Welfare · announced once
Bank concessions for government employees
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2025-26
“major banks in Tamil Nadu, where Government employees maintain their salary accounts, have come forward to provide various concessions free of cost to the Government employees and their families.”
“மக்கள் நலத்திட்டங்களை நாட்டிலேயே மிகச் சிறப்பாக நிறைவேற்றிட அயராது உழைத்து வரும் அரசு அலுவலர்கள் நலனைக் காப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அரசு அலுவலர்கள் தங்களது ஊதியக் கணக்கைப் பராமரித்து வரும் தமிழ்நாட்டின் முக்கிய வங்கிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கட்டணமின்றிப் பல சலுகைகளை அளித்திட முன்வந்துள்ளன. > அரசு அலுவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன. > விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண் வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா 5 இலட்சம் ரூபாய் விதம் 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவி வங்கிகள் வழங்கிடும். > விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிகள் வழங்கிடும். > அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய் வங்கிகள் வழங்கிடும். > மேலும், தனிநபர் வங்கிக் கடன், விட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶211) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.90 · ¶211 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years