Urban · dormant
Urban poverty alleviation programmes (TNULM / NULM)
1 budget named it 1 year span 300 ₹ crore allocated AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since.
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2018-19 Rs.300 crore
“A total allocation of Rs.300 crore has been provided in the Budget Estimates 2018-2019 for urban poverty alleviation programmes.”
“மத்திய அரசின் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிடைக்கப் பெறும் நிதியுதவியுடன், மாநில நிதியில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில், மத்திய அரசிடமிருந்து இதுவரை தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு 59.40 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகர்ப்புர வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக மொத்தமாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு வருவாய்க் கணக்கில் செலவுகள் 2018-2019 ஆம் ஆண்டில் வருவாய்க் கணக்கு செலவுகள் 193,742 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2017-2018 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளை விட 11.22 சதவீதம் கூடுதலாகும். வருவாய்க் கணக்கு செலவுகளின் முக்கிய கூறுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ந 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 52,171 கோடி ரூபாயாகும். ஒய்வூதியம் மற்றும் இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு 25,362 கோடி ரூபாயாகும். ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியதால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகள் மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சம்பளங்கள், ஒய்வூதியம் மற்றும் இதர ஓய்வுக்கால செலவினங்களுக்கான ஒதுக்கீட்டில் உயர்வு காணப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீடுகள், 2018-2019 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய்ச் செலவுகளில் 40.02 சதவீதமாகும். அகவிலைப்படியின் காலமுறை உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவுகளின் காரணமாக, 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளுக்கான சம்பளச் செலவினம், மற்றும் ஓய்வூதியம் மற்றும் இதர ஒய்வுகாலப் பலன்கள் குறித்த செலவினங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம், முறையே 10.50 மற்றும் 10.15 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ந 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு 75,723 கோடி ரூபாயாகும். உணவு மானியம், மின்சார மானியம், கல்வி உதவித்தொகைகள், வீட்டுவசதித் திட்டங்கள், விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் போன்ற தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் இந்த மதிப்பீடுகளில் உள்ளடங்கியுள்ளன. மேலும், ஐந்தாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு அதிகரிக்கப்பட்டு, வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ட். ந 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 10,838 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், குறிப்பாக, பராமரிப்பு, நிர்வாகச் செலவுகள், எரிபொருள் செலவுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் ஆகிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாகும். 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ட். ந 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வட்டி செலுத்துவதற்கான செலவினம் 29,624 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவுகளில் 15.29 சதவீதமாகும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு மொத்த வருவாய் வரவில் 16.81 சதவீதமாகும். இது, 2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுகளில், முறையே, 17.92 மற்றும் 17.52 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.8 · ¶11 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years