Industry · announced once
Bioscience park
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2025-26 and not named in any budget since. Places named: Chennai.
Located at Chennai · Chennai district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2025-26
“a state-of-the-art bioscience park will be developed near Chennai. This park will feature world-class infrastructure, common testing centres, laboratories and other essential technological facilities required for manufacturing high-value-added products in the sector, along with plug-and-play manufacturing facilities.”
“அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கிட, பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாகக் கொண்டு சேர்த்திட இந்தத் திராவிட மாடல் அரசு அயராது உழைத்து வருகிறது. அந்த உயரிய நோக்கத்தை நடைமுறைப்படுத்திடும் வகையில் கீழ்க்கண்ட தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, உலகின் முன்னணி நிறுவனங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில், விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற தோல் அல்லாத காலணி உற்பத்தித் தொழிற்சாலைகளின் மூலம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அவர்களில் 80 சதவிதம் பேர் ஊரகப் பகுதிகளைச் சார்ந்த பெண்களாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இத்துறையில், நாட்டிலேயே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த உற்பத்தித் துறையில், இவ்வருடம் 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் மதுரை மாவட்டம் மேலூறிலும், 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூறரிலும், இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும். மத்திய மண்டலத்தில் 5,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஏற்கெனவே பசுமை ஹைட்ரஜன் மற்றும் வாகன உற்பத்தித் துறையில் கணிசமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். 6 கடலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். 6 கோவை மாவட்டம் பம்பு மோட்டார் உற்பத்தி மற்றும் வார்ப்பகத் தொழிலில் நாட்டிலேயே சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துறைகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மையம் ஒன்றும், வார்ப்பகத் தொழிலுக்கான உயர் திறன் மையம் (Centres of Excellence For Advanced Pump Motor Manufacturing and Foundry) ஒன்றும், தொழில் கூட்டமைப்பினரோடு இணைந்து டிட்கோ நிறுவனம் அமைக்கும். உயிரி தொழில்நுட்பத் துறையில் பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. உயிரி தொழில்நுட்ப சூழலமைப்பை ஊளக்குவிப்பதற்காகவும், உயிரியல் மருந்து (01௦ண்றயா5) மற்றும் நோய் தீர்வியல் (Therapeutics) போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தவும், அதிநவீன உயிர் அறிவியல் பூங்கா ஒன்று சென்னைக்கு அருகில் உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த, தரமான உட்கட்டமைப்பு வசதிகள், பொது சோதனை மையங்கள், ஆய்வகங்கள் மற்றும் இத்துறையின் உயர் மதிப்புக்கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்திடத் தேவையான பிற முக்கிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஆயத்த உற்பத்திக் கூடங்கள் (Plug & Play) ஆகியவை அமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.54 · ¶114 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years