Education · completed claimed

Cash incentives to school students

10 budgets named it 15 year span 4,893 ₹ crore allocated 50 ₹ crore whole-project cost AIADMK / TVK governments

First announced in 2012-13 and named again in 9 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2012-13 Rs.366.70 crores continuation AIADMK

“In the current year, Rs.313.13 crores has been invested in the names of students and in the coming financial year, a sum of Rs.366.70 crores has been provided in the Budget in order to benefit 21.36 lakh students.”
“மேல்‌ வகுப்புகளில்‌ படிக்கும்‌ குழந்தைகள்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, அரசு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 10, 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புகளில்‌ படிக்கும்‌ அனைத்து மாணவ மாணவியருக்கும்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ முன்னோடித்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 10 மற்றும்‌ 1 ஆம்‌ வகுப்பு படிப்பவர்களுக்கு தலா 1,500 ரூபாயும்‌, 12-ஆம்‌ வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும்‌ அரசு நிதி நிறுவனத்தில்‌ வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த பின்‌ வட்டியுடன்‌ வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய்‌, மாணவர்கள்‌ பெயரில்‌ வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌ 21.36 லட்சம்‌ மாணவ மாணவியர்‌ பயனடையும்‌ வகையில்‌ இத்திட்டத்திற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 366.70 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.58 · ¶91 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.381 crores transfer scheme AIADMK

“the Government is giving special cash incentives to students studying in the 10th, 11th and 12th standards and 24.76 lakh students will receive a cash benefit of Rs.381 crores during the year 2013-2014.”
“அனைத்துத்‌ துறைகளிலும்‌ மிக உயர்ந்த ஒதுக்கீடாக பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கு, 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 16,965.30 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம்‌ ஆண்டு குழந்தைகளுக்கு இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி அளிப்பதற்கான சட்ட விதிகளை அரசிதழில்‌ வெளியிட்ட முதல்‌ மாநிலங்களுள்‌ தமிழகமும்‌ ஒன்றாகும்‌. கல்வி கற்பதற்கான உரிமைக்‌ குறியீடுகளை எய்துவதில்‌, குறிப்பாக, மொத்தப்‌ பள்ளிச்‌ சேர்க்கை மற்றும்‌ இடைநிற்றல்‌ அளவுகளில்‌, மிகச்‌ சிறப்பாகக்‌ கருதப்படும்‌ மாநிலங்களுள்‌ தமிழகமும்‌ ஒன்று என்பதை இந்த மாமன்றத்திற்குத்‌ தெரிவிப்பதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. 2011 ஆம்‌ ஆண்டு, இந்த அரசு நிருவாகப்‌ பொறுப்பேற்ற பின்னர்‌, 51757 ஆசிரியர்களும்‌, 7,275 ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்களும்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்‌. இடைநிற்றலைக்‌ குறைத்து மேல்நிலைப்‌ பள்ளி அளவில்‌ மாணவர்கள்‌ தக்கவைப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக 10, 11, மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்‌ தொகையை இந்த அரசு வழங்கி வருகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டு 381 கோடி ரூபாய்‌ அளவிலான பணப்‌ பயனை 24.76 இலட்சம்‌ மாணவ மாணவியர்கள்‌ பெறுவார்கள்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶102) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.41 · ¶102 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.34.26 crores continuation AIADMK

“Rs.34.26 crores has been provided for special incentives for girl students.”
“இந்த அரசு, முழு அதிகாரம்‌ பெற்றவர்களாக பெண்கள்‌ திகழ்வதை உறுதி செய்யும்‌. டாக்டர்‌ முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்‌ திட்டம்‌, பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்கள்‌, விதவைகள்‌ மற்றும்‌ கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்‌ தொகைத்‌ திட்டம்‌, பெண்குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌, தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌, பெண்‌ குழந்தைகளுக்கான சிறப்பு ஊக்க உதவித்‌ தொகை போன்ற திட்டங்களில்‌ வழங்கப்படும்‌ நிதியுதவியை கணிசமான அளவில்‌ உயர்த்தி, இந்த அரசு புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விலையில்லாக்‌ கறவைப்‌ பசுக்கள்‌, செம்மறி ஆடுகள்‌ மற்றும்‌ வெள்ளாடுகள்‌ வழங்கும்‌ திட்டத்தில்‌ பயன்‌ பெறும்‌ அனைத்து பயனாளிகளும்‌ பெண்களே என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்‌. திருமாங்கல்யத்திற்காக, நான்கு கிராம்‌ தங்கக்‌ காசோடு, உயர்த்தப்பட்ட திருமண உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டத்திற்காக 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 750 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்புத்‌ திட்டத்திற்காக 105 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது. பெண்‌ குழந்தைகளுக்கான சிறப்பு நிதியுதவிக்காக 34.26 கோடி ரூபாய்‌ அளிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.56 · ¶137 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.381 crore continuation AIADMK

“In the Budget Estimates 2014-2015 also, Rs.381 crore has been allocated for this scheme.”
“மாணவ மாணவியர்கள்‌ தொடர்ந்து உயர்நிலைக்‌ கல்வி பயில ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 10, 14 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்‌ தொகை அளிப்பது, இந்த அரசின்‌ மற்றுமொரு திட்டமாகும்‌. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, 381 கோடி ரூபாய்‌ செலவில்‌ 23.21 இலட்சம்‌ மாணவ மாணவியர்கள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்திலும்‌, இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்‌ தொடர்ந்து மேல்நிலை பள்ளிக்‌ கல்வி பயிலுவது ஊக்குவிக்கப்படுவதால்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ முறையே 8.38 இலட்சமாகவும்‌ 7.16 இலட்சமாகவும்‌ இருந்த, 10, 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்களின்‌ எண்ணிக்கை, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ முறையே 11.4 இலட்சமாகவும்‌, 8.4 இலட்சமாகவும்‌ உயர்ந்துள்ளது. உயர்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.52 · ¶104 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.55.11 crore continuation AIADMK

“A sum of Rs.55.11 crore has been provided in the Budget Estimates 2014-2015 for this scheme.”
“பெண்‌ குழந்தைகளின்‌ பள்ளிச்‌ சேர்க்கையை உயர்த்தி இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மூன்றாம்‌ வகுப்பிலிருந்து ஐந்தாம்‌ வகுப்புவரை பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவியர்களுக்கு ஆண்டுதோறும்‌ 500 ரூபாயும்‌, ஆறாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவியருக்கு 1000 ரூபாயும்‌ இந்த அரசு அளித்து வருகிறது. 2013-2014 ஆம்‌ கல்வி ஆண்டிலிருந்து, ஏழாம்‌, எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியின மாணவியர்களுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுதோறும்‌ 1,500 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 55.11 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.59 · ¶118 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.381 crores continuation AIADMK

“In the Budget Estimates Rs.381 crores has been allocated for this scheme.”
“பள்ளிக்‌ கல்வியின்‌ தரத்தை உயர்த்துவதற்கு இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக கூடுதல்‌ ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால்‌ 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌, முறையே தொடக்கநிலை மற்றும்‌ உயர்நிலையில்‌ 1 : 29 மற்றும்‌ 1: 35 ஆக இருந்த ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டு முறையே 1 : 25 மற்றும்‌ 1: 22 எனக்‌ குறைந்துள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 10, 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவ மாணவியர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக சிறப்பு உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை 88.59 இலட்சம்‌ மாணவ மாணவியர்களுக்கு 1429.09 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.54 · ¶93 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.55.11 crores continuation AIADMK

“The scheme to give incentive to girl children, to reduce dropouts up to 8th standard, will continue with an allocation of Rs.55.11 crores for 2015-2016.”

financedept_2015-16_speech_en · p.63 · ¶111 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,744.38 crores completion claim AIADMK · interim

“The Hon’ble Chief Minister has introduced the Special Cash Incentive Scheme to reduce dropouts at secondary level and a sum of Rs.1,744.38 crores has been spent for this scheme since May 2011.”
“இடைநிலைக்‌ கல்வியில்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சிறப்பு ஊக்கத்தொகைத்‌ திட்டத்தை அறிமுகம்‌ செய்துள்ளார்கள்‌. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 1744.38 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டதன்‌ விளைவாக, 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 86.26 சதவீதமாக இருந்த மேல்நிலைக்‌ கல்வி நிறைவு செய்தவர்‌ விகிதம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 94.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. தரமான கல்விக்கு முக்கியத்துவம்‌ அளிக்கும்‌ வகையில்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, இந்த அரசு மடிக்‌ கணினிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, கல்வி உபகரணங்கள்‌, நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌, காலணிகள்‌, புத்தகப்‌ பைகள்‌, பேருந்து கட்டணச்‌ சலுகைகள்‌, மிதிவண்டிகள்‌ போன்றவற்றை 12,475 கோடி ரூபாய்‌ செலவில்‌ மாணவ மாணவியருக்கு அளித்துள்ளது. இந்த அரசு எடுத்துள்ள இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ நாட்டிலேயே மிகச்‌ சிறந்த மாநிலமாக தமிழகத்தை விளங்கச்‌ செய்யும்‌ என நம்புகிறேன்‌. உயர்கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.51 · ¶79 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.381 crores continuation AIADMK · revised

“In the Revised Budget Estimates, Rs.381 crores has been allocated for special cash incentive scheme.”
“அரசு மேற்கொண்ட இம்முயற்சிகளின்‌ விளைவாக, இடைநிற்றல்‌ விகிதம்‌ தொடக்க நிலையில்‌ 0.90 அளவாகவும்‌, நடுநிலையில்‌ 1.55 அளவாகவும்‌, இடைநிலையில்‌ 3.76 அளவாகவும்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ குறைந்துள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்புகளில்‌ மாணவிகளின்‌ இடைநிற்றலை மேலும்‌ குறைக்கும்‌ பொருட்டு, சிறப்பு ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்திற்காக, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 381 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶121) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.59 · ¶121 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2016-17 Rs.55.11 crores continuation AIADMK · revised

“For improving the enrolment rate of girl students belonging to Scheduled Castes and Scheduled Tribes, a sum of Rs.55.11 crores has been allocated to provide incentives to enrol girl children in schools during 2016-2017.”
“ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினப்‌ பெண்‌ குழந்தைகளின்‌ பள்ளிச்‌ சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும்‌ நோக்குடன்‌, பள்ளிகளில்‌ பயிலும்‌ பெண்‌ குழந்தைகளுக்கு ஊக்க உதவித்‌ தொகை வழங்குவதற்காக 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 55.11 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகைத்‌ திட்டத்தை தனியார்‌ சுயநிதிக்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ அனைத்து ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும்‌ நீட்டித்ததன்‌ பலனாக, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 7.76 இலட்சம்‌ மாணவ மாணவியர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ உயர்‌ கல்வி உதவித்‌ தொகைத்‌ திட்டங்களுக்கு முறையே 75.61 கோடி ரூபாயும்‌, 1429.94 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.314 crore transfer scheme AIADMK

“This Government is providing a special cash incentive of Rs.5,000 to all girl students studying in Government and Government aided schools as a measure to reduce dropouts from classes X, XI and XII. In the Budget Estimates 2017-2018, a sum of Rs.314 crore has been provided for the special cash incentive scheme.”
“அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவிகளின்‌ பள்ளி இடைநிற்றலைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, சிறப்பு ஊக்கத்தொகையாக மாணவியர்‌ ஒவ்வொருவருக்கும்‌ 5,000 ரூபாய்‌ இந்த அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும்‌ திட்டத்திற்காக 2017-2018 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 314 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.63 · ¶113 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.55 crore continuation AIADMK

“To encourage the enrolment of girls in schools, this Government has provided incentives to 4.92 lakh girl students belonging to Scheduled Castes and Scheduled Tribes during 2016-2017 and accordingly Rs.55 crore has been allocated for this scheme in 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.66 · ¶121 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.313.58 crore transfer scheme AIADMK

“a special cash incentive of Rs.5,000 is being extended to all students studying in Government and Government aided schools. An amount of Rs.313.58 crore has been allocated in this Budget for this purpose.”
“அனைத்து குழந்தைகளுக்கும்‌ தரமான கல்வி அளிக்க வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌, மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள்‌, புத்தகப்‌ பைகள்‌, காலணிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ வடிவியல்‌ பெட்டிகள்‌ உள்ளிட்ட கல்வி உபகரணங்கள்‌, மிதிவண்டிகள்‌ மற்றும்‌ பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல்‌ தொடர்ந்து வழங்கி வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம்‌ 1,653.89 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவ, மாணவிகளின்‌ பள்ளி இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்‌ தலா 5,000 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 313.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.61 · ¶104 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.313.58 crore continuation AIADMK

“The Government will continue to provide special cash incentive of Rs.5,000 per student to all students studying in Government and Government aided schools in 10th, 11th and 12th standards to prevent their dropping out. An amount of Rs.313.58 crore has been allocated in this Budget for this purpose.”
“புத்தகப்‌ பைகள்‌, காலணிகள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, வடிவியல்‌ பெட்டிகள்‌ உட்பட, மாணவர்களுக்கு விலையில்லாமல்‌ வழங்கும்‌ நலத்‌ திட்டங்கள்‌ தொடர்ந்து சிறப்பாகச்‌ செயல்படுத்தப்படும்‌. இதற்காக, 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1,656.90 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்கு, பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ அனைத்து மாணவ மாணவியருக்கும்‌ 5,000 ரூபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்‌. இதற்காக, வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 313.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்திற்காக வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1362.27 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்‌ பள்ளிகளுக்குப்‌ போதுமான உட்கட்டமைப்பை வழங்குவதற்காக, நபார்டு வங்கியின்‌ கடனுதவியுடன்‌, 381.31 கோடி ரூபாய்‌ செலவில்‌ வகுப்பறைகள்‌ கட்டுதல்‌, ஆய்வகங்கள்‌, கழிப்பறைகள்‌ மற்றும்‌ பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶77) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.45 · ¶77 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.48.70 crore continuation AIADMK

“The scheme of providing cash incentives to girl children from class III to VIII for encouraging their school enrolment will be continued this year with a budget allocation of Rs.48.70 crore.”
“பெண்‌ குழந்தைகளின்‌ சேர்க்கையினை 3 முதல்‌ 8 வரை உள்ள வகுப்புகளில்‌ ஊக்கப்படுத்தும்‌ வகையில்‌ ரொக்கப்‌ பரிசு ஊக்கத்தொகை வழங்கும்‌ திட்டம்‌ 48.70 கோடி ரூபாய்‌ வரவு-செலவுத்‌ திட்ட ஒதுக்கீட்டுடன்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்‌ வழங்குவதற்கு 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 7101 கோடி ரூபாய்‌ சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்புத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ஆதி திராவிடர்‌ குடியிருப்புகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, நடப்பு ஆண்டில்‌ தொடங்கப்பட்ட நடவடிக்கைகளைத்‌ தொடர்வதற்காக, 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளிலும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.70 · ¶126 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.49.60 crore continuation project cost AIADMK

“The Special Incentive scheme for girls students continues to be implemented at a cost of Rs.49.60 crore.”
“ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மக்கள்‌ நிலைக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதையும்‌, அவர்களுக்கு சமூகநீதியை உறுதிசெய்வதும்‌ இந்த அரசின்‌ முதன்மையான நோக்கமாகும்‌. கல்வியறிவே, மக்கள்‌ தங்கள்‌ வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்திக்‌ கொள்வதற்கான மிகச்‌ சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித்‌ தரும்‌. எனவே, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, ஆதி திராவிடர்‌ முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4,109.53 கோடி ரூபாய்‌ மொத்த நிதியில்‌, 2,018.24 கோடி ரூபாய்‌ அவர்களின்‌ கல்வித்‌ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும்‌ பழங்குடியின மாணவிகளுக்கான “பெண்‌ கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத்‌ திட்டம்‌” 49.60 கோடி ரூபாய்‌ செலவில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்‌ கீழ்‌, மாநில அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தொகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாய்‌ எட்டியுள்ள நிலையில்‌, மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு அளிக்கப்படும்‌ தொகை கணிசமாகக்‌ குறைந்துள்ளது. ஏனைய திட்டங்களைப்‌ போன்று உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திலும்‌ மத்திய மாநில அரசுகள்‌ 60:40 என்ற விகிதத்தில்‌ செலவினை ஏற்க வேண்டும்‌ என மாநில அரசு மத்திய அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளது. மாநில அரசின்‌ தளராத முயற்சிகளின்‌ பலனாக, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களில்‌ சேர்ந்துள்ள மாணவர்கள்‌ கல்வி உதவித்தொகை பெறுவதில்‌, மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள்‌ மாற்றப்பட்டு விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்யப்பட்டுள்ளதால்‌, மேலும்‌ பல மாணவர்கள்‌ உயர்கல்வி ஊக்கத்தொகையைப்‌ பெறுவதற்கு தகுதியுடையவர்‌ ஆவர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1949.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶164) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.90 · ¶164 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.13.41 crore transfer scheme TVK · revised

“Rs.13.41 crore as incentive to girl students to prevent dropout from education.”
“தந்தை பெரியாரை கொள்கைத்‌ தலைவராக ஏற்றவர்‌ நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌. சமூகநீதி என்று சொல்லி ஏமாற்றுபவர்‌ அல்ல நம்‌ தலைவர்‌. சமூகநீதியை உணர்வுபூர்வமாக ஏற்றவர்‌. அதனால்தான்‌ அவரின்‌ தலைமையிலான நமது அரசானது, தமிழ்நாட்டில்‌ சமூகந்தியைக்‌ காப்பதில்‌ உறுதியுடன்‌ உள்ளது. தமிழ்நாட்டின்‌ 69 சதவித இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும்‌ இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபின்‌ மாணவர்கள்‌, பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி கொடர்ந்திட, 372 கோடி ரூபாய்‌ பள்ளிப்படிப்பு மற்றும்‌ பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காகவும்‌, 77 கோடி ரூபாய்‌ 7.5 சதவித இடஒதுக்கீட்டின்‌ கீழ்‌ மருத்துவம்‌ மற்றும்‌ பல்‌ மருத்துவம்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்விக்‌ கட்டணத்திற்கும்‌,13.441கோடி ரூபாய்‌ கல்வி இடைநிற்றலைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும்‌ ஊக்கத்தொகைக்காகவும்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.25 · ¶43 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector