Education · dormant
Tribal schools infrastructure (Forest Department)
2 budgets named it 2 year span — ₹ crore allocated 50 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2016-17 Rs.12 crores
“Further, infrastructure in tribal schools run by the Forest Department will be improved at a cost of Rs.12 crores with NABARD assistance.”
“ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்” (Comprehensive Tribal Development Programme), மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அவர்கள் வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும், 2016-2017 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 12 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி கடனுதவியுடன் வனத்துறையால் நடத்தப்படும் பழங்குடியினருக்கான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாநிலத்தில் வாழும் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக 28.80 கோடி ரூபாயும், 'வனபந்து கல்யாண் யோஜனா திட்டத்தைச்” செயல்படுத்துவதற்காக 7 கோடி ரூபாயும் இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶131 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.49.84 crore
“To improve infrastructure in 157 GTR schools and schools run by the Forest Department, works have been taken up during 2016-2017 with NABARD assistance at a total cost of Rs.49.84 crore.”
“2016-2017 ஆம் ஆண்டில், மொத்தம் 49.84 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, நபார்டு வங்கி கடனுதவியுடன் 157 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளவும், பழங்குடியினக் குடும்பங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிடவும், 2011-2012 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்” அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த அரசு, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கி கல்வி பயிலும் வகையில், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் (Model Residential School) ஆசிரியர் குடியிருப்புகளுடன் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இதன் பயனாக அப்பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளி வரை கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெறுவர். 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாயும், அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.68 · ¶124 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years