IT & governance · dormant

TNSWAN Phase III

1 budget named it 1 year span 444 ₹ crore allocated AIADMK government

First announced in 2018-19 and not named in any budget since.

See it on the map → All IT & governance projects →

What each budget said, year by year

2018-19 Rs.443.64 crore new project AIADMK

“TNSWAN Phase III project will be commenced soon at an estimate of Rs.443.64 crore to strengthen the IT network from State Headquarters to blocks.”
“தமிழ்நாட்டில்‌ 8 தகவல்‌ தொழில்நுட்பப்‌ பூங்காக்களை அரசு ஏற்படுத்தியுள்ளது, அவற்றில்‌, சேலம்‌ மற்றும்‌ ஒசூரில்‌ புதிய தகவல்‌ தொழில்நுட்பப்‌ பூங்காக்கள்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சமீபத்தில்‌ தொடங்கி வைக்கப்பட்டன. ஊரகப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு நம்பகமான, அதிவேக இணைப்பினை வழங்கும்‌ வகையில்‌, கண்ணாடி இழை வட வலையமைப்பு (Optical Fibre Network) மூலம்‌ கிராமங்களை வட்டாரத்‌ தலைமையகத்துடன்‌ இணைக்க, 1230 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பாரத்‌ நெட்‌ திட்டம்‌ தமிழ்நாடு இழை வலையபைப்புக்‌ கழகத்தின்‌ (Tamil Nadu Fibre Net Corporation) மூலம்‌ செயல்படுத்தப்படும்‌. இதேபோன்று, மாநிலத்‌ தலைமையிடத்தை மாவட்டத்‌ தலைமையிடங்களுடனும்‌, வட்டாரத்‌ தலைமையிடங்களுடனும்‌ கண்ணாடி இழை வட வலையமைப்பு மூலமாக இணைக்க, அரசுத்‌ துறை-தனியார்‌ துறை பங்களிப்புடன்‌ தமிழ்‌ நெட்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. மாநில அளவிலான அலுவலகங்களை தகவல்‌ தொழில்நுட்ப வலையமைப்பு மூலம்‌ வட்டாரங்களுடன்‌ இணைப்பதை மேலும்‌ செம்மைப்படுத்த தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்புத்‌ திட்டத்தின்‌ மூன்றாம்‌ கட்டப்‌ பணிகள்‌ (Tamil Nadu State Wide Area Network — Ill) 443.64 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ தகவல்‌ தொழில்நுட்பத்‌ துறைக்கு 158.11 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்‌ வளர்ச்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.41 · ¶66 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector