Irrigation · dormant

Tank rehabilitation programme

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and not named in any budget since.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2012-13 continuation AIADMK

“Out of 13,699 tanks under the control of the Public Works Department, 6,436 tanks have already been taken up under various programmes. The remaining 7,263 tanks will be taken up for restoration under ongoing programmes. Similarly, 21,609 Minor Irrigation Tanks under the control of the Panchayat Unions and 3,884 other important water bodies will be restored and improved”
“நமது மாநிலத்தில்‌ குறைவான அளவிலேயே நீர்‌ ஆதாரம்‌ உள்ளதால்‌, நமது ஏரிகளின்‌ கொள்ளளவை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும்‌. அனைத்துப்‌ பாசன ஏரிகளையும்‌ புனரமைத்து, அவற்றின்‌ கொள்ளளவை ஏற்கெனவே இருந்த அளவிற்கு உயர்த்துவதற்கான ஒரு சிறப்புத்‌ திட்டத்தை இந்த அரசு வகுத்துள்ளது. இதன்படி பொதுப்பணித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள 13,699 ஏரிகளில்‌, 6,436 ஏரிகளில்‌ பல்வேறு திட்டங்களின்‌ மூலம்‌ ஏற்கனவே பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 7,263 ஏரிகளும்‌ தற்போது நடைமுறையில்‌ உள்ள பல்வேறு திட்டங்களின்‌ கீழ்‌ மேம்பாட்டிற்கு எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. இதுபோன்றே, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில்‌ உள்ள 21,609 சிறு பாசன ஏரிகளும்‌, 3,884 பிற முக்கிய நீர்நிலைகளும்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்‌ திட்டம்‌ மற்றும்‌ நபார்டு கடனுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ திட்டங்கள்‌ மூலமாக அடுத்த மூன்று ஆண்டுகளில்‌ மேம்படுத்தப்படும்‌. பதிமூன்றாவது நிதிக்குழு அளித்துள்ள நிதியைப்‌ பயன்படுத்தி, 200 கோடி ரூபாய்‌ செலவில்‌ பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைப்பதற்கான 674 பணிகள்‌ செயல்பாட்டிற்கு எடுத்துக்‌ கொள்ளப்பட்டுள்ளன. 184.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பரம்பிக்குளம்‌- ஆழியாறு திட்டத்தின்‌ காண்டூர்‌ கால்வாய்ப்‌ பணிகள்‌, 2013 ஆம்‌ ஆண்டு ஆகஸ்டு திங்களில்‌ நிறைவடையும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. நபார்டு கடனுதவியோடு செயல்படுத்தப்பட்டுவரும்‌ நான்கு வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளை உள்ளிட்ட, 67 நீர்‌ ஆதாரத்‌ திட்டங்கள்‌, 685.34 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌, நபார்டு கடனுதவியுடன்‌ நீர்‌ ஆதாரங்களை புனரமைக்கவும்‌, நவீனமயமாக்கவும்‌ மேலும்‌ 45 பணிகளை செயல்படுத்த உள்ளோம்‌. சுற்றுச்சூழல்‌, வனப்‌ பாதுகாப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.31 · ¶48 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector