்வசதி அளிக்கப்படும். நமது மின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நீண்டகாலத் திட்டங்களாக, சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள், கடலோரங்களிலும், கடல் பரப்பிலும் அமைக்கப்படும் காற்றாலை திட்டங்கள், 'பயோமாஸ்' அனல் மின் உற்பத்தித் திட்டங்கள் ஆகிய திட்டங்களுக்கு இந்த அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும். நகர்ப்புர வீட்டுவசதி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.47 · ¶73 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 7 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years