Transport · dormant

Chennai Mono Rail Project

3 budgets named it 4 year span 200 ₹ crore allocated 8,500 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2014-15. Places named: Chennai, Porur, Vadapalani, Valasaravakkam, Puzhal.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“The Government of Tamil Nadu has initiated steps for the implementation of the Mono Rail Project.”
“நகர்ப்புர மக்கள்‌ தொகையின்‌ மிக வேகமான வளர்ச்சி நகர்புர போக்குவரத்தில்‌ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப்‌ பெருநகரப்‌ பகுதி அடுத்த பத்து ஆண்டுகளில்‌ ஒரு கோடி மக்கட்தொகை கொண்ட மிகப்பெரும்‌ நகரமாக வளரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னையில்‌ ஒருங்கிணைந்த நகர்ப்புர போக்குவரத்து முறையினை மேம்படுத்துவதற்கான அவசியம்‌ ஏற்பட்டுள்ளது. மேதகு ஆளுநர்‌ உரையில்‌ ஏற்கெனவே அறிவித்தவாறு சென்னை நகரில்‌ தற்போதுள்ள பொது போக்குவரத்துடன்‌ மெட்ரோ இரயில்‌ திட்டத்தினை ஒருங்கிணைத்தல்‌, சென்னையில்‌ பல பகுதிகளை ஒருங்கிணைக்கக்‌ கூடிய விரிவான மோனோ இரயில்‌ அமைப்பினை நிறுவுதல்‌ வாயிலாக ஓர்‌ ஒருங்கிணைந்த பன்முறை நகரப்‌ போக்குவரத்து வசதி (multi modal transport system) ஏற்படுத்தப்படும்‌. மோனோ இரயில்‌ திட்டத்தினைச்‌ செயற்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளைத்‌ தொடங்கியுள்ளது. இதற்கான ஆய்வுப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை விரைவில்‌ தொடங்குவதற்குத்‌ தேவையான நிதி ஆதாரம்‌ இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும்‌. ஆதிதிராவிடர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.70 · ¶120 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.8,500 crores new project project cost AIADMK

“Global bids have been invited for implementing Phase I of the Chennai Mono Rail Project. The first phase, estimated at a cost of Rs.8,500 crores, will cover 57 km, consisting of three sectors – Vandalur to Velacheri via Tambaram East; Poonamallee to Kathipara via Porur; and Poonamallee to Vadapalani via Valsaravakkam. This project will be implemented through the Design, Build, Finance, Operate and Transfer (DBFOT) model. This will be followed by Phase-II covering 54 km of the fourth corridor connecting Vandalur and Puzhal.”
“சென்னை மோனோ ரயில்‌ திட்டத்தின்‌ முதற்கட்டப்‌ பணிகளை செயல்படுத்துவதற்காக, சர்வதேச ஒப்பந்தப்‌ புள்ளிகள்‌ கோரப்பட்டுள்ளன. 8,500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, 57 கி.மீ. நீளத்தில்‌ அமைக்கப்ப உள்ள இத்திட்டம்‌, கிழக்குத்‌ தாம்பரம்‌ வழியாக வண்டலூரிலிருந்து வேளச்சேரி வரையிலும்‌, போரூர்‌ வழியாக பூந்தமல்லியிலிருந்து கத்திப்பாரா வரையிலும்‌, வளசரவாக்கம்‌ வழியாக பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரையிலும்‌ செல்லக்கூடிய மூன்று வழித்‌ தடங்கள்‌ கொண்டதாக இருக்கும்‌. திட்டத்தை வடிவமைத்து, நிறைவேற்றி, நிதி திரட்டி, பராமரித்து ஒப்படைக்கும்‌ முறையின்‌ கீழ்‌ (DBFOT) இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இதன்‌ அடுத்த கட்டமாக, வண்டலூரையும்‌, புழலையும்‌ இணைக்கக்கூடிய 54 கி.மீ. நீளமுள்ள நான்காவது வழித்தடம்‌ செயல்படுத்தப்படும்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டப்‌ பணிகளும்‌ மிகவேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 750 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலை, ஈ.வே.ரா. பெரியார்‌ சாலை ஆகிய வழித்தடங்களில்‌ பொதுமக்கள்‌ அதிக அளவில்‌ பொதுப்‌ போக்குவரத்து வசதிகளைப்‌ பயன்படுத்தும்‌ வாய்ப்பை உயர்த்தும்‌ நோக்குடன்‌, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்த (Transit Oriented Development) இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.43 · ¶68 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.200 crore continuation AIADMK

“the Mono Rail project has been restructured to make it more viable. The bid process is in progress and Rs.200 crore has been provided for this purpose in the Budget Estimates 2014-2015.”
“சென்னை மாநகரத்தில்‌ பன்முறை போக்குவரத்து அமைப்பு (Multi Modal Transport System) நிறுவப்படும்‌ என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, மோனோ இரயில்‌ திட்டம்‌, செயல்படுத்தத்‌ தக்க முறையில்‌ திருத்தி அமைக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின்‌ பேருந்துப்‌ போக்குவரத்தின்‌ திறனை உயர்த்தவும்‌, அதை பொதுமக்கள்‌ எளிதாகப்‌ பயன்படுத்த ஏதுவாகவும்‌, ஜி.பி.எஸ்‌. வசதியுடன்‌ கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல்‌ அமைப்பு முறை செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்துப்‌ பேருந்துகளின்‌ தடம்‌ அறிந்து, பேருந்து நிறுத்தங்களில்‌ தகவல்‌ அளிப்பதற்காக அனைத்து மாநகரப்‌ பேருந்துகளிலும்‌ ஜி.பி.எஸ்‌. கருவிகள்‌ பொருத்தப்படும்‌. முதல்‌ கட்டமாக, 500 பேருந்து நிறுத்தங்களை இணைத்து, தட வரைபடங்கள்‌, வரவிருக்கும்‌ பேருந்து பற்றிய தகவல்களும்‌ இதர வசதிகளும்‌ கொண்ட பொதுத்‌ தகவல்‌ முறை அமைக்கப்படும்‌. படிப்படியாக மாநகரத்தில்‌ உள்ள அனைத்துப்‌ பேருந்து நிறுத்தங்களுக்கும்‌ இது விரிவுபடுத்தப்படும்‌. தொழில்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.31 · ¶61 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector