Other · dormant
Tamil Nadu Infrastructure Development Board and Vision 2025
4 budgets named it 8 year span 1,300 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Other projects →
What each budget said, year by year
2011-12
“This Government will also constitute a Tamil Nadu Infrastructure Development Board under the Chairmanship of the Hon’ble Chief Minister”
“பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத துறைகளிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்துவதற்கு தொகுப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் நோக்கில், ஏற்கெனவே இந்த ஆண்டு ஆளுநர் உரையில் அறிவித்தவாறு ‘2025 தொலைநோக்கு திட்டத்தை” தயாரிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒன்றினையும் இந்த அரசு உருவாக்கும். இந்த வாரியம், தொடர்ந்து பல்வேறு திட்டக் கருவினைக் கண்டறிந்து, தக்க மதிப்பீடு செய்து அவற்றின் தன்மைக்கேற்ப அரசு-தனியார் பங்களிப்பு முறையிலோ, அரசே நேரடியாகவோ இத்திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்யும். இத்தகைய அமைப்பு அடிப்படையிலான ஏற்பாட்டின் மூலம் ஓர் இணக்கமான செயலாக்கச் சூழ்நிலை உருவாக்கப்பட்டு, முதன்மை, இரண்டாம், மூன்றாம் நிலைத் துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் என உறுதியாக நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.33 · ¶51 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.1,000 crores
“we will shortly introduce legislation to form the Tamil Nadu Infrastructure Development Board with the Hon'ble Chief Minister as the Chairperson to commence implementation of the new projects. We have allocated Rs.1,000 crores to begin with, for the Tamil Nadu Infrastructure Development Fund in the Budget Estimates for 2012-2013.”
“பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சி அடையச் செய்யவும், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முக்கிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு தேவை என இத்தொலைநோக்குத் திட்டம் கணக்கிட்டுள்ளது. இந்த கொள்கை இலக்குகளைக் கருத்தில் கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உறுதியளித்தவாறு, இந்த புதிய திட்டங்களைத் தொடங்கி செயல்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தை விரைவில் அமைப்பதற்கான சட்டம் இயற்றப்படும். தொடக்கமாக, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 1,000 கோடி ரூபாய் இந்த 2012-2013 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொலைநோக்குத் திட்டம் 2023-ல் வகுக்கப்பட்டுள்ள இலக்குகளை எய்துவதற்கு நாம் பயணிக்க உள்ள பாதையில், இது நல்லதொரு தொடக்கமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். பொருளாதார மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.6 · ¶9 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.200 crore
“An amount of Rs.200 crore has also been allocated for the Project Preparation Fund of the Tamil Nadu Infrastructure Development Board (TNIDB).” tnbudget_2017-18_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.100 crore
“Rs.100 crore has been provided for the Project Preparation Fund of the Tamil Nadu Infrastructure Development Board.”
“தொலைநோக்குப் பார்வையும், மதிநுட்பமும் மிக்க தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட, 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணம், மாநில வளர்ச்சி மற்றும் சமூகநலத் திட்டங்களை உருவாக்குவதற்கு இந்த அரசுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான நிதி ஆதாரங்களின் ஒரு பகுதியை, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் மூலம் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியத்தின் மொத்த நிதியில், முதலில் ஈடுசெய்யப்படும் ஊக்க மூலதனமாக (First Loss Catalytic Capital) வழங்கப்பட வேண்டிய 300 கோடி ரூபாயில், 30 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இந்த ஊக்க மூலதனத்திற்காக மீதமுள்ள 270 கோடி ரூபாயும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் திட்டத் தயாரிப்பு நிதிக்காக 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.5 · ¶6 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Infrastructure Development Fund · 3 years
- Project Preparation Fund · 3 years
- Local Body elections · 3 years
- Revenue Department office buildings · 3 years
- Tamil Nadu Infrastructure Fund (AIF-I via TNIFMC) · 2 years
- First Loss Catalytic Capital (FLCC) balance · 2 years