Education · recurring
Book fairs and literary festivals
3 budgets named it 3 year span 23 ₹ crore allocated 6 ₹ crore whole-project cost DMK government
First announced in 2022-23 and named again in 2 later budgets, most recently 2024-25.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2022-23 Rs.5.6 crore
“The book fairs and literary festivals will be held next year at a cost of Rs.5.6 crore.”
“சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.23 · ¶63 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.10 crore
“moving beyond Chennai, book fairs were conducted in all districts and five literature festivals were successfully conducted during the current year. This great initiative will continue next year also, at a cost Rs.10 crore.”
“அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் ஒுவற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புறிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். 28, பொது வாழ்வில் அனைத்துத் தளங்களிலும் சமூகந்தியையும் சமத்துவத்தையும் சமஉ ரிமையையும் நிலைநாட்டிட கல்வி நிலையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இதன் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் டசன்றடைய வேண்டியது அவசியமாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 19-08-2021 மற்றும் 12-04-2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கல்விப் பெருவழியில் நமது இலட்சியமான சமூகந்தியை அடைந்திட, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி டுசய்யவும் வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலயையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும். 29, தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶27) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.12 · ¶27 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.13 crore
“From 2022-23, these events are being conducted with a financial assistance of Rs.13 crore.”
“வாசிப்பை நேசிக்கும் மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிடும் உயரிய நோக்கில், சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2022-23 ஆம் ஆண்டு முதல் 13 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில், 37 மாவட்டங்களில் நடைடுபற்ற புத்தகக் கண்காட்சிகளில், சுமார் 55 இலட்சம் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயனணடைந்துள்ளனர். மேலும், இக்கண்காட்சிகளின் வாயிலாக, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 72, இளைஞர்கள் அறிவுசார் தளத்தில் உயர்ந்திட நூலகங்கள் முதன்மைக் களமாக உள்ளன. குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி 73, நாட்டிலேயே உயர்கல்விச் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்தச் சாதனை அளவைத் தக்கவைத்திடவும், SOO மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியினைத் தொடர்ந்து வழங்கிடவும் இந்த அரசு பல முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசுக் கல்லூரிகளின் கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டடக் கட்டமைப்புப் பணிகள் 200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். மேலும், ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்புடன் பொறியியல், பலவகை டுதாழில்நுட்பம், கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் 173 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை (Poly Technic) தொழில்துறை 4.0 தரத்திற்கு உயர்த்திட 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.35 · ¶71 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Chennai International Book Fair · 2023-24
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years