Rural development · dormant
Swachh Bharat Mission (Gramin)
First announced in 2015-16 and named again in 5 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme continues an earlier one under a new name: Nirmal Bharat Abhiyan (solid/waste water management) (2013-14–2014-15). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Rural development projects →
What each budget said, year by year
2015-16 Rs.200 crores
“In the coming financial year, Rs.200 crores is being set apart again for rural solid waste management and Rs.200 crores is being provided for the Swachh Bharat Mission (Gramin) in rural areas.”
“அனைவரும் எதிர்நோக்கியுள்ள கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய அரசு கணிசமான நிதியுதவி வழங்கும் என நம்புகிறோம். இந்த அரசு 'தூய்மை கிராமம்! இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதோடு கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்த ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் நிதியை பகிர்வு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளது. குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் போன்ற அனைத்து திடக்கழிவு மேலாண்மையையும் முக்கிய அம்சங்களாகக் கொண்ட முன்மாதிரி தூய்மை கிராமங்களை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த திட்டம், சோதனை அடிப்படையில் 2,000 ஊராட்சிகளில் 2015-2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும். மேலும், 2015-2016 ஆம் ஆண்டில் கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 15 இலட்சம் வீட்டுக் கழிப்பறைகள் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.44 · ¶72 · source PDF ↗ · on the map →
2016-17
“Under the 'Swacch Bharat Mission' (Gramin) in 2016-2017, 7.66 lakh household toilets and 50 public sanitary complexes will be taken up in the State.”
“தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்)” கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 7.66 இலட்சம் வீட்டுக் கழிவறைகளும், 50 பொது சுகாதார வளாகங்களும் கட்டப்படும். கழிவறைகளை அமைத்து, அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதை மக்களிடம் ஊக்கப்படுத்தும் பணியில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள சுய உதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 9,000 கிராம ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு வலுசேர்க்க 52,998 தூய்மைக் காவலர்கள் அமர்த்தப்பட்டு, 22,704 மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குப்பைகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து ஊரகப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். மாநில அரசால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலிருந்து, திடக்கழிவு மேலாண்மைக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.50 · ¶102 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.980 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.980 crore has been allocated for Swachh Bharat Mission (Gramin).”
“மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கழிவறைகள் கட்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை செம்மைப்படுத்தவும் இந்த அரசு 'தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கத்தை” துவக்கியுள்ளது. அனைத்து கிராமங்களிலும் இத்திட்டத்தின் மூலம் 100 சதவீதம் சுகாதார இலக்கை அடைய இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் 15.17 இலட்சம் வீட்டுக் கழிவறைகள், 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டும் பணிகள் 182140 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டில் 'தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்)' கீழ், 24.28 இலட்சம் வீட்டுக் கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும். திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 65,874 பணியாளர்களை *'தூய்மைக் காவலர்களாக! இந்த அரசு தொடர்ந்து பயன்படுத்தும். இந்த முயற்சியால், மாநிலத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரக தூய்மை இந்தியா இயக்கத் திட்டத்திற்காக 980 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.52 · ¶93 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.1,074 crore
“An allocation of Rs.1,074 crore is made for Swachh Bharat Mission (Gramin) in the Budget Estimates 2018-2019.”
“தூய்மை இந்தியா இயக்கத்தின் (ரகம்)” கீழ், இதுவரை 4,975.52 கோடி ரூபாய் செலவில் 45.63 இலட்சம் தனிநபர் கழிவறைகள் இந்த அரசால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் 2,528.54 கோடி ரூபாய் செலவில் 19.42 இலட்சம் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தத் தக்க கழிவறைகள் அமைக்கப்பட்டதன் அடிப்படையில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அறவே இல்லாத மாவட்டங்களாக 17 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017-2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 'தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்)' கீழ், ஊரகப் பகுதிகளில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு அறிவிக்கப்படும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் “தூய்மை இந்தியா இயக்கத்திற்காக (ரகம்)” 1074 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.53 · ¶90 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.400 crore
“A sum of Rs.400 crore has been provided in the Budget Estimates for Swachh Bharat Abhiyan (Gramin).”
“அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் போதுமான அளவிற்கு ஏற்படுத்த அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் அமைத்தல், குடிநீர் வழங்கல், தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு பணிகளில் இந்த அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில் கிராமப்புற சாலை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களின் கீழ் 1077.46 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிலும், அதே போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு 1,200 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு திட்டங்களிலிருந்து நிதி ஒருங்கிணைக்கப்பட்டு, கிராமப்புற சாலைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். மேலும், 20.05 இலட்சம் தெரு விளக்குகள் ஒளி உமிழும் (LED) மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் பலனாக, மின்சாரக் கட்டணத்தில் ஆண்டுக்கு 74 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சுகாதாரம் குறித்த கணக்கெடுப்பிற்குப் பிறகு, மாபெரும் சாதனையாக, கிராமங்களில் 48.94 இலட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டதால், அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை எட்டிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இயக்கத்திற்காக (கிராமம்) இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.31 · ¶52 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.400 crore
“During 2021-22, the Swacch Bharat Mission will be implemented at a total cost of Rs.400 crore in Tamil Nadu to provide 44,855 individual house latrines and construct 1,028 community sanitary complexes and 97 plastic waste management centres.”
“கிராமப்புர மக்களின் நலனை மேம்படுத்த சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் முக்கியமானது. 2021-22 ஆம் ஆண்டில், 44,855 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளை அமைக்கவும், 1,028 சமூக சுகாதார வளாகங்களையும் 97 நெகிழி கழிவு மேலாண்மை மையங்களையும் அமைக்க மொத்தம் 400 கோடி ரூபாய் செலவில், “தூய்மை பாரத இயக்கம்” செயல்படுத்தப்படும். இது தவிர, 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவைகள் வழங்கப்படும். 64 2020-21 காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 4,67,567 பணிகளில் 2,65,016 பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை அமல்படுத்துவததில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜான் டிரேஸ் முக்கிய பங்கை வகித்தார், இந்த அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் உந்துதலை அளிப்பதுடன், மொத்த ஊதிய செலவு 6825 கோடி ரூபாயும், பொருட்செலவாக 3,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து, நடப்பாண்டில் 25 கோடி மனித உழைப்பு நாட்கள் அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யும், மேலும், இத்திட்டத்தில் மனித உழைப்பு நாட்களை 100இலிருந்து 150 ஆக உயர்த்தவும், ஊதியத்தினை நாளொன்றுக்கு 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தவும் இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.29 · ¶63 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“under the Swach Bharat Mission (Gramin) Phase II, the goal is to ensure that this status is sustained and no households are left behind. In 2020-21, 1.79 lakh new and left out households have been identified and Individual Household Latrines are being constructed for them at a cost of Rs.214.63 crore. In addition, 2,749 Community Sanitary Complexes are being constructed at a cost of Rs.144.33 crore in habitations where households do not have enough space for construction of individual latrines.”
“ஊரகப் பகுதி மக்களின், குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்த, சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ்நாடு, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை ஏற்கெனவே அடைந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் இளரகம்) இரண்டாம் கட்டத்தில், இந்த நிலையைத் தக்கவைத்து, எந்த ஒரு வீடும் விடுபடாமல் பயன்பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2020-21 ஆம் ஆண்டில் 1.79 இலட்சம் புதிய மற்றும் விடுபட்ட வீடுகள் கண்டறியப்பட்டு, 214.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிக் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், தனிக் கழிவறைகள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத குடியிருப்புப் பகுதிகளிலும், 144.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.43 · ¶66 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Swachh Bharat Mission 2.0 (SBM-2.0) · 2022-23
- renames or replaces Nirmal Bharat Abhiyan (solid/waste water management) · 2013-14 –2014-15
- runs alongside Swachh Bharat Mission (urban) · 2015-16 –2018-19
- part of Individual household latrines · 2016-17 –2021-22
- part of Community Sanitary Complexes (SBM-G II) · 2021-22
Nearby in the same sector
- Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) · 13 years
- MLA Constituency Development Scheme (MLACDS) · 10 years
- Devolution grants to local bodies · 7 years
- Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) · 6 years
- State Balanced Growth Fund (SBGF) · 6 years
- Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) · 6 years